டைட்டானிக்.. நீர்மூழ்கி கப்பலில் உயிருக்கு போராடும் 5 கோடீஸ்வரர்கள்! ஓனர் அப்பவே "ஒன்னு" சொன்னாரே!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: டைட்டானிக் கப்பலின் சிதிலமடைந்த பகுதிகளைக் காணச் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் மாயமாகியுள்ள நிலையில், அந்த கப்பலின் நிறுவனர் 2022 ஆம் ஆண்டு கூறிய ஒரு கருத்து தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Recommended Video

    Titanic கப்பலை பார்க்க போனவங்க மாயம்

    கனடா நாட்டின் நியூபவுண்ட்லாந்து தீவில் இருந்து சுமார் 595 கி.மீ. தொலைவில், 13 ஆயிரம் அடி ஆழத்தில் அட்லாண்டிக் படுகையில் டைட்டானிக் கப்பலின் சேதம் அடைந்த பாகங்கள் கிடக்கின்றன. இந்தக் கப்பல் விபத்துக்குள்ளாகி நூறு ஆண்டுகள் ஆனாலும் அந்தக் கப்பல் மீதான ஆர்வம் மக்களுக்கு குறைந்தபாடில்லை. டைட்டானிக் கப்பலை மையமாக கொண்டு கடந்த 1997- ஆம் ஆண்டு வெளிவந்த படம், இந்தக் கப்பல் குறித்த எதிர்பார்ப்பை உலக அளவில் அதிகரிக்க வைத்தது என்றே சொல்லலாம்.

    If you just want to be safe, dont do anything- Missing Titanic Tour Leader Rush said

    இந்த நிலையில், டைட்டானிக் கப்பலின் சிதிலமடைந்த பகுதிகளுக்குச் சுற்றுலாப் பயணிகளை ஒரு நீர்மூழ்கிக் கப்பல் அழைத்துச் சென்று வருகிறது. வாஷிங்டனை சேர்ந்த 'ஓசன்கேட் எக்ஸ்படீசன்ஸ்' என்ற நிறுவனம், டைட்டானிக் கப்பலின் சிதிலம் அடைந்த பாகங்களை காண்பதற்கான ஆழ்கடல் சுற்றுலாவை கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கியது. இந்த சுற்றுலாவிற்காக வெறும் 22 அடி நீளம் கொண்ட சிறிய நீர்மூழ்கி சாதனத்தை இந்த நிறுவனம் உருவாக்கியது.

    5 பேர் மட்டுமே பயணிக்கும் வகையில் உள்ள சிறிய அந்த கப்பல் டைட்டானியம் மற்றும் கார்பன் இழைகளால் ஆனது. இந்த கப்பல் மூலமாக டைட்டானிக்கை நெருங்கி சென்று பார்க்க முடியும். 5 கோடீஸ்வரர்களுடன் சென்ற அந்த அந்த நீர்மூழ்கிக் கப்பல் சில நாட்களுக்கு முன்பு, கிளம்பிய கொஞ்ச நேரத்திலேயே அத்துடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதைத் தேடும் பணிகள் தான் இப்போது தீவிரமாக நடந்து வருகிறது.

    அந்த கப்பலில் சில மணி நேரத்திற்குத் தேவையான ஆக்சிஜன் மட்டுமே இருக்கும் நிலையில், அதைக் கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த டைட்டானிக் நீர்மூழ்கிக் கப்பலை இப்போது அமெரிக்கக் கடலோர காவல்படை, கனடா நாட்டின் ராணுவ விமானங்கள், பிரான்ஸ் நாட்டின் கப்பல்கள், கேமரா பொருத்தப்பட்ட நவீன ரோபோக்கள் ஆகியவை மாயமான டைட்டானிக் நீர்மூழ்கிக் கப்பலைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளது.

    எதிர்பாராத அசம்பாவித சம்பவங்களை சமாளிக்கும் விதமாக எமெர்ஜென்சி கட்டத்தில் 96 மணிநேரம் ஆக்சிஜன் சப்ளை செய்யும் வகையில் டைட்டானிக் நீர்மூழ்கிக் கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கூடுதல் ஆக்சிஜன் தான் இப்போது மாயமான சுற்றுலாப் பயணிகளுக்கு உதவி வருகிறது. ஆக்சிஜன் மட்டுமின்றி எதிர்பாராத நிகழ்வுகளைச் சமாளிக்க அங்கே சில உணவுப் பொருட்களும் சேமிக்கப்பட்டுள்ளதாம். இந்த இரண்டையும் வைத்தே அவர்கள் சமாளித்து வருகின்றனர்.

    நீர்மூழ்கிக் கப்பலில் உள்ளவர்களின் நிலை தெரியாமல் இருக்கும் நிலையில், அவர்கள் உயிருடன் இருக்கலாம் என்ற நம்பிக்கையை இது அளிக்கிறது. இருப்பினும் அவர்கள் உயிருடன் இருப்பதை வல்லுநர்களால் உறுதி செய்ய முடியவில்லை. இதனிடையே, சிறிய நீர்மூழ்கி கப்பலை உருவாக்கிய கம்பெனியின் நிறுவனர் ஸ்டாக்டன் ரஷ் கடந்த ஆண்டு செய்தியாளர்களின் கேள்வி ஒன்றிற்கு அளித்த பதில் தற்போது பரவி வருகிறது.

    ஸ்டாக்டன் ரஷ் கூறுகையில், பாதுகாப்பு என்பது முற்றிலும் வீணான ஒன்று தான் என சொல்ல வேண்டும். பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்தால், நீங்கள் உங்கள் படுக்கையை விட்டு எழுந்து இருக்கக் கூடாது. காரில் ஏறக்கூடாது. எதையுமே செய்யாமல்தான் இருக்க வேண்டும். ஒரு கட்டத்தில் நீங்கள் ரிஸ்க் எடுத்துதான் ஆக வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+