அமெரிக்காவில் பயங்கரம்.. ஹைதராபாத் தலித் மாணவர் சுட்டுக்கொலை.. பார்ட்டைம் வேலை பார்த்தபோது துயரம்
வாஷிங்டன்: பல் மருத்துவ படிப்பை முடித்து அமெரிக்காவுக்கு உயர்கல்விக்காக சென்று கியாஸ் ஸ்டேஷனில் பார்ட்டைமாக பணியாற்றி வந்த ஹைதராபாத் தலித் மாணவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் போலே. இவர் பல் மருத்துவ படிப்பை முடித்தவர். உயர்கல்வி பயில அமெரிக்காவுக்கு சென்றார். அமெரிக்காவின் டல்லாஸில் உள்ள டென்டன் பகுதியில் தங்கி படித்து வந்தார்.

மேலும் அவர் கியாஸ் ஸ்டேஷனில் பார்ட் டைமாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் தான் இன்று அதிகாலையில் அங்கு வந்த நபர் அவரை துப்பாக்கியால் சுட்டார். இதில் குண்டு காயமடநை்த சந்திரசேகர் போலே பரிதாபமாக இறந்தார்.
சந்திரசேகர் போலே இறந்ததை தெலுங்கானாவின் முன்னாள் அமைச்சரும், பிஆர்எஸ் கட்சியின் முன்னாள் முதல்வருமான சந்திரசேகரராவின் உறவினரான எம்எல்ஏ ஹரிஷ் ராவ் உறுதி செய்துள்ளார். சந்திரசேகர் போலேவின் வீட்டுக்கு சென்ற ஹரிஷ் ராவ் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதுபற்றி ஹரிஷ் ராவ் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛ஹைதராபாத்தின் எல்பி நகரை சேர்ந்த தலித் மாணவர் சந்திரசேகர் போலே பல் மருத்துவ படிப்பை முடித்தார். அமெரிக்காவின் டல்லாசுக்கு உயர் படிப்புக்காக சென்றார். அங்கு அவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இது துயரமானது'' என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் சந்திரசேகர் போலேவின் உடலை அமெரிக்காவில் இருந்து இந்தியா கொண்டு வர தெலுங்கானா அரசு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இதுபற்றி தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சார்பில், ‛‛அமெரிக்காவில் இறந்த சந்திரசேகர் போலேவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். அவரது உடலை இந்தியா கொண்டு வர தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக இவர் GEICO என்ற நிறுவனத்தில் சீனியர் டேட்டா அனலிஸ்ட்டாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் பணியாற்றி வந்தார். அதற்கு முன்பாக சென்னையில் அமெரிக்க எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் டேட்டா அனலிஸ்ட்டாக பணியாற்றினார். 2021 முதல் 2023ம் ஆண்டு வரை அந்த பணியில் இருந்தார். அதற்கு முன்பாக 2020-2021ம் ஆண்டு வரை பெங்களூரில் உள்ள ஹிட்டாசி எனர்ஜி நிறுவனத்தில் புரோகிராமர் அனலிஸ்ட்டாக பணியாற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications