விவாகரத்து பண்ணிட்டேன்.. காசை திருப்பி கொடுங்க.. கல்யாண போட்டோகிராபரிடம் கேட்ட பெண்
வாஷிங்டன்: திருமனத்தில் மீதமான பொருட்களை கொடுத்து பணம் கேட்பது போல திருமணம் பந்தம் முறிந்து விட்டதால் எனக்கு அப்போது எடுத்த போட்டோக்களை வைத்து எந்த பயனும் இல்லை. எனவே, போட்டோ எடுத்தற்காக கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுங்கள் என பெண் ஒருவர் போட்டோ கிராபருடன் கேட்டு அடம் பிடித்த வினோத சம்பவம் நடந்துள்ளது.
திருமணம் என்பது ஒவ்வொரு நபரின் வாழ்க்கையிலும் மிகவும் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும். சொந்த பந்தங்களை அழைத்து இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கும் தம்பதிகள் இந்த பொன்னான தருணத்தை தங்கள் வாழ்நாள் முழுவதும் பார்ப்பதற்காக புகைப்படங்களையும் வீடியோக்களையும் எடுத்து வைக்கிறார்கள்.

அதிலும் தற்போது திருமணத்திற்கு முன்பே ப்ரீ வெட்டிங் ஷூட் தொடங்கி திருமணம் முடியும் வரை ஒவ்வொரு தருணங்களையும் பதிவு செய்து பொக்கிஷம் போல பாதுகாத்து வருகிறார்கள். மணமக்களின் ஆசையை நிறைவேற்ற போட்டோ கிராபர்களும் படங்களை சிறப்பாக பிடிக்க மிகவும் மெனக்கெடுவார்கள்.

அதன்பிறகு எடிட்டிங்.. செய்து சிறப்பான ஆல்பமாக கொடுப்பதுவரை போட்டோ கிராபர்கள் பணியும் திருமண நிகழ்வில் மிகவும் முக்கியமானது. இத்தனை சிரமப்பட்டு போட்டோ எடுத்து கொடுக்கும் போட்டோ கிராபர்களிடம், திருமண முறிவு ஏற்பட்டு விட்டதால் கொடுத்த பணத்தை திருப்பி கொடுங்கள் என்று மணமக்கள் கேட்டால் எப்படி இருக்கும்..
இப்படியெல்லாம் நடக்குமா? என்று நீங்கள் நினைப்பது தெரிகிறது... ஆனால், இது உண்மைதான் தென் ஆப்பிரிக்காவில் இது போன்ற ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அதன் விவரத்தை பார்ப்போம். தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரை சேர்ந்தவர் லான்சே ரோமியோ. புகைப்பட கலைஞரான இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற திருமணத்திற்கு போட்டோ கிராபராக பணியாற்றி இருக்கிறார்.

இந்த நிலையில், திடீரென்று அண்மையில் இவரை பெண் ஒருவர் தொடர்பு கொண்டு என்னை உங்களை நினைவிருக்கிறதா? எனது திருமணத்தில் நீங்கள் போட்டோ கிராபராக பணியாற்றினீர்கள். தற்போது எங்கள் திருமணம் விவாகாரத்து ஆகிவிட்டது. எனவே, நீங்கள் எடுத்த போட்டோக்கள் எல்லாம் தற்போது வீணாக போய்விட்டது.. எனவே பணத்தை திருப்பி கொடுங்கள் என்று கேட்டுள்ளார்.

வாட்ஸ் அப்பில் போட்டோ கிராபருக்கு இந்த மெசேஜை போட்டோகிராபருக்கு அந்த பெண் அனுப்பியுள்ளார். இந்த மெசேஜை கவனித்த போட்டோகிராபரும் முதலில் ஜோக் தான் அடிக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். ஆனால், அந்த பெண்ணோ மிகவும் சீரியசாக கேட்பதை போக போகத்தான் அறிந்தார்.
அதன்பிறகுதான், உங்கள் திருமண பந்தம் முறிந்து போனது உண்மையிலேயே வருத்தத்திற்குரியதுதான். ஆனாலும் அதுபோன்று நாங்கள் பணத்தை கொடுப்பது கிடையாது என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறார். ஆனாலும் விடாத அந்த பெண்ணோ, திருமணத்தின் போதே நீங்கள் ஒப்பந்தத்தில் இதை தெரிவித்து இருக்க வேண்டும்.

அப்போது நீங்கள் சொல்லவில்லை. எனவே கட்டாயம் எனக்கு பணம் திருப்பி கொடுத்தே ஆக வேண்டும். குறைந்தபட்சம் 70 சதவிகிதம் பணத்தையாவது திருப்பி தாருங்கள்.. இல்லையென்றால் எனது வழக்கறிஞர்கள் இதை பார்த்துக்கொள்வார்கள் என்றும் மிரட்டி பார்த்துள்ளார். பிறகு நேரில் சந்தித்து இது பற்றி பேசலாம் எனவும் அந்தப் பெண் அடுத்த மெசேஜில் கூறினார்.
ஆனால், இதையெல்லாம் கண்டு கொள்ளாத அந்த போட்டோகிராபரோ உங்கள் வழக்கறிஞரை பேச சொல்லுங்கள் என ஒரோ போடாக போட்டு உரையாடலை நிறுத்தி விட்டார். இது தொடர்பான வாட்ஸ் உரையாடல்களும் இணையத்தில் பரவி வருகின்றன.

திருமனத்தில் மீதமான பொருட்களை கொடுத்து பணம் கேட்பது போல திருமணம் பந்தம் முறிந்து விட்டதால் எனக்கு அப்போது எடுத்த போட்டோக்களை வைத்து எந்த பயனும் இல்லை எனவே, போட்டோ எடுத்தற்காக கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுங்கள் என பெண் ஒருவர் போட்டோ கிராபருடன் கேட்டு அடம் பிடித்து சண்டை போடாத குறையாக வாதம் செய்வது குறித்த இந்த செய்தி இணையத்தில் அதிகம் பரவி வருகிறது. நெட்டிசன்களும் இப்படியெல்லாம் கூட நடக்குமா? என்ற ரீதியில் கருத்துக்களை ஜாலியாகவும் பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications