அடடா!! ரோபோ செய்யும் காரியத்தை பாருங்க.. ஜவுளி துறை வேலைவாய்ப்புகள் காலி? எலான் மஸ்க் அட்ராசிட்டி!
வாஷிங்டன்: எலான் மஸ்க் பதிவிட்ட ஒரே ஒரு வீடியோ தான் இப்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அது என்ன வீடியோ.. அதற்கான காரணம் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். குறிப்பாக மின்சார கார்களை தயாரிக்கும் அவரது டெஸ்லா நிறுவனம் உலக புகழ்பெற்றது

ரோபோ: மின்சார கார்கள் மட்டுமின்றி டெஸ்லா நிறுவனம் ரோபோக்களையும் உருவாக்கி வருகிறது. இதற்கிடையே டெஸ்லாவின் மனித உருவிலான ரோபோவான ஆப்டிமஸின் புது வெர்ஷனை எலான் மஸ்க் அறிமுகப்படுத்தியுள்ளார். ரோபோ குறித்த ஆய்வுகள் உலகெங்கும் தானா நடந்து வருகிறது என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். இந்த ரோபோவுக்கு இருக்கும் திறன் தான் பலரையும் அச்சப்பட வைக்கிறது. அதாவது இந்த ரோபோவால் சட்டை உள்ளிட்ட ஆடைகளை சுயமாகவே மடிக்க முடிகிறது.
இது தொடர்பான வீடியோவை எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் டெஸ்லாவின் மனித உருவ ரோபோ நின்று கொண்டே கருப்பு டி-ஷர்ட்டை எந்தவொரு சிரமும் இல்லாமல் மடித்து வைக்கிறது. தற்போது இருக்கும் ஆப்டிமஸ் வெர்ஷனால் தொடர்ச்சியாக சுயமாகச் செய்ய முடியாது என்ற போதிலும், வரும் காலத்தில் அனைத்து வேலைகளையும் சுயமாகச் செய்யும்படி வடிவமைக்கப்படும் என்கிறார் எலான் மஸ்க்.
எலான் மஸ்க்: இந்த வீடியோவை எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த நிலையில், அது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. என்னடா சாதாரணமாகத் துணி மடிக்கறதுக்கு இவ்வளவு பில்டப்பா என்று நீங்கள் கேட்கலாம். துணிகளை மடிப்பது என்பது மனிதர்களுக்குச் சாதாரணமான வேலையாக இருக்கலாம். ஆனால் ரோபோ உலகில் இது மிகவும் சிக்கலான ஒரு விஷயம்.
இப்போது எலான் மஸ்க் சாதித்துள்ளது, சில வயதே ஆன குழந்தை துணிகளை மடிப்பதற்குச் சமமான ஒரு சாதனை.. இளைஞர்கள் பலரும் கூட இப்போது துணிகளை மடிக்கச் சிரமப்படும் நிலையில், இந்த ரோபோ கலக்கலாக இந்த வேலையைச் செய்கிறது. இந்த வீடியோவுக்கு நெட்டிசன்களும் பல வித கருத்துகளைக் கூறி வருகின்றனர்.
நெட்டிசன்கள்: இந்த வீடியோ டெஸ்லாவின் புதுமையான மனித உருவ ரோபோவால் பல பயனர்களைக் கவர்ந்துள்ளது மற்றும் சிலர் இதை ஒரு மூலோபாய நடவடிக்கை என்று பாராட்டியுள்ளனர். இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர், "ஆஹா! இது சுவாரஸ்யமாக இருக்கே.. இதன் மூவ்மெண்ட்டுகள் பார்க்க அப்படியே மனிதர்களைப் போலவே இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார். இன்னும் சிலர் இந்த ரோபோவை வாங்கிவிட்டால்.. நான் அம்மாவிடம் திட்டு வாங்கத் தேவை இருக்காது என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
எச்சரிக்கை: அதேநேரம் மற்றொரு தரப்பினர் இது மிகப் பெரிய வேலையிழப்பை ஏற்படுத்தக் கூடும் என்று எச்சரிக்கிறார்கள். ஜவுளி துறை என்பது உலகெங்கும், குறிப்பாக இந்தியா, வங்கதேசம் நாடுகளில் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும் ஒன்றாக இருக்கிறது. குறிப்பாகத் திருப்பூரிலேயே பல ஆயிரம் பேர் இந்த ஜவளி துறையை நம்பி இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் வேலை போகும் அபாயம் இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
இது தொடக்கம் தான் என்றாலும் கூட இதே துறையில் ரோபோ தொடர்ச்சியாக வளரும்பட்சத்தில் அது ஜவளி துறையில் பல லட்சம் வேலைகளை காலி செய்யும் என்பதே எச்சரிக்கையாக இருக்கிறது. முன்னதாக கடந்த மாதம் எலான் மஸ்க் மற்றொரு வீடியோவை பகிர்ந்து இருந்தார். அதில் ஒரு மனித உருவம் ஆப்டிமஸ் ரோபோ, நடப்பது, நடனம் ஆடுவது மற்றும் முட்டைகளை வேகவைப்பது போன்ற செயல்களைச் செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications