இந்தியா யானைங்க.. கனடா வெறும் எறும்புங்க! போட்டுத் தாக்கிய அமெரிக்க பென்டகன் முன்னாள் அதிகாரி
வாஷிங்டன்: இந்தியா - அமெரிக்கா இடையே மோதல் போக்கு ஏற்பட்டு உள்ள நிலையில், இந்தியாவை யானை என்றும், கனடாவை எறும்பு எனவும் விமர்சித்து உள்ளார் பென்டகன் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின் தெரிவித்து உள்ளார்.
காலிஸ்தான் தீவிரவாதி நிஜ்ஜார் கொலை தொடர்பாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்தியா மீது முன்வைத்த குற்றச்சாட்டு காரணமாக இரு நாடுகள் இடையேயான மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் இரு நாடுகளில் நட்பு நாடுகளின் நிலைபாடு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. குறிப்பாக அமெரிக்காவின் நிலைபாட்டை பலர் எதிர்பார்க்கின்றனர்.

இந்த நிலையில் அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை தலைமையகமான பென்டகனின் முன்னாள் அதிகாரி, மைக்கேல் ரூபின் இந்தியா - கனடா மோதல் தொடர்பாக கருத்து தெரிவித்து இருக்கிறார். அவர் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், "கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த குற்றச்சாட்டுகளால் கனடாவுக்கே இந்தியாவை விட அதிக ஆபத்துகள் ஏற்படும்.
அமெரிக்காவை பொறுத்தவரை கனடாவா? இந்தியாவா? என்று கேட்டால் இந்தியாவையே அமெரிக்கா தேர்வு செய்யும். கனடாவை காட்டிலும் இந்தியாவே அமெரிக்காவுக்கு பல்வேறு விவகாரங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. தற்போதைய நிலையில் கனடா இந்தியாவுக்கு எதிராக செயல்படுவது எறும்பு ஒன்று யானைக்கு எதிராக போருக்கு செல்வதை போன்றதாகும்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு இருக்கும் ஆதரவு குறைவாகவே இருந்து வருகிறது. அந்நாட்டின் பிரதமர் பதவியைவிட்டு ஜஸ்டின் ட்ரூடோ விலகிய பிறகே, அமெரிக்கா கனடா உடனான நட்புறவை மீண்டும் கட்டி அமைக்கும். மிகப்பெரிய தவறை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரோடோ செய்து இருக்கிறார்.
பின்வாங்கவே முடியாத அளவுக்கு அவரது குற்றச்சாட்டுகள் உள்ளன. அவர் இந்தியாவுக்கு எதிராக சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு எந்த விதமான ஆதாரமும் கிடையாது. அரசுக்கு எதிராக ஏதோ அங்கு உள்ளது. ஒரு பயங்கரவாதிக்கு ஏன் அடைக்கலம் கொடுத்தார்கள் என்பதை கனடா அரசாங்கம் விளக்க வேண்டும்." என்றார்.
தடை செய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பான காலிஸ்தான் டைகர் போர்சின் தலைவரும் கனடா நாட்டை சேர்ந்தவருமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். கொல்லப்பட்ட நிஜ்ஜார் இந்திய அரசால் தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் உள்ளார்.
இவரது மரணம் தொடர்பாக ஜஸ்டின் ட்ரூடோ முன்வைத்த குற்றச்சாட்டுகளே தற்போது பூதாகரமாக வெடித்து உள்ளது. கனடா அரசு இந்திய தூதரை வெளியேற உத்தரவிட்டதும், அதற்கு பதிலடியாக இந்திய அரசு கனடா தூதரை வெளியேற உத்தரவிட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இரு நாடுகள் இடையிலான இந்த மோதல் தொடர்பாக இரு நாடுகளின் நட்பு நாடுகள் அதிகாரப்பூர்வமாக எந்த நிலைபாட்டையும் அறிவிக்கவில்லை. குறிப்பாக அமெரிக்க அரசோ, அதிபர் ஜோ பைடனோ இதுவரை யாருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.
சீனா, ரஷியா இடையே மோதல் போக்கை கடைபிடிக்கும் அமெரிக்காவுக்கும் கனடாவை விட இந்தியாவின் ஆதரவு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. எனவே இந்தியாவுக்கு சாதகமாகவே அமெரிக்கா இருக்கும் என்று கூறப்படுகிறது.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications