காசா அமைதி ஒப்பந்தம் நடுவே.. இந்தியா பாகிஸ்தான் விவகாரத்தை இழுத்த டிரம்ப்.. ஷெபாஸ் ஷெரீப் கொடுத்த ரியாக்ஷன்
வாஷிங்டன்: எகிப்தில் காசா அமைதி ஒப்பந்தம் உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவும் பாகிஸ்தானும் மிகவும் சிறப்பாக ஒன்றாக இருக்க போகிறார்கள் என்று நான் நினைக்கிறேன் என்று கூறிவிட்டு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை பார்த்தார். அதற்கு டிரம்பின் கருத்தை ஆமோதிப்பது போல ஷெபாஸ் ஷெரீப் ரியாக்ஷன் கொடுத்தார்.
பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், மோதல் பகிரங்கமாக வெடித்தது. இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் அமைப்பினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதோடு 1,200 பேரை பிணைக்கையாக பிடித்து சென்றனர்.

அமைதி ஒப்பந்தம்
இதையடுத்து ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதலை தொடர்தது. 2 ஆண்டுகளாக நீடித்த இந்த போரில் காசாவை சேர்ந்த 67 ஆயிரம் பேர் போரில் கொல்லப்பட்டனர். அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியெற்றதும், இஸ்ரேல்-காசா போரை முடிவுக்கு கொண்டு வர தீவிர முயற்சிகள் மேற்கொண்டார்.
அதன்படி வெள்ளை மாளிகையில் கடந்த மாத இறுதியில் நடந்த பேச்சுவார்த்தையில் ட்ரம்ப் 20 அம்ச திட்டத்தை பரிந்துரைத்தார். இந்த அமைதி ஒப்பந்தத்தை இஸ்ரேலின் நெதன்யாகு உள்ளிட்ட தரப்பும், ஹமாஸ் தரப்பும் ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து, இதுபற்றி விவாதம் நடத்த எகிப்தின் ஷர்ம் அல்‑ஷேக் நகரில் கடந்த வாரம் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது.
இந்தியா பாகிஸ்தான் பற்றி பேசிய டிரம்ப்
இந்த பேச்சுவார்த்தையில், இஸ்ரேல்-ஹமாஸ் தரப்பினரிடையே போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக முதல் கட்ட ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போது இருதரப்பினர் சார்பில் பிணைக்கைக் கைதிகள் பரிமாற்றம் நடைபெறும் என உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த பேச்சுவார்த்தை முடிந்த நிலையில், ஷர்ம் அல்ஷேக் நகரில் நடந்த இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள ட்ரம்ப் எகிப்துக்கு சென்றார்.
முன்னதாக இஸ்ரேல் சென்ற ட்ரம்ப், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகே எகிப்துக்கு ட்ரம்ப் சென்றார். எகிப்தின் ஷர்ம் அல்‑ஷேக் நகரில் நடைபெற்ற அமைதி மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உள்ளிட்டோரும் இதில் அடங்கினர்.
ஷெபாஸ் ஷெரீப் கொடுத்த ரியாக்ஷன்
ட்ரம்ப் பேசும் போது, இந்தியா-பாகிஸ்தான் விவகாரத்தையும் இழுத்தார். ட்ரம்ப் கூறியதாவது: "இந்தியா - பாகிஸ்தான் மிகவும் சிறப்பாக ஒன்றாக இருக்க போகிறார்கள் என்று நான் நினைக்கிறேன்" என்றார். அப்போது அருகில் நின்ற ஷெபாஸ் ஷெரீப், இதை உறுதிப்படுத்துவது போல ட்ரம்ப் பார்க்கிறார். உடனே ஷெபாஸ் ஷெரீப் சிரித்துகொண்டே ட்ரம்பின் இந்த பேச்சில் உள்ளார்.
தொடர்ந்து பேசிய ட்ரம்ப், பாகிஸ்தான் தலைவரை பாராட்டினார். பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிப் முனீரை புகழ்ந்து பேசிய ட்ரம்ப், ஆசிப் முனீர் தனக்கு பிடித்தமான ஃபீல்டு மார்ஷல் என்று கூறினார். மத்திய கிழக்கில் நிலைத்தன்மையை ஊக்குவிக்க மிகவும் முக்கியமான பங்களிப்பை அவர் செய்தார் என்று அவர் தெரிவித்தார்.
மோடியை பாராட்டிய டிரம்ப்
டிரம்ப் தனது பேச்சின் போது இந்தியாவை சிறப்பான நாடு என்றும் அதன் தலைமை பொறுப்பில் என்னுடைய சிறந்த நண்பர் இருக்கிறார் எனவும் மோடியை பெயர் குறிப்பிடாமல் பாராட்டி பேசினார். அவர் மிகச்சிறப்பான பணிகளை செய்து வருவதாகவும் டிரம்ப் கூறினார்.
-
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications