Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாதாரண ஈ தானே என அலட்சியம் வேண்டாம்! ஈ கடித்ததில் 13 ஆண்டுகளை இழந்த பெண்! 2 கால்களும் போச்சு.. பாவம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: விலங்குகள் உள்ளிட்ட மற்ற உயிரினங்கள் நம்மைக் கடிக்கும்போது, அதை நாம் மிகுந்த எச்சரிக்கையாகக் கையாள வேண்டும். அதை அசால்டாக விட்டால் மிக மோசமான பாதிப்பும் ஏற்படும் என்பதை விளக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

கொரோனா இப்போது கட்டுக்குள் வந்துள்ள நிலையில், உலகெங்கும் மக்கள் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றனர். இத்தனை காலம் வீடுகளிலேயே முடங்கியிருந்த மக்கள், மெல்ல வெளியிடங்களுக்கும் செல்ல தொடங்கியுள்ளனர்.

இது வீடுகளிலேயே முடங்கிய இருந்த மக்களுக்கு நல்ல ஒரு புத்துணர்ச்சியை அளித்துள்ளது. இருப்பினும், இதுபோன்ற புதிய இடங்களுக்குச் செல்லும் போது, அங்குள்ள சிறு உயிரினங்கள் கூட நம்மைப் பாதிக்கும் அபாயம் உள்ளது. அப்படியொரு சம்பவம் தான் இங்கு ஒருவருக்கு நடந்துள்ளது.

பூச்சிக் கடி

பூச்சிக் கடி

வெளியே செல்லும் போது, திடீரென எதாவது பூச்சிகள் கடித்தால் அதை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதற்கான நல்ல உதாரணம் இங்கே உள்ளது. பெரும்பாலான எதாவது பூச்சிக் கடிக்கும் போது, அது கடுமையானது பாதிப்பை ஏற்படுத்தாது.. அவை தானாகவே குணமாகும் என்றே பலரும் நினைக்கிறார்கள்... அல்லது அடிப்படை மருந்துகள் மூலம் அவர்களுக்கு சிகிச்சையளிக்க முடியும் என்று அவர்கள் கருதுகிறார்கள். ஆனால் ஜோர்ஜா ஆஸ்டின் என்ற பெண்ணின் வாழ்க்கையையே சிறு பூச்சிக் கடி அப்படியே புரட்டிப் போட்டுவிட்டது.

சாதாரண ஈ

சாதாரண ஈ

13 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண பூச்சி ஒன்று கடித்ததால் இந்த பெண் இப்போது வரை மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறார். இவரை க்நாட் (Gnat) என்ற கொசுவைப் போல இருக்கும் ஒரு சிறிய வகை ஈ ஆகும். இந்த க்நாட் வகை பூச்சிகளில் கடிக்கும் வகையும் இருக்கிறது. கடிக்காத வகையும் இருக்கிறது. பொதுவாக இவை பெரிய கூட்டமாகவே எங்கும் இருக்கும். பல ஆயிரம் க்நாட் ஒன்றாகப் பறந்து மேகங்களைப் போன்ற அமைப்பையும் கூட உருவாகும். இது தொடர்பான வீடியோக்களை நீங்கள் இணையத்திலும் கூட பார்த்திருக்கலாம்.

சிறிய காயம்

சிறிய காயம்

கடந்த 2009இல் தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது, ஜோர்ஜாவை இந்த க்நாட் கடித்துள்ளது... அந்த நேரத்தில், அது ஒரு சாதாரண பூச்சிக் கடி போல் சிவந்து காலில் வீக்கம் மட்டும் இருந்தது. ஆனால், அத்துடன் அது நிற்கவில்லை. சில நாட்களில் கோல்ப் பந்து அளவுக்குக் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இது குணமடைய அதிக காலம் எடுத்துக் கொண்டுள்ளது. முதலில் ஏன் இந்த காயம் குணமடைய இத்தனை காலம் ஆகிறது என ஜோர்ஜா புரியாமல் இருந்துள்ளார். முதலில் தனக்கு இருக்கும் இரும்புச்சத்து குறைபாடு காரணமாகக் காயம் ஆறவில்லை என்று அவர் நினைத்தார். இருப்பினும், காயம் குணமடையாமல் அப்படியே இருந்துள்ளது.

மோசமான தொற்று

மோசமான தொற்று

பின்னர், இது பியோடெர்மா கேங்க்ரெனோசம் (pyoderma gangrenosum) என்ற அரிய நோயாக மாறியுள்ளது. இந்த பியோடெர்மா கேங்க்ரெனோசம் என்பது அரிதான, அழற்சி தோல் நோயாகும்.. இது வலி மிகுந்த கொப்புளங்களைத் தோலில் ஏற்படுத்தும். அவை மெல்ல படிப்படியாகப் புண்களாகவும் மாறும். அந்தப் பெண்ணின் காலில் உள்ள புண்கள் செப்சிஸாக மாறியபோது தான் அவருக்கு வேதனை தொடங்கியது.. இது ரத்தம் மற்றும் திசுக்களில் தீங்கு ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளால் ஏற்படும். இதனால் உடல் உறுப்புகள் செயலிழக்கும் அபாயம் கூட உள்ளது. கடந்த 13 ஆண்டுகளாகவே அவர் இதற்காகத் தொடர் சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.

கால்களை இழக்கும் அபாயம்

கால்களை இழக்கும் அபாயம்

இருப்பினும், காயம் குணமடையவே இல்லை. இந்தாண்டு அவரது உடல்நிலை மோசமானதால் அவர் இந்த ஆண்டு எசெக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலில் கோல்ப் பந்து அளவுக்கு இருந்த பாதிப்பு, கால் முழுக்க பரவ ஒரு கட்டத்தில், உயிரைக் காப்பாற்ற அவர் தனது இரு கால்களையும் இழக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், மருத்துவர்கள் எடுத்த தீவிர முயற்சியால் அந்தளவுக்கு நிலைமை மோசமாகவில்லை.. பல்வேறு சிகிச்சைக்குப் பிறகு, சுமார் 13 ஆண்டுகள் கழித்து இப்போது தான் அவரது உடல்நிலை தேறியுள்ளது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு அவர் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடியுள்ளார். இருப்பினும், அவரது இரு கால்களும் இதனால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமான செயல்களை செய்ய முடியாத அளவுக்கு பாதிப்பு மோசமாகியுள்ளது.

சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்

சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்

இருப்பினும், இந்த சிறு பூச்சிக் கடியால் அவர் எதிர்கொண்ட துயரங்கள் ரொம்பவே அதிகம்.. இது குறித்து அவர் கூறுகையில், "13 வருடங்களாக எனக்கு வாழ்க்கை போச்சு.. வேதனையில் இருந்தேன். எனது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் எனது இரு குழந்தைகளுடன் பேசக் கூட முடியவில்லை. இப்போது 13 ஆண்டு சிகிச்சைக்குப் பிறகுச் சற்று எனது உடல்நிலை மேம்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் எதாவது கடித்தால் அதை அலட்சியமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதற்கு நானே சிறந்த உதாரணம்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+