அமெரிக்காவிலிருந்து பணம் அனுப்ப கூடுதல் வரி போடும் டிரம்ப்! இந்திய குடும்பங்களை எப்படி பாதிக்கும்?
வாஷிங்டன்: அமெரிக்காவில் வேலை செய்யும் இந்தியர்கள் எப்போதும் தாயகத்தில் உள்ள தங்கள் குடும்பத்தினருக்குப் பணம் அனுப்புவார்கள். இதுவே பல இந்தியக் குடும்பங்களுக்கு முக்கியமான நிதி ஆதாரமாகவும் இருந்து வருகிறது. முறையாகவும் இருந்து வருகிறது. ஆனால் அமெரிக்காவில் இப்போது அறிமுகப்படுத்தப்படும் புதிய சட்டம் பணம் அனுப்புவதைச் சிக்கலானதாக மாற்றுகிறது.
இப்போது அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிதாக ஒரு மசோதாவை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனர். அதன்படி அமெரிக்காவில் இருக்கும் ஒருவர் இந்தியா உட்பட எந்தவொரு வெளிநாட்டுப் பணம் அனுப்பினாலும் அதில் 5% வரி விதிக்கப்படும் என அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.. அந்த மசோதா நிறைவேறி சட்டமானால்... அமெரிக்காவில் பணிபுரியும் பல லட்சம் இந்தியர்கள் நேரடியாகப் பாதிக்கப்படுவார்கள்.

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள்
அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினரில் மூன்றாவது மிகப் பெரிய சமூகமாக இந்தியர்கள் உள்ளனர்.. 2023ஆம் ஆண்டில் மட்டும் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு 23 பில்லியன் டாலர் பணம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வரி அமலுக்கு வந்தால் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பப்படும் தொகையும் குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய மசோதா
அமெரிக்க நாடாளுமன்றத்தில் கீழ் சபையான ஹவுஸ் குடியரசு கட்சி எம்பிக்கள் இந்த மசோதாவை கொண்டு வந்துள்ளனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் விருப்பத்தின் பெயரிலேயே இந்த மசோதா கொண்டு வரப்படுகிறது. அதன்படி H-1B, F-1 விசாக்கள், கிரீன் கார்டு என அமெரிக்கக் குடியுரிமை பெறாத யாராக இருந்தாலும், அவர்கள் வெளிநாடுகளுக்குப் பணம் அனுப்பினால் 5 சதவீத வரி விதிக்கப்படும். அதேநேரம் இது அமெரிக்கக் குடிமக்களுக்குப் பொருந்தாது. அதாவது அமெரிக்கக் குடியுரிமை பெற்ற ஒருவர் வெளிநாட்டிற்குப் பணம் அனுப்பினால் அவர் எந்தவொரு வரியையும் செலுத்தத் தேவையில்லை.
எவ்வளவு வரி!
உதாரணமாக அமெரிக்காவில் வசிக்கும் இந்திய ஊழியர் ஒருவர், தனது வீட்டிற்கு ஒவ்வொரு மாதமும் $1,000 அனுப்புகிறார் என வைத்துக் கொள்வோம். இந்த சட்டம் அமலுக்கு வந்தால் அவர் $50 வரியாகச் செலுத்த வேண்டும். கடந்த மே 12ம் தேதி அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் 'தி ஒன் பிக் பியூட்டிஃபுல் மசோதா' (The One Big Beautiful Bill) என்ற பெயரில் பல சட்ட மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதில் இந்த பாயிண்டும் இருக்கிறது.
பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பும் ஏஜெண்டுகள் வரிகளை வசூலிப்பார்கள். அவர்கள் ஒவ்வொரு காலாண்டுக்கு ஒருமுறை வரியை அமெரிக்க அரசுக்கு அனுப்ப வேண்டும் என்பதே விதியாகும்
இது அமெரிக்காவில் உள்ள இந்தியர்களுக்கும், இந்தியாவில் உள்ள அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அமெரிக்காவில் வசிக்கும் பெரும்பாலான இந்தியர்களின் குடும்பங்கள் இங்கு அவர்கள் அனுப்பும் பணத்தை நம்பியே இருக்கிறது. இந்த மசோதா நிறைவேறி சட்டமானால், அதற்குக் கூடுதல் வரியைச் செலுத்த வேண்டும் என்பதால் அது இந்தியக் குடும்பங்களைத் தான் பாதிக்கும்.
இந்தியர்களைப் பாதிக்கும்
இந்தியாவைப் பொறுத்தவரை, 2023-24 நிதியாண்டில் மட்டும் அது பல்வேறு வெளிநாடுகளில் இருந்து 120 பில்லியன் டாலர் பெற்றுள்ளன. அதில் சுமார் 28 சதவீதம் அமெரிக்காவிலிருந்து மட்டுமே வந்துள்ளது. இது தொடர்பாக ஜிடிஆர்ஐ அமைப்பின் தலைவர் கூறுகையில், "வீட்டிற்கு பணம் அனுப்பவே அதிக வரி என்பதால் 5 சதவீத வரி இந்தியர்களைக் கடுமையாகப் பாதிக்கும். இதனால் 10-15 சதவீதம் பணம் வருவது குறையும். இதனால் ஆண்டுதோறும் 12-18 பில்லியன் டாலர் பற்றாக்குறை ஏற்படலாம்.
மேலும், இது இந்தியாவின் அந்நியச் செலாவணி சந்தையையும் பாதிக்கும். அமெரிக்க டாலர்கள் விநியோகம் குறையும். இதனால் ரூபாய் மீது அழுத்தம் ஏற்படும். இதனால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.1- 1.5 வரை குறையலாம்.
அழுத்தம் அதிகரிக்கும்
குறிப்பாகக் கேரளா, உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் கல்வி, சுகாதாரம் மற்றும் வீட்டுவசதி போன்ற அத்தியாவசிய செலவுகளை ஈடுகட்டவே வெளிநாட்டில் இருந்தும் பணத்தையே அவர்களின் குடும்பங்கள் நம்பியுள்ளன. இந்தியப் பொருளாதாரம் ஏற்கனவே பணவீக்க அழுத்தங்களைச் சந்தித்து வரும் நேரத்தில், அமெரிக்காவில் இருந்து வரும் பணம் குறைந்தால் அது இந்தியக் குடும்பங்களைக் கடுமையாகப் பாதிக்கும்" என்றார்.
இதில் நாம் மற்றொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது அமெரிக்காவில் மாத சம்பளத்தில் இருந்து கிடைக்கும் பணத்தை அனுப்பினால் மட்டும் வரி இல்லை.. முதலீட்டு வருமானம் அல்லது ஸ்டாக் ஆப்ஷன் மூலம் கிடைக்கும் வருமானத்தை அனுப்பும்போதும் கூடுதல் பணத்தைச் செலுத்தியாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
-
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு நிறுத்தம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் அறிவிப்பு! -
ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல் -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
"நடக்க கூட முடியல.." ரொம்பவே மோசமாகி போன டிரம்ப் உடல்நிலை? பெரிய விவாதமான வீடியோ -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
டிரம்ப் சொன்னது பொய்யா? பேச்சுவார்த்தையே நடக்கவில்லை.. பின்வாங்கிட்டாங்க! எகிறி அடிக்கும் ஈரான் -
Greenland: கிரீன்லாந்தை பாதுகாக்க நாங்க தயார்.. டிரம்ப் விலைக்கு கேட்டு வந்த நிலையில் ஈரான் அதிரடி! -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை












Click it and Unblock the Notifications