ஊழல் அதிகம் உள்ள நாடுகளில் காம்பியா நாட்டுக்கு ஈடாக 96வது இடத்தில் இந்தியா! 3ஆவது ஆண்டாக தொடர் சரிவு
வாஷிங்டன்: டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அதாவது சிபிஐ என்ற அமைப்பு 2024ம் ஆண்டின் ஊழல் அதிகம் நடந்த நாடுகள் லிஸ்ட்டை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா 100க்கு 38 மதிப்பெண்களை மட்டுமே பெற்று 96வது இடத்தில் இருக்கிறது. மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவும் இந்தியாவுடன் ஊழல் மிகுந்த நாடுகள் லிஸ்டில் 96வது இடத்தை பிடித்துள்ளது.
சிபிஐ எனப்படும் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலை வெளியிடும். ஒரு நாட்டில் எந்தளவுக்கு ஊழல் நடைபெறுகிறது என்பதை வைத்து இந்த லிஸ்ட்டை உருவாக்கி வெளியிடும்.

ஊழல் லிஸ்ட்
அதன்படி அந்த அமைப்பு 2024ம் ஆண்டிற்கான ஊழல் குறியீட்டை வெளியிட்டுள்ளது. அதில் உலகின் ஊழல் நிறைந்த நாடுகள் லிஸ்டில் முதல் 100 நாடுகளில் இந்தியா இடம் பெற்றுள்ளது. அந்த பட்டியலில் மொத்தம் 180 நாடுகள் இருக்கும் நிலையில், அதில் இந்தியா 96ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் மூன்று இடங்கள் சரிந்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியா மற்றும் தெற்கு ஆசிய நாடான மாலத்தீவு ஆகியவை இதே இடத்தை பகிர்ந்துள்ளது.
இந்தியா எங்கே:
அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் நடக்கும் ஊழல்களை அடிப்படையாக வைத்து, 0 (அதிக ஊழல்) முதல் 100 (ஊழல் இல்லாத அமைப்பு) மதிப்பெண்களை இந்த சிபிஐ அமைப்பு வழங்கியுள்ளது. அதன்படி இந்தியா இதில் 38 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. கடந்தாண்டு 39 மதிப்பெண்களையும், 2022இல் 40 மதிப்பெண்களையும் இந்தியா பெற்றிருந்த நிலையில், இப்போது 38 மதிப்பெண்களை மட்டுமே பெற்றுள்ளது. இதன் மூலம் ஊழல் நிறைந்த நாடுகள் லிஸ்டில் 96வது இடத்தை இந்தியா பெற்றுள்ளது.
இந்தியாவின் அண்டை நாடுகளில் பாகிஸ்தான் 135வது இடத்திலும், இலங்கை 121வது இடத்திலும், வங்கதேசம் 149வது இடத்திலும், சீனா 76வது இடத்திலும் உள்ளன.
மற்ற நாடுகள்:
இதில் மிகக் குறைவான ஊழல் நடக்கும் நாடாக ஐரோப்பிய நாடான டென்மார்க் இருக்கிறது. டென்மார்க் 100க்கு 90 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. தொடர்ந்து பின்லாந்து (88), சிங்கப்பூர் (84), நியூசிலாந்து (83) ஆகிய நாடுகளும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. லக்சம்பர்க், நார்வே மற்றும் சுவிட்சர்லாந்து 81 மதிப்பெண்களுடன் 5வது இடத்தை பகிர்ந்துள்ளன. சுவீடன் (80) மற்றும் நெதர்லாந்து (78) முறையே 8வது மற்றும் 9வது இடங்களையும் பிடித்துள்ளன. ஆஸ்திரேலியா, ஐஸ்லாந்து, அயர்லாந்து ஆகிய நாடுகள் 77 மார்க்குகளை டாப் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளன.
இதில் மிக மோசமான ஊழல் நிறைந்த நாடாக தெற்கு சூடான் இருக்கிறது. அது மொத்தமாக 100க்கு 8 மதிப்பெண்களை மட்டுமே பெற்றிருக்கிறது. தொடர்ந்து சோமாலியா (9), வெனிசுலா (10), சிரியா (12) நாடுகள் முறையே 179, 178 மற்றும் 177வது இடத்தைப் பிடித்தன.
உலகளவில் நிலைமை என்ன:
இந்த லிஸ்டில் கடந்த 2012ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 32 நாடுகள் தங்கள் நாட்டில் நடக்கும் ஊழலைக் கணிசமாகக் குறைத்துள்ளன. அதேநேரம் 148 நாடுகளில் இதே காலகட்டத்தில் ஊழல் அதிகரித்துள்ளன. ஊழல் மதிப்பெண்களின் சர்வதேச சராசரி 43ஆக இருக்கிறது. பல ஆண்டுகளாகவே சர்வதேச சராசரி 43ஆக உள்ளது. மேலும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போகு மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் ஊழல் மதிப்பெண்களில் 50க்கு கீழ் மதிப்பெண் பெற்றுள்ளன.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications