"50 வருட பழையது!" இப்போ வீட்டில் வசிப்போருக்கு 50 ஆண்டுக்கு முன் லெட்டர் போட்ட மர்மம்! என்ன இருந்தது
வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் தனக்கு வந்த கடிதத்தைப் பார்த்து ஒரு நொடி ஸ்டன் ஆகிவிட்டார். ஏனென்றால் அந்த கடிதம் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பப்பட்டதாம்.
இந்த இணைய உலகில் நாம் இன்ஸ்டன்டாகவே மெசேஞ் அனுப்பி வருகிறோம். மெசேஞ் அனுப்பி நொடிகளில் ரிப்ளை வரவில்லை என்றால் கூட இப்போதுள்ள இளைஞர்கள் பதறிவிடுவார்கள்.

ஆனால், மொபைல் வருவதற்கு முன்பு எல்லாம் கடித போக்குவரத்து தான் பிரதானம். காதல் முதல் வேலை வரை அனைத்து தகவல்களும் கடிதம் மூலமே நமக்குக் கிடைக்கும். அந்தளவுக்குக் கடிதங்கள் அப்போது முக்கியமானதாக இருந்தன.
கடிதம்: இப்போது இருக்கும் இளைஞர்களுக்கு அதன் கடிதங்களின் சிறப்பு புரியாது. அதேநேரம் கடித முறையில் சில சிக்கல்களும் இருக்கிறது. பல நேரங்களில் இவை உரிய நேரத்தில் சென்று சேராது. பல நாட்கள் கூட தாமதமாகும். இதற்கிடையே அப்படிதான் இங்கே தபால் மூலம் வந்த கடிதத்தைப் பார்த்து ஒருவர் அதிர்ந்துவிட்டார். தபால் மூலம் கடிதம் வருவதெல்லாம் ஒரு விஷயமா எனக் கேட்காதீர்கள்.. ஏனென்றால் இந்த தபால் அனுப்பி 50 ஆண்டுகள் ஆகிவிட்டதாம். 50 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் ஒரு வழியாக இது டெலிவரி ஆகியுள்ளது.
1969ஆம் ஆண்டில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலிருந்து இருந்து இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சுமார் 53 ஆண்டுகள் பயணித்த இந்த கடிதம் ஒருவழியாக இப்போது பெறுநரிடம் சென்று சேர்ந்துள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் அந்த பெண் இந்தக் கடிதத்தைப் பார்த்தவுடன் ஷாக் ஆகிவிட்டராம்.
சரியான அட்ரஸ்: கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது போஸ்ட் பாக்ஸில் இந்த கடிதம் இருந்துள்ளது. முதலில் யாரோ இந்த கடிதத்தை இடத்தை மாற்றி டெலவரி செய்துவிட்டார்கள் என்றே இவர் நினைத்துள்ளார். இருப்பினும், அதன் பிறகு அந்த போஸ்ட் கார்டில் இருக்கும் தகவல்களைப் பார்த்த போது தான் அவர் அதிர்ந்துவிட்டார்.
சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் அனுப்பப்பட்ட இந்த கடிதம் குறித்த தகவல்களைப் பகிர்ந்த அவர், இந்த விவகாரத்தில் தனக்கு உதவுமாறும் கோரிக்கை வைத்துள்ளார்.
மர்மம்: இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், "பல ஆண்டுகள் கழித்து இந்த கடிதம் எப்படி எனது வீட்டிற்கு வந்து சேர்ந்தது என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.. இந்தக் கடிதத்தை யார் அனுப்பினார்கள்... எப்படி இத்தனை காலம் கழித்து இங்கே வந்துள்ளது என்பதை நான் தெரிந்து கொள்ள ரொம்பவே ஆர்வமாக இருக்கிறேன். இதில் திரு மற்றும் திருமதி ரெனே காக்னோன் அல்லது தற்போது அங்கு வசிப்பவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது முதலில் மார்ச் 15, 1969இல், பாரிஸில் போஸ்ட்மார்க் செய்யப்பட்டது..
இருப்பினும், இது இலக்கை அடைய 54 ஆண்டுகள் எடுத்துக் கொண்டிருக்கிறது. அதேநேரம் இதில் மற்றொரு போஸ்ட்மார்க் இருக்கிறது. அது ஜூலை 12, 2023இல், புளோரிடாவில் உள்ள டல்லாஹஸ்ஸியில் போஸ்ட்மார்க் ஆகியிருக்கிறது. மேலும், இந்த புதிய போஸ்ட் மார்கும் "அங்கு தற்போது வசிப்பவர்" என்ற வாசகத்தை யாராவது புதிதாக இணைத்திருக்கலாம். மேலும், பாரிஸில் இருந்த இந்த போர்ஸ்ட் கார்ட் இப்போது அமெரிக்காவுக்கு எப்படி வந்தது என்ற மர்மத்தையும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்" என பதிவிட்டுள்ளார்.
என்ன இருந்தது: சரியாக தற்போதைய ஓனர் என்று அனுப்பப்பட்ட அந்த கடிதத்தில் அப்படி என்ன தான் இருந்தது எனக் கேட்கிறீர்களா.. 50 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட அந்தக் கடிதத்தில், "நண்பர்களே..! நீங்கள் இந்தக் கடிதத்தைப் பெறும் போது நான் வீட்டிற்குக் கடைசியாக வந்து ரொம்ப காலம் ஆகியிருக்கும்.. ஈஃபிள் டவரில் இருந்து இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.இதுதான் சரியான நேரம் என்று தோன்றியதால் இப்போது இதை அனுப்புகிறேன்.. இங்கு நான் என்ஜாய் செய்ய வருகிறேன்" என்று அதில் எழுதியுள்ளார்.












Click it and Unblock the Notifications