‛உயிரே போயிடும்’.. அமெரிக்காவை அலறவிடும் பூஞ்சை தொற்று.. ‛கேண்டிடா ஆரிஸ்’ பாதித்தால் என்ன நடக்கும்
வாஷிங்டன்: அமெரிக்காவில் மனிதர்களின் உயிரை பறிக்கும் ‛கேண்டிடா ஆரிஸ்' எனும் பூஞ்சை தொற்று பரவ தொடங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ள நிலையில் பூஞ்சை தொற்று பாதித்தால் என்ன நடக்கும் என்பது பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
2019 இறுதியில் சீனாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. இந்த வைரஸ் அடுத்த 2 ஆண்டுகளில் உலகம் முழுவதும் பரவி மொத்தமாக மனிதர்களை முடக்கியது. இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தான் அமெரிக்காவில் தற்போது ‛கேண்டிடா ஆரிஸ்' எனும் பூஞ்சை தொற்று வேகமாக பரவ தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பூஞ்சை தொற்று என்பது மனிதர்களின் உயிரை பறிக்கும் திறனை அதிகம் கொண்டுள்ளதால் அமெரிக்க மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
அதாவது அமெரிக்காவின் வாஷிங்டனில் கடந்த மாதம் ஒருவருக்கு ‛கேண்டிடா ஆரிஸ்' பூஞ்சை தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும்போதே சியாட்டில் 3 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தற்போது வரை 4 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்காவில் ‛கேண்டிடா ஆரிஸ்' பாதிப்பு தற்போது குறைவாக இருந்தாலும் கூட மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதற்கு அந்த பூஞ்சை தொற்றின் வீரியம் தான் காரணமாகும். அதாவது ‛கேண்டிடா ஆரிஸ்' பூஞ்சை தொற்று என்பது வேகமாக பரவும் தன்மை கொண்டது. மேலும் அதிக இறப்பு சதவீதத்தை கொண்டுள்ளதோடு, எதிர்ப்பு மருந்துகளுக்கு கட்டுப்படாதாம். இதனால் தான் சுகாதார நிபுணர்களும், பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர்.
மேலும் இந்த பூஞ்சை தொற்று பாதிப்பு ஏற்பட்டால் முதலில் அது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தை தான் பாதிக்கும். மேலும் உணவு குழாய், சுவாச குழாய்களை தாக்கும். மேலும் இந்த பாதிப்பு ஏற்பட்டால் இரத்த ஓட்டம் பாதிப்பதோடு, காது உள்பட பிற உடல் பகுதிகளில் காயங்கள் ஏற்படுத்தும். மேலும் பாக்டீரியா தொற்று ஏற்படுவம் பிற அறிகுறிகளும் ஏற்படாலம். நோயின் வீரியம் அதிகரிக்க அதிகரிக்க அறிகுறியின் தாக்கமும் அதிகரிக்கும்.
மேலும் இந்த ‛கேண்டிடா ஆரிஸ்' பூஞ்சை தொற்று கிருமி மனிதரின் தோலில் இருந்து கொண்டே இன்னொருவருக்கும் பரவும் தன்மை கொண்டது. இதன்மூலம் ஒருவர் பாதிப்புக்கு உள்ளாகாமலே மற்றவருக்கு நோய் கிருமியை அனுப்ப முடியும். மேலும் இந்த தொற்றால் பாதிக்கப்படும் நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். மேலும் அவர்கள் இருக்கும் அறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும். அவரை சந்திக்க செல்வோர் கவசஉடை அணிய வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட நபரின் அறைக்கு சென்று வந்தால் சானிடைசர் போட்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
கேண்டிடா ஆரிஸ் என்பது முதன் முதலில் ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட் இந்த பூஞ்சை தொற்றுக்கு பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2016ல் 53 பேர் மட்டுமே பாதிக்கப்பட்ட நிலையில் 2022ல் 2,377 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த பூஞ்சை தொற்று பாதிப்பு என்பது அமெரிக்கா உள்பட 40 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என உலக சுகாதார மையம் எச்சரிக்கை செய்துள்ளது. இந்நிலையில் தான் அமெரிக்காவில் கேண்டிடால ஆரிஸ்' பூஞ்சை தொற்று பரவ தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications