வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"செவ்வாய் கிரகத்தில் சீனர்களே அதிகம் இருக்காங்க" டைம் மிஷின் மூலம் வந்ததாக கூறும் பெண் கிளப்பிய பீதி

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: நான் செவ்வாய் கிரகத்தில் இருந்து 3812-ஆம் ஆண்டில் இருந்து டைம் மிஷின் மூலம் பூமிக்கு வந்திருக்கிறேன். செவ்வாய் கிரகத்தை 70 சதவீதம் சீனர்களே ஆக்கிரமித்து இருக்கின்றனர் என்று கையில் ஒரு புகைப்படத்துடன் யூடியூப்பில் வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பி உள்ளார் 37 வயது மேரி என்ற பெண்.

விஞ்ஞானம் மனிதன் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு அசூர வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

நிலவை பார்த்து குழந்தைகளுக்கு சோறு ஊட்டிக் கொண்டிருந்த காலம் போய் நிலவுக்கே சென்று மனிதன் காலடி எடுத்து வைத்துவிட்டான்.

“குட் நியூஸ்”.. தீபாவளியை முன்னிட்டு செவ்வாய் அன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு தமிழ்நாடு அரசு விடுமுறை “குட் நியூஸ்”.. தீபாவளியை முன்னிட்டு செவ்வாய் அன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு தமிழ்நாடு அரசு விடுமுறை

மனிதன் வாழ தகுதி உள்ளதா

மனிதன் வாழ தகுதி உள்ளதா

பூமியை போல வேறு கிரகங்களிலும் மனிதன் வாழ தகுதி உள்ளதா? என்ற ஆய்வும் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களை ஆய்வு செய்ய இஸ்ரோ கூட விண்கலங்களை அனுப்பியுள்ளது. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவும் இதற்கான தீவிர ஆய்வுகளில் ஈடுபட்டு இருக்கிறது. அதேபோல வேற்று கிரகவாசிகள் ஒருபக்கம் பூமிக்கு வந்திருப்பதாகவும் அவர்களின் பறக்கும் தட்டுக்களை பார்த்ததாகவும் திகில் கிளப்பும் சம்பவங்களும் அவ்வப்போது நடந்து வருகிறது.

டைம் டிராவல் குறித்த செய்திகளும்

டைம் டிராவல் குறித்த செய்திகளும்

குறிப்பாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அடிக்கடி சிலர் வேற்று கிரகவாசிகளை பார்த்ததாக கூறும் செய்திகளை அடிக்கடி பார்த்து இருப்போம். இதுதொடர்பான ஆய்வுகள் கூட நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதேபோல, டைம் டிராவல் குறித்த செய்திகளும் அடிக்கடி பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் தான், 3812 ஆம் ஆண்டில் இருந்து தான் வந்திருப்பதாகவும் செவ்வாய் கிரகத்தில் எனது நகரம் தான் இப்படித்தான் உள்ளது எனவும் கையில் ஒரு புகைப்படத்துடன் யூடியூப்பில் வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பி உள்ளார் 37 வயது மேரி என்ற பெண்.

 செவ்வாய் கிரகம் பாலைவனமாக இருக்கிறது

செவ்வாய் கிரகம் பாலைவனமாக இருக்கிறது

இது குறித்து அந்தப் பெண் கூறும் போது, ''செவ்வாய் கிரகத்தை சீனா ஆக்கிரமித்து வைத்துள்ளது. செவ்வாயில் இருந்து 70 சதவீதத்திற்கும் மேலான கனிமங்களை சீனர்கள் கொண்டு வர உள்ளனர். செவ்வாய் கிரகத்தில் இருக்கும் நகரம் பாலைவனம் போல இருக்கிறது. பல கட்டிடங்களும் உள்ளன. இதைப்பார்த்ததும் உடனே புகைப்படம் எடுத்துக்கொண்டேன். செவ்வாய் பார்ப்பதற்கு சுவாரசியமாகவும் அதேவேளையில் அச்சுறுத்தும் படியாகவும் இருக்கிறது.

சீனர்கள் மட்டுமே வசிக்கின்றனர்

சீனர்கள் மட்டுமே வசிக்கின்றனர்

ஒட்டு மொத்த உலகத்துடன் சீனா ஒரு ஒப்பந்தம் போட்டுள்ளது. சீனர்கள் மட்டுமே நிலவில் வசித்து வருகின்றனர். சீன மக்களை தவிர பிற நாட்டு மக்கள் விருந்தினர்கள் போல மட்டுமே சென்று வருகின்றனர்" என்றார். ஆனால், செவ்வாய் கிரகத்தில் உள்ள நகரம் என்று சும்மா கதை அளப்பதாகவும் நாசா வெளியிட்ட புகைப்படத்தை இணையதளத்தில் இருந்து எடுத்து வைத்திருப்பதாகவும் நெட்டிசன்கள் அவரை கலாய்த்தும் வருகின்றனர்.

விமர்சித்த நெட்டிசன்கள்

விமர்சித்த நெட்டிசன்கள்

அதேபோல், சாதாரண சுற்றுலாவுக்கு சென்றாலே பல போட்டோக்களை நான் எடுப்பது உண்டு. ஆனால், டைம் டிராவல் வைத்துக்கொண்டு செவ்வாய் கிரகத்திற்கு போய் ஒரு போட்டாவைத்தான் எடுத்தீர்களா? எனவும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். வெறும் வாய்க்கு அவல் கிடைத்தது போல மேரியின் இந்த பதிவு அமைந்து விட்டதாக கருதிய நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

English summary
I have come from Mars to Earth in the year 3812 via a time machine. A 37-year-old woman named Mary has created a sensation by posting a video on YouTube with a photo in her hand saying that 70 percent of Mars is occupied by Chinese.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X