கொரொனாவால் உயிரிழப்பவர்கள்... அமெரிக்காவில் எப்படி அடக்கம் செய்யப்படுகிறார்கள்..?
வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் உடலை தீவு ஒன்றுக்கு கொண்டு சென்று 10 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி அதில் மொத்தமாக புதைக்கின்றனர்.
பொதுவாகவே அமெரிக்காவில் யாரேனும் இறந்தால் இறப்பவரின் உடலை அலங்கரிக்கப்பட்ட சவப்பெட்டியில் வைத்து எடுத்துச்சென்று தான் அடக்கம் செய்யப்படுவது தான் வழக்கம். ஆனால் கொரோனாவால் ஆயிரக்கணக்கில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதால் அந்த சடங்கு சம்பிரதாயங்களை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு 10 அடி ஆழத்திற்கு குறையாமல் குழிகள் வெட்டப்பட்டு அதில் மொத்தமாக புதைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அதிகம் உயிரிழப்புகள் ஏற்பட்ட மாகாணங்களில் நியூயார்க் முதலிடத்தில் உள்ளது. நியூயார்க்கில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் உடல் ஹார்ட் தீவில் அடக்கம் செய்யப்படுகிறது. பொதுவாக ஹார்ட் தீவை பொறுத்தவரை ஆதரவற்றோர், ஏழை எளியோர் ஆகியோரின் உடல்கள் மட்டுமே புதைக்கப்படும். இந்த நடைமுறை கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக நியூயார்க்கில் நடைமுறையில் இருந்து வருகிறது.
இந்நிலையில் முதல்முறையாக வசதி படைத்த பெரும் செல்வந்தர்களின் உடல்களும் ஹார்ட் தீவில் கொத்து கொத்தாக புதைக்கப்படுகிறது. சவப்பெட்டிகளை இறக்குவதற்கும், அதனை அடுக்கிவைப்பதற்கும் ஏணிகள் பயன்படுத்தப்படுகின்றன. ராட்சத குழியாக இருப்பதால் இதில் ஆயிரக்கணக்கானோரின் உடல்களை அடக்கம் செய்ய முடியும் எனத் தெரிகிறது.
நியூயார்க் மாகாணத்தில் உள்ள ஹார்ட் தீவுக்கு படகின் மூலமே செல்ல முடியும் எனக் கூறப்படுவதோடு, கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும் பணியில் சிறைக்கைதிகள் தான் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications