"ஒரே மருந்து.." 80 வயது தாத்தாவும் 26 வயது இளைஞராக இருக்கலாம்! எந்த நோயும் கிட்ட கூட வராது! வாவ்
வாஷிங்டன்: மனிதர்கள் வயதாவதைத் தடுப்பது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் பெரியளவில் வெற்றி கிடைத்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இது உலகத்தை முற்றிலும் புரட்டிப் போடும் கண்டுபிடிப்பாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
என்றும் இளமையாக இருக்க வேண்டும் என்பதே பலரது கனவாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக பெரும் பணக்காரர்கள் இதில் அதீத ஆர்வம் கொண்டு இருக்கிறார்கள். அது தொடர்பாக உலகெங்கும் பல்வேறு ஆய்வுகள் நடந்தே வருகிறது. இதில்

அப்படி சமீபத்தில் வயதைக் குறைப்பது தொடர்பான ஆய்வில் ஆய்வாளர்கள் வெற்றி கண்டுள்ளனர். பன்றியின் ரத்தத்தில் இருந்து உருவாக்கப்பட்ட சேர்மங்களை வைத்து வயதாவதை மாற்றியமைக்கக்கூடிய ஒரு புதிய சிகிச்சை முறையைக் கண்டுபிடித்துள்ளனர்.
வெற்றி: முதற்கட்டமாக இதை எலிகளை வைத்து சோதனை செய்த நிலையில், அது வெற்றிகரமாக இருந்ததாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த சிகிச்சை முறையை இ5 சிகிச்சை என்று குறிப்பிடுகிறார்கள்.
இந்த சிகிச்சை முறையை இளம் பன்றியின் ரத்தத்தைப் பயன்படுத்தி உருவாக்கியுள்ளனர். அதை அவர்கள் வயதான எலிகளின் உடலில் செலுத்தியுள்ளனர். இதன் மூலம் எலி வயதாவதை மாற்றியமைக்கும் முடிவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.. இளம் பிளாஸ்மாக்கள் மற்றும் பன்றிகளிலிருந்து பெறப்படும் சிக்கலான நானோ துகள்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது தான் இந்த இ5.. இது எலிகள் வயதாவதைச் சராசரியாக 70 சதவிகிதம் வரை குறைப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
என்றும் 26 வயதுதான்: இதே ஆய்வை அவர்கள் மனிதர்கள் வைத்து சோதனை செய்ய உள்ளனர். இ5 சிகிச்சை முறை மனிதர்களிடமும் இதே வெற்றி கிடைத்தால் 80 வயது முதியவர் வயது 26 இளைஞர் போல இருப்பார் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இது குறித்து ஆய்வாளர்கள் மேலும் கூறுகையில், "இந்த இ5 சிகிச்சையில் இந்தளவுக்கு வெற்றி பெற முடியும் என நான் நினைக்கவில்லை. இந்த உண்மையில் எங்களுக்கு ஆச்சரியத்தைத் தருகிறது. மற்ற ஆய்வகங்களிலும் எலிகளை வைத்து இதை டெஸ்ட் நடத்தினோம். அங்கும் இதே முடிவுகள் தான் கிடைத்தன" என்றார்,
தலைகீழாக மாறும்: பன்றியின் ரத்தம் எலியின் உடலில் நுழையும் போது அதன் இதயம் மற்றும் கல்லீரல் ஆகியவற்றின் ஆகியவற்றின் வயதை அப்படியே தலைகீழாக மாற்ற முடிவதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து அவர்கள் மேலும் கூறுகையில், "இந்த சிகிச்சை ரத்தம், இதயம் மற்றும் கல்லீரல் திசுக்களின் எபிஜெனெடிக் வயதைப் பாதியாகக் குறைத்தது" என்றார்.
மேலும், மூளையின் ஹைபோதாலமஸ் என்ற பகுதியிலும் இதன் மாற்றம் குறிப்பிட தகுந்த அளவுக்கு இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது இந்த கண்டுபிடிப்புகள் போர்சின் பிளாஸ்மா மூலம் வயது குறைப்பு சிகிச்சையைச் சாத்தியமாக்குகிறது. ஆண் மற்றும் பெண் என இரு எலிகளிலும் வயதாகும் செல்களை அவர்கள் பாதியாகக் குறைத்துள்ளனர்.
அனைத்திலும் வெற்றி கிடைக்கும்: எலிகள் மட்டுமின்றி மனிதர்கள் உட்பட அனைத்து பாலூட்டி உயிரினங்களிலும் முடிவுகள் கிட்டதட்ட இதே மாதிரி இருக்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இந்த சிகிச்சை முறை இன்னும் மனிதர்கள் மத்தியில் சோதிக்கப்படவில்லை என்றாலும் கூட இது நல்லவொரு தொடக்கமாக இருக்கும் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
வயதாவதைத் தடுக்கும் இந்த சிகிச்சை முறையில் மற்றொரு பாசிட்டிவ் விளைவும் இருக்கிறதாம். அதாவது வயதாகும் போது நமக்குப் பல வித நோய்ப் பாதிப்புகள் ஏற்படும். தனித்தனியாக என்ன நோய் என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை தர வேண்டி இருக்கிறது. அதேநேரம் இ5 சிகிச்சையில் நம்மால் ஒட்டுமொத்தமாக நோய் ஏற்படும் அபாயத்தையே குறைக்கும் சாத்தியம் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications