சைலண்டாக நுழைந்த எலி! அடுத்து நடந்த மிக பெரிய பிரச்சினை.. பதறிய அதிகாரிகள்.. அட கடவுளே முடியல

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் திடீரென மிகப் பெரிய மின் தடை ஏற்பட்ட நிலையில், அதற்கான காரணம் குறித்துப் பரபர தகவல் வெளியாகி உள்ளது.

நம்ம ஊரில் மின்தடை என்பது ஒரு காலத்தில் அடிக்கடி ஏற்படும் நிகழ்வாகவே இருந்தது. கடந்த ஆண்டு கூட புதிய அரசு அமைந்ததும் மின் தடை அவ்வப்போது ஏற்படத் தொடங்கியது.

இது பொதுமக்களிடையே கடும் அதிருப்தி ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜியே செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்திருந்தார்.

 மின்வெட்டு

மின்வெட்டு

அதாவது அணில் காரணமாகவே அடிக்கடி மின் தடை ஏற்படுவதாக அவர் கூறியிருந்தார். அது உண்மை என்றாலும் கூட அப்போது இணையதளங்களில் இது பெரும் விவாத பொருளாக மாறியது. இந்தச் சூழலில் இப்போது அமெரிக்காவில் வெறும் ஒற்றை எலியால் மிகப் பெரிய மின் தடை ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக சுமார் 1500க்கும் மேற்பட்ட வீடுகள் அங்கு ஒரே நேரத்தில் இருளில் மூழ்கியுள்ளது. இதனால் அங்குக் குழப்பமான சூழலே ஏற்பட்டது.

 இருளில் மூழ்கியது

இருளில் மூழ்கியது

சில மணி நேரம் வரை இதனால் அந்த வீடுகள் இருளில் மூழ்கின. முதலில் எதோ பெரிய பிரச்சினை காரணமாகவே இவ்வளவு பெரிய மின் தடை ஏற்பட்டதாக பலரும் நினைத்தனர். குறிப்பாக, பெரிய புயல் அல்லது சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்பே இந்த மின்தடையை ஏற்படுத்தி இருக்கலாம் எனப் பலரும் அஞ்சினர். ஆனால், பின்னர் தான் இதற்கான காரணத்தை அந்நாட்டு ஊடகம் ஒன்று வெளியிட்டது.

எலி

எலி

அதாவது மிக முக்கிய மின்சாதனங்கள் இருக்கும் இடத்தில் ஊடுருவிய எலி, அங்குள்ள அதிமுக்கிய சாதனம் ஒன்றைச் சேதப்படுத்தி உள்ளது. இதுவே ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய மின்தடையை ஏற்படுத்தி உள்ளது. நல்வாய்ப்பாக அது பெரியளவில் சேதப்படுத்தவில்லை. இதை உடனடியாக கண்டுபிடித்த மின் ஊழியர்கள், விரைந்து செயல்பட்டு அதைச் சரி செய்துவிட்டனர்.

எப்படி

எப்படி

நம்ம ஊரில் மட்டுமின்றி மரங்கள் மற்றும் கிளைகள் மின் கம்பிகளைத் தாக்குவது மின்சாரம் துண்டிக்கப்பட முக்கிய காரணம் உள்ளது. அதேநேரம் அணில் மற்றும் எலிகளும் கூட பல நேரங்களில் மின் தடையை ஏற்படுத்துகிறது. கடந்த மாதம் இதே விர்ஜீனியாவில் துணை மின்நிலையத்தில் ஒரு அணில் ஏறியதில் 10,000க்கும் மேற்பட்டோர் இருளில் மூழ்கினர். அதுவும் சில மணி நேரத்தில் சரி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விலங்குகள்

விலங்குகள்

விலங்குகள் மூலம் ஏற்படும் மின் தடைகளில் அணில்கள் தான் முக்கிய காரணமாகும். அடுத்து ரக்கூன்கள் மற்றும் பறவைகள் காரணமாகவும் மின் தடைகள் ஏற்படுகின்றன. ஒரு அணில் டிரான்ஸ்பார்மர் மீது ஏறும் போது, ​​அது உயர் மின்னழுத்தக் கோட்டிலிருந்து டிரான்ஸ்பார்மருக்கு செல்லும் கம்பியை ஒரே நேரத்தில் தொட வாய்ப்புள்ளது. இப்படி நடக்கும் போது, திடீரென மின் தடை ஏற்படுகிறது.

பாம்பு

பாம்பு

கடந்த ஜூன் மாதம், ஜப்பானின் ஃபுகுஷிமாவில் ஒரு பாம்பு மிகப் பெரிய மின் தடையை ஏற்படுத்தியது. இதனால் சுமார் 10,000 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டன.. அந்த மின்கம்பியின் மீது பாம்பு சென்றதால் மின்தடை ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்பட்டது. பாம்பின் உடல் வழியாக மின்சாரம் சென்று இந்த மின் தடை ஏற்பட்டதாக வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+