நான் இந்து.. கிறிஸ்தவத்தை வளர்க்க முடியாது! அமெரிக்க அதிபராக விரும்பும் விவேக் ராமசாமி பரபர பேச்சு
வாஷிங்டன்: அமெரிக்க குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக விவேக் ராமசாமி இந்து நம்பிக்கை குறித்து பரபரப்பாக பேசியுள்ளார். அதோடு இந்து நம்பிக்கை தனக்கு சுதந்திரம் வழங்குவதாகவும், அதனடிப்படையில் தான் பிரசாரத்தை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவை பொறுத்தமட்டில் ஒவ்வொரு 4 ஆண்டுக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் என்பது நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2020ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றார்.

ஜோ பைடன் தன்னை எதிர்த்த அப்போதைய அதிபரான குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப்பை தோற்கடித்த அரியணை ஏறினார். இந்நிலையில் தான் ஜோ பைடனின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிவுக்கு வர உள்ளது.
இதையடுத்து மீண்டும் அங்கு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிட ஆர்வமாக உள்ளார். அவருக்கு போட்டியாக அதே கட்சியை சேர்ந்த இந்திய வம்சாவளியான கேரளாவை சேர்ந்த விவேக் ராமசாமியும் அதிபர் தேர்தலில் களமிறங்க தயாராகி வருகிறது. ஓஹியோவை தலைமையிடமாக கொண்ட பயோ டெக் நிறுவனத்தை நடத்தி வரும் விவேக் ராமசாமி கடந்த சில மாதங்களாகவே தேர்தல் பணியை தொடங்கி மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் தான் விவேக் ராமசாமி இந்து மத நம்பிக்கை குறித்து தற்போது வெளிப்படையாக பேசியுள்ளார். டெய்லி சிக்னல் பிளாட்பாரம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ‛தி ஃபேமிலி லீடர்' மன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் விவேக் ராமசாமி பங்கேற்று பேசினார். அப்போது அவர் கிறிஸ்தவ மதம் மற்றும் இந்து மதம் இடையேயான ஒற்றுமை குறித்து விளக்கியதோடு பரபரப்பான கருத்துகளை பேசினார். இந்த நிகழ்ச்சியில் விவேக் ராமசாமி பேசியதாவது:
எனது நம்பிக்கை எனக்கு சுதந்திரத்தை அளிக்கிறது. என் நம்பிக்கை தான் இந்த அதிபர் தேர்தல் பிரசாரத்துக்கு அழைத்த வந்துள்ளது. நான் ஒரு இந்து. உண்மையாக ஒரு கடவுள் இருக்கிறார் என்பத நான் நம்புகிறேன். கடவுள் நம் ஒவ்வொருவருக்காகவும் ஒரு பணியை வைத்துள்ளார் என்பதை நான் நம்புகிறேன். அதனை உணர்ந்து கொள்ள வேண்டிய கடமை, தார்மீக உரிமை நமக்கு இருக்கிறது என்பதை எனது நம்பிக்கை அளிக்கிறது.
கடவுள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பணியை வெவ்வேறு வழிகளில் செய்ய வழங்கி உள்ளார். ஆனாலும் நாம் இன்னும் சமமாக இருக்கிறோம் என்றால் நம் ஒவ்வொருவரிலும் கடவுள் இருக்கிறார். அதுதான் எனது நம்பிக்கை. எனது குடும்பம் ஒரு பாரம்பரியமான குடும்பம். குடும்பத்தை பற்றி என் பெற்றோர் எனக்கு கற்று கொடுத்துள்ளனர். குடும்பம் தான் அடித்தளம் என எனக்கு கற்று கொடுத்துள்ளனர். பெற்றோரை மதிக்க வேண்டும். திருமணம் என்பது புனிதமானது.
"நான் ஒரு பாரம்பரிய குடும்பத்தில் வளர்ந்தேன், என் பெற்றோர் எனக்குக் கற்றுக் கொடுத்தது குடும்பம். உங்கள் பெற்றோரை மதிக்கவும். திருமணம் புனிதமானது. திருமணம் என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையிலானது. ஆனால் விவாகரத்து என்பது அப்படியானது அல்ல. நீங்கள் கடவுளுக்கு முன்பாக திருமணம் செய்துகொண்டு, கடவுளுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் சத்தியம் செய்கிறீர்கள் என்பதை கூறியுள்ளனர்.
மேலும் நான் கிறிஸ்டியன் உயர்நிலை பள்ளிக்கு சென்றேன். அங்கு 10 கட்டளைகளை கற்றுக்கொண்டோம். பைபிள் படித்தோம், வேத வகுப்புகள், கடவுள் உண்மையானவர், உண்மையான கடவுள் ஒருவர் இருக்கிறார்.
பெற்றோரை மதிக்க வேண்டும். பொய் சொல்லக்கூடாது. திருடக்கூடாது. சட்டவிரோத உறவில் இருக்க கூடாது என பல விஷயங்களை கற்று கொண்டேன். உண்மையில் இதுபோன்ற விழுமியங்கள் என்பது இந்துக்களுக்கோ, கிறிஸ்தவர்களுக்கோ சொந்தமானது அல்ல. இது கடவுளுக்கு சொந்தமானது.
நாடு முழுவதும் கிறிஸ்தவத்தை வளர்க்கக்கூடிய அதிபராக என்னால் இருக்க முடியுமா? என்னால் முடியாது. அதோடு அமெரிக்க அதிபரும் அதைத்தான் செய்ய வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் பாதிக்கப்படுபவர்களுக்காக நான் நிற்பேன். அடுத்த தலைமுறைகளுக்காக நாம் செய்யும் செயல்களை தொடர்ந்து முன்னெடுத்து செல்வேன். அது தான் என் கடமை'' என்றார்.
-
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications