ட்விட்டர் அடிப்படை பாதுகாப்பு அம்சத்தில் சமரசம்? எலான் மஸ்க் அடாவடி! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்
அடிப்படை பாதுகாப்பு அம்சத்தை கூட கட்டணம் செலுத்தி மட்டுமே பெற வேண்டும் என்று ட்விட்டர் அறிவித்துள்ளது.
வாஷிங்டன்: ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க் கைகளில் சென்றதில் இருந்தே அவர் பலவித நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதற்கிடையே இப்போது ட்விட்டரின் அறிவிப்பு ஒன்று இணையத்தில் கடும் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது.
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த ஆண்டு தான் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார். அவர் ஏற்கனவே, டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
ட்விட்டரை முதலில் வாங்குவதாக அறிவித்துவிட்டு பின்வாங்கிய போதிலும், நீதிமன்றத்தில் எல்லாம் வழக்கு தொடர்ந்து அவரை வாங்க வைத்து விட்டார்கள்.. இதனால் கடந்தாண்டு ட்விட்டர் மஸ்க் கைகளில் வந்ததது.

எலான் மஸ்க்
அப்போது முதலே அவர் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். முதலில் ட்விட்டர் சிஇஓ உள்ளிட்ட முக்கிய பொறுப்பில் இருந்த அனைவரையும் ஓரிரு நாட்களில் வேலையைவிட்டு தூக்கினார். அதன் பின்னர் ஓரிரு மாதங்களில் சுமார் 50% ட்விட்டர் ஊழியர்களை வேலையை விட்டு நீக்கினார். இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ட்விட்டரின் இந்த நடவடிக்கைக்கு பின்னரே.. மற்ற நிறுவனங்களும் ஆட்குறைப்பில் இறங்கியது நினைவுகூரத்தக்கது.

ட்விட்டர்
அதைத்தொடர்ந்து ப்ளூ டிக் வசதியையும் அவர் அறிமுகப்படுத்தினார். அதாவது முன்பு பிரபலமான மற்றும் முக்கிய புள்ளிகளுக்கு ப்ளூ டிக் வசதி இலவசமாக கொடுக்கப்படும். அவர்களை பயனாளர்கள் எளிதாக அடையாளம் கண்டு கொள்ளவே இந்த வசதி. ஆனால், இப்போது யார் வேண்டுமானாலும், கட்டணம் செலுத்தினால் ப்ளூ டிக் வசதி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சர்வதேச அளவிலும் கடும் எதிர்ப்பு வந்த போதிலும், எலான் மஸ்க் தனது முடிவில் உறுதியாக இருந்தார். இதனால் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

ப்ளூ டிக்
அதேநேரம் இப்போது சில அடிப்படை பாதுகாப்பு வசதிகள் கூட ப்ளூ டிக் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அளிக்கப்படும் என்று ட்விட்டர் அறிவித்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது வரும் மார்ச் 20ஆம் தேதி முதல், ட்விட்டர் பயனர்கள் சில அடிப்படையான பாதுகாப்பு அம்சத்திற்கு கூட மாதாந்திர கட்டணம் செலுத்த வேண்டும். ட்விட்டர் கணக்குகளை பாதுகாப்பாக வைத்திருக்கும் எஸ்எம்எஸ் அடிப்படையிலான 2 பேக்டர் ஆத்தன்டிகேஷன் இனி ப்ளூ டிக் வாடிக்கையாளற்களுக்கு மட்டுமே அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அடிப்படை பாதுகாப்பு அம்சம்
2 பேக்டர் ஆத்தன்டிகேஷன் என்பது நெட்டிசன்களுக்கு இணையத்தில் இருக்கும் கூடுதல் பாதுகாப்பு அம்சமாகும். இந்த வசதியை கொண்டிருப்பவர்கள் பாஸ்வோர்ட் உடன் சேர்ந்து மொபைலுக்கு அனுப்பப்படும் ஓடிபியை பயன்படுத்தியே லாக்இன் செய்ய முடியும். இதன் மூலம் நமது பாஸ்வேர்டை யாராவது ஹேக் செய்தாலும் கூட, அவர்களால் நமது கணக்கிற்குள் செல்ல முடியாது. அவர்கள் லாக்இன் செய்ய முயன்றாலும் கூட 2 பேக்டர் ஆத்தன்டிகேஷன் நமது மொபைல் போனுக்கு தான் வரும்.

கொந்தளிப்பு
இப்போது இந்த பாதுகாப்பு வசதியை தான் ட்விட்டர் ப்ளூ டிக் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் என்று அறிவித்துள்ளது. இது ஆன்லைன் பாதுகாப்பு வல்லுநர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது அனைவரும் ப்ளூ டிக் வசதி பெற வேண்டும் என்று பிளாக்மெயில் செய்வதற்கு சமம் என்றும் அவர்கள் சாடியுள்ளனர். இந்தியாவில் ப்ளூ டிக் கட்டணமாக 900 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், பலராலும் இந்த அடிப்படை பாதுகாப்பு அம்சத்தை கூட பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

கடும் கோபம்
ட்விட்டரில் இப்போது ஆக்வுவ்வாக இருக்கும் பயானாளர்களில் பெரும்பாலனோர் 2 பேக்டர் ஆத்தன்டிகேஷன் வசதியை எடுத்துள்ளனர். 2 பேக்டர் ஆத்தன்டிகேஷனை பல முறைகளில் பயன்படுத்தாலம் என்ற போதிலும் 74% பேர் அதையே தான் பயன்படுத்துகிறார்கள். இதன் காரணமாகவே ட்விட்டரின் இந்த முடிவு நெட்டிசன்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் மஸ்க் கைகளில் சென்றவுடன் இதுபோன்ற அறிவிப்புகளை எதிர்பார்த்தே இருந்ததாகவும் ட்விட்டர் முன்னாள் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications