இந்தியா மீது டிரம்ப் அரசு கோபம்? "ரஷ்யா+ டாலர் எதிர்ப்பு!" இதெல்லாம் நல்லதுக்கு இல்லையாம்! பரபர கருத்து

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தனது ராணுவத் தளவாடங்களை வாங்குவது அமெரிக்காவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டின் வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் தெரிவித்தார். மேலும், சர்வதேச வார்த்தகம் டாலரில் இருந்து விலகிச் செல்ல பிரிக்ஸ் அமைப்பில் இந்தியா முயல்வதைக் குறிப்பிட்ட லுட்னிக் அதற்கும் அதிருப்தி தெரிவித்தார்.

இந்தியா அமெரிக்கா இடையேயான உறவு சிறப்பாகவே இருந்து வருகிறது. இரு நாடுகளும் இணைந்து பல்வேறு விஷயங்களில் இணைந்து பணியாற்றி வருகிறார்கள். அமெரிக்க அதிபரான டிரம்ப்பிற்கும் இந்தியப் பிரதமர் மோடிக்கும் நல்ல நட்பு இருக்கிறது. பல முறை பிரதமர் மோடியை அதிபர் டிரம்ப் நண்பர் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.

India-Russia Ties and BRICS Stance Rub US the Wrong Way Trump Commerce Secretary Lutnick

அமெரிக்க செயலாளர்

மேலும், வரி விவகாரத்திலும் இரு நாடுகளும் இணைந்து ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை உருவாக்கத் தீவிர பேசுவார்ததை நடத்தி வருகிறது. வரும் காலங்களில் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மேம்படவே செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே இந்தியா அமெரிக்கா உறவு குறித்து டிரம்ப் நிர்வாகத்தில் உள்ள அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் தில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார்.

அமெரிக்க டாலரை வர்த்தகத்திற்குப் பயன்படுத்துவதைக் குறைப்பதை ஆதரிக்கும் பிரிக்ஸ் அமைப்புடன் இந்தியா இணைந்து செயல்படுவதும், ரஷ்யாவிடம் இருந்து ராணுவத் தளவாடங்களை வாங்குவதும் அமெரிக்காவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டின் வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் தெரிவித்தார்.

இந்தியப் பொருளாதாரம்

அதேநேரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவை எப்போதும் பாராட்டுவதாகவும் இரு நாடு உறவு சிறப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். USISPF எனப்படும் அமெரிக்கா இந்தியா மன்றத்தின் எட்டாவது உச்சி மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய லுட்னிக், "இந்தியப் பொருளாதாரம் அசாதாரணமானது.. அங்குள்ள மனித வளம் வியக்கத்தக்கது. இந்தியாவின் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. ஆனால் இந்திய அரசு செய்யும் சில விஷயங்கள் அமெரிக்காவிற்குப் பிடிக்கவில்லை.

அதிருப்தி

உதாரணமாக, நீங்கள் பொதுவாக ரஷ்யாவிடம் இருந்து அதிக ராணுவத் தளவாடங்களை வாங்குகிறீர்கள். நீங்கள் ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கினால், அது அமெரிக்காவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தவே செய்யும். அதேநேரம் இப்போது இந்தியா அமெரிக்காவிடமிருந்து இராணுவ தளவாடங்களை வாங்குவதை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. இது வரவேற்கத்தக்க விஷயம்" என்றார்.

கோபம்

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளைக் கொண்ட பிரிக்ஸ் அமைப்பில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. இப்போது சர்வதேச வர்த்தகம் எல்லாம் டாலரில் தான் நடைபெறும் நிலையில், இதனால் அனைத்து நாடுகளும் அமெரிக்காவைச் சார்ந்து இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக வேறு வழியை இந்த நாடுகள் முயல்கிறது. இதற்கு அதிருப்தி தெரிவித்த லுட்னிக், அமெரிக்காவில் நண்பர்களை உருவாக்கவும், மக்களை ஈர்க்கவும் இது சரியான வழி இல்லை எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து அமெரிக்கா - இந்திய வர்த்தக ஒப்பந்தம் குறித்துப் பேசிய லுட்னிக், "இரு நாடுகளும் சரியான நபர்களை நியமித்து பேச்சுவார்த்தை நடத்தினால், மிக விரைவில் அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும். இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் திட்டத்தை நாங்கள் கண்டறிந்துள்ளோம். இது குறித்து நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+