Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒட்டுமொத்த உலகையும் புரட்டி போட்ட நாள்.. இரட்டை கோபுர தாக்குதல்.. அமெரிக்கா கோட்டைவிட்டது எப்படி?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க வரலாற்றில் கறுப்பு நாள் என்றால் அது சந்தேகமே இல்லாமல் இரட்டை கோபுர தாக்குதல் நடந்த செப்.11ம் தேதி தான் என்பதைச் சந்தேகம் இல்லாமல் சொல்லலாம். கடந்த 2001இல் நடந்த இந்த இரட்டை கோபுர தாக்குதல் ஒட்டுமொத்த உலகையும் மொத்தமாகப் புரட்டிப் போட்டது. அன்று அமெரிக்காவில் என்ன நடந்தது.. இந்தத் தாக்குதல் உலகளவில் ஏற்படுத்திய மாற்றங்கள் என்ன என்பதை நாம் பார்க்கலாம்.

உலக வல்லரசாகக் கருதப்படும் அமெரிக்காவுக்குள் ஈஸியாக வந்து, அமெரிக்காவுக்குச் சொந்தமான விமானங்களையே கடத்தி அதை இரட்டை கோபுரங்கள் உள்ளிட்ட முக்கிய கட்டிடங்களில் பயங்கரவாதிகள் மோதினர்.

twin tower attack usa

அமெரிக்க பாதுகாப்புத் துறையின் மிகப் பெரிய தோல்வியாக இது பார்க்கப்படும் நிலையில், இதில் சுமார் 3000 பேர் வரை உயிரிழந்து இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.

இரட்டை கோபுர தாக்குதல்: அன்றைய தினம் காலை வரை நியூயார்க் நகருக்கு அது வழக்கமான காலை நேரமாகவே இருந்தது. ஆனால், காலை 8 மணியளவில் அது மாற தொடங்கியது. முதலில் விமானம் கடத்தப்பட்டதாகவே தகவல் வெளியானது. ஒரு விமானம் மட்டும் கடத்தப்பட்டு இருக்கும் என்று நினைத்த நிலையில், அடுத்தடுத்து 4 விமானங்கள் கடத்தப்பட்டது தெரிய வந்தது. தங்களிடம் வெடிகுண்டு இருப்பதாகக் கூறி விமானத்தைக் கடத்திய பயங்கரவாதிகள் மிகப் பெரிய திட்டத்தைப் போட்டு இருந்தனர்.

விமானம் கடத்தப்பட்டுக் கொஞ்ச நேரத்தில் முதலாவது விமானம் இரட்டை கோபுரத்தின் வடக்கு டவரில் மோதியது. சில நிமிடங்களில் அது தெற்கு டவரில் மோதிய நிலையில், அடுத்த விமானம் அமெரிக்க ராணுவ தலைமையிடமான பென்டகனில் மோதியது. நான்காவது விமானம் வெள்ளை மாளிகையை நோக்கிச் சென்ற நிலையில், எதிர்பாராத விதமாக அது பாதியிலேயே விழுந்தது. இதனால் வெள்ளை மாளிகை தப்பித்தது. அமெரிக்க வரலாற்றில் மோசமான நாளான இது பல விவகாரங்களில் அமெரிக்காவை மொத்தமாக மாற்றிவிட்டது என்றே சொல்லலாம்.

அமெரிக்காவின் பார்வை: அமெரிக்காவில் கடந்த 2001 செப். 11ம் தேதி நடந்த இந்த இரட்டை கோபுர தாக்குதல் என்பது உலக அளவில் இனக்குழுக்கள், தீவிரவாத குழுக்கள் மீதான அமெரிக்காவின் பார்வை முழுமையாக மாறியது. குறிப்பாகத் தேசியப் பாதுகாப்பு, சர்வதேச பாலிசி எனப் பல விவகாரங்களில் அமெரிக்காவின் பார்வையை மொத்தமாக மாற்றியது.

இரட்டை கோபுர தாக்குதலுக்கு முன்பு வரை பயங்கரவாதம் என்பது அமெரிக்காவில் இருந்தது இல்லை. அதை ஏதோ வெளிநாட்டுப் பிரச்சினையாகப் பார்த்தனர். ஆனால் அமெரிக்க மண்ணில் நடந்த இந்தத் தாக்குதல் பயங்கரவாதம் குறித்த பார்வையையே மாற்றிவிட்டது.

அமெரிக்காவில் நடந்த மாற்றங்கள்: இந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு தான் அமெரிக்க அரசு உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை என்பதை உருவாக்கவே செய்தது. அதற்கு முன்பு வரை உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு எந்தவொரு சிக்கலும் வந்தது இல்லை என்பதால் அப்படியொரு துறையை உருவாக்குவது குறித்துக் கூட அவர்கள் யோசிக்கவில்லை. அதன் பிறகே அமெரிக்கத் தனியாக USA PATRIOT என்ற சட்டத்தையும் கொண்டு வந்தது. இது தனது குடிமக்களையே கண்காணிக்கும் உரிமையையும் அமெரிக்க அரசு கொடுத்தது.

இந்தத் தாக்குதலுக்குப் பின்னரே அமெரிக்கா GWOT எனப்படும் பயங்கரவாதத்தின் மீதான உலகளாவிய போரைத் தொடங்கியது. ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீதான ராணுவ நடவடிக்கைகளை எடுத்தனர். இதன் பின்னரே வெளிநாட்டில் உள்ள பயங்கரவாதியைக் குறிவைத்து நடத்தும் தாக்குதல்கள், ட்ரோன் தாக்குதல்கள் அடிக்கடி நடக்கத் தொடங்கியது.

மேலும், இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின்னரே மக்களின் பார்வையும் கணிசமாக மாறியது. ராணுவத்திற்கு ஒதுக்கப்படும் நிதி அதிகரித்தது. மேலும், அதற்கு முன்பு வரை ராணுவம் என்பது பழங்காலத்து முறையிலேயே இயங்கி வந்தது. கவுன்ட்டர் டெரரிஸம் உள்ளிட்ட பயங்கரவாத எதிர்ப்பில் ராணுவம் தீவிரமாக இறங்கியது இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின்பு தான். சர்வதேச அளவிலும் கூட பல உலக நாடுகள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டியது இதன் பிறகு தான்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+