அடேங்கப்பா.! கைதுக்கு பின் ஜெட் வேகத்தில் உயர்ந்த டிரம்ப் ஆதரவு.! இதுவரை இந்தளவு இருந்ததே இல்லை
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆபாச அழகிக்குப் பணம் கொடுத்த விவகாரத்தில் கடந்த வாரம் நீதிமன்றத்தில் கைதானார். ஆனால், இது அவருக்கு பாசிட்டிவாகவே திரும்பியுள்ளது.
முன்னாள் அமெரிக்க அதிபராக இருந்தவர் டிரம்ப். இவர் 2016ஆம் ஆண்டு முதல் 2020 வரை அமெரிக்க அதிபராக இருந்து வந்தார். இவர் அதிபராக இருந்த போது பல சர்ச்சைகளில் சிக்கினார். குறிப்பாக 2020 அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த டிரம்ப், தனது தோல்வியைக் கடைசி வரை ஒப்புக் கொள்ளவில்லை. தேர்தலில் நடந்த மிகப் பெரிய முறைகேடு காரணமாகவே தான் தேர்தலில் தோல்வியடைந்ததாகக் கூறி வன்முறையைத் தூண்டிவிட்டார்.

இந்த டொனால்ட் டிரம்ப் தான் இப்போது மற்றொரு பிரச்சினையில் மாட்டிக் கொண்டார். 2016 அதிபர் தேர்தலில் ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்சுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறார். இதன் காரணமாக அவர் கடந்த செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்திலும் ஆஜராக வேண்டி இருந்தது. அப்போது போலீசார் வழக்கமான நடைமுறைகள்படி அவரை கைது செய்தனர். ஆனால், இது டிரம்பிற்கு பாசிட்டிவ் நியூஸாகவே மாறியுள்ளது. அரசியல் பழிவாங்கல் மற்றும் இடதுசாரி சதிக்குப் பலியாக ஒருவராகவும் டிரம்பை அவரது ஆதரவாளர்கள் பார்க்கிறார்கள். இதனால் அவரது ஆதரவு அதிகரித்துள்ளது.
கருத்துக்கணிப்பில் முன்னிலை

முன்னாள் அமெரிக்க அதிபர் ஒருவர் இதுபோன்ற கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வது இதுவே முதல்முறை. 2016 தேர்தல் சமயத்தில் ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ், முன்னாள் பிளேபாய் மாடல் கரேன் மெக்டௌகல் ஆகியோருக்கு பணம் கொடுத்ததாக வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜராகும் போது தான் எந்தவொரு தவறும் செய்யவில்லை என்றே டொனால்ட் டிரம்ப் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். நியூயார்க்கில் நீதிமன்றத்தில் ஆஜரான பிறகு அவர் தனது சமூக வலைத்தளமான ட்ரூத் சோஷியல் பக்கத்தில், "இதுவரை வந்த சர்வே நம்பர்களில் இதுதான் பெஸ்ட். நமக்கான ஆதரவு அதிகரித்துள்ளது. மேலும், பிரச்சாரத்திற்காக சுமார் $10 மில்லியன் திரட்டப்பட்டது" என்று பதிவிட்டுள்ளார்.
தன் மீது திட்டமிட்டு பொய்யான தகவல்களைப் பரப்பி வருவதாகவே டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். அது வாக்காளர்கள் மத்தியில் நன்கு ரீச் ஆவதையே இது காட்டுகிறது. டிரம்பும் அவரது ஆதரவாளர்களும் நியூயார்க் மாவட்ட நீதிபதி ஆல்வின் பிராக்கை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தன் மீதான குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுக்கும் டொனால்ட் டிரம்ப், அரசியல் காரணத்திற்காகவே தன் மீது விசாரணை நடத்தப்படுவதாகவும் விமர்சித்தார். கடந்த வாரம் டிரம்ப் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் பிறகு வெளியான யாகூ நியூஸ் சர்வேவில் இன்னுமே பெரும்பாலான குடியரசு கட்சியினர் டொனால்ட் டிரம்பிற்கே தங்கள் முழு ஆதரவைத் தருகிறார்கள்.
டிரம்ப் தாக்கு

இப்போது குடியரசு கட்சியில் மிகவும் பிரபலமாக இருக்கும் அவரே, அதிபர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட வாய்ப்பு அதிகம். தன் மீதான விசாரணையைத் தொடர்ந்து டிரம்ப், அமெரிக்க பெடரல் நீதித்துறை மற்றும் எஃப்.பி.ஐக்கான நிதியைக் குறைக்கத் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று குடியரசுக் கட்சி எம்பிகளை வலியுறுத்தியுள்ளார். டிரம்ப் அதிபராக இருந்த போது தான் இத்துறைகளுக்கான நிதி அதிகரிக்கப்பட்டது. இப்போது அதே டிரம்ப் தான் நீதித்துறைக்கான நிதியைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஆனால், டொனால்ட் டிரம்ப் மீதான விசாரணையை நடத்தியது பெடரல் அமைப்புகள் இல்லை.. மாறாக நியூயார்க் உள்ளூர் நீதிமன்றம் என்பது குறிப்பிடத்தக்கது.
ராய்ட்டர்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் டொனால்ட் டிரம்ப் மீதான நடவடிக்கை ஜனநாயக கட்சியினரின் பழிவாங்கல் நடவடிக்கை என்றே சுமார் 50% பேர் கருதுகின்றனர். அதேநேரம் சுமார் 70% பேர், அமெரிக்க அதிபருக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியாது என்ற விதியை மாற்ற வேண்டும் என்றே கருதுகிறார்கள். அமெரிக்காவில் யாரும் சட்டத்திற்கு மேல் யாரும் இல்லை என்பதே இவர்கள் கருத்து.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications