பாகிஸ்தான் - சீனாவை கதறவிட்ட டிரம்ப்.. POK இந்தியாவுக்கு தான் சொந்தம்.. வர்த்தக டீல் மேப்-பை கவனிச்சீங்களா
வாஷிங்டன்: இந்தியா - அமெரிக்கா இடையே நீண்டகாலமாக இழுபறி இருந்த நிலையில் இன்று இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதற்கான வரைவு அம்சங்கள் இருநாடுகளும் சேர்ந்து வெளியிட்டுள்ளன. அதில் இடம்பெற்றிருந்த நம் நாட்டின் வரைபடம் தான் பாகிஸ்தான் மற்றும் சீனாவை கதறவிட்டுள்ளது. அப்படி என்ன நடந்தது? வாங்க பார்க்கலாம்.

அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்தார். இதனால் இருநாடுகள் இடையே பிரச்சனை ஏற்பட்டது. தற்போது இருநாடுகள் இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இடைக்கால வர்த்தக ஒப்பந்தங்களுக்கான வரைவு அம்சங்களை இருநாடுகளும் வெளியிட்டுள்ளன.
அதில் இந்தியாவுக்கான வரி 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது வர்த்தகர்களை ஹேப்பியாக்கி உள்ளது. இதுதொடர்பாக நம் நாடும், அமெரிக்காவும் சேர்ந்து இன்று கூட்டறிக்கை வெளியிட்டது. Uniterd States Trade Representative என்ற எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்ட இந்திய வரைபடம் தான் பாகிஸ்தான் மற்றும் சீனாவை கதறவிட்டுள்ளது.
மேப்பில் POK
அமெரிக்கா வெளியிட்ட இந்திய வரைபடத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (Pakistan Occupied Kashmir or POK) மற்றும் அக்சாய் சின் பகுதிகள் இடம் பெற்று இருந்தன. இரண்டுமே நம் நாட்டுக்கு சொந்தமான இடங்கள் தான்.
ஆனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாகிஸ்தான் உரிமை கொண்டாடி வருகிறது. அக்சாய் சின் பகுதியை சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதுதொடர்பாக நமக்கும், பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கும் இடையே நீண்டகாலமாக பிரச்சனை உள்ளது.
தனித்து காண்பிக்காத அமெரிக்கா
இது அமெரிக்காவுக்கு நன்கு தெரியும். மேலும் இந்த விவகாரங்களில் அமெரிக்கா பெரிய அளவில் தலையீடு செய்யாது. குறிப்பாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை நம் நாட்டின் வரைபடத்துடன் சேர்த்து அமெரிக்கா வரைபடம் வெளியிடுவது இல்லை. பாகிஸ்தானுடனும் சேர்ப்பது இல்லை. மாறாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை தனியாக கோடிட்டு பிரித்து காட்டுவதே அமெரிக்காவின் வழக்கம்.
From tree nuts and dried distillers’ grains to red sorghum and fresh and processed fruit, the U.S.-India Agreement will provide new market access for American products. pic.twitter.com/mqpP10LJp1
— United States Trade Representative (@USTradeRep) February 6, 2026
ஆனால் இப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்கு தான் சொந்தம் என்பதை பகிரங்கமாக காட்டி உள்ளது அமெரிக்கா. இது தான் பாகிஸ்தான் தலையில் இடியை இறக்கி இருக்கிறது.
நெருக்கமாக இருந்தும்..
இதில் கவனிக்க கூடிய விஷயம் என்னவென்றால் சமீபகாலமாக நம் நாட்டை விட பாகிஸ்தான் தான் அமெரிக்காவுடன் நெருக்கமாக செயல்பட்டு வருகிறது. பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து நடந்த போரில், நம் ராணுவத்திடம் பாகிஸ்தான் மண்டியிட்டது. பாகிஸ்தான் நம்மிடம் கெஞ்சி போரை நிறுத்தியது. இதில் அமெரிக்காவின் தலையீடு கிடையாது.
ஆனால் டிரம்போ, இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக உரிமை கொண்டாடி வருகிறது. இதனை நம் நாடு ஏற்கவில்லை. ஆனால் பாகிஸ்தானோ, டிரம்ப் தான் போரை நிறுத்தினார். அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று மேடைக்கு மேடை கூவி வருகிறது.
மதிக்காத டிரம்ப்
அதுமட்டுமின்றி பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் அந்த நாட்டின் ராணுவ தளபதி அசீம் முனீர் ஆகியோர் டிரம்பை அடிக்கடி சந்தித்து ‛ஐஸ்' வைத்தனர். ஆனால் இப்போது பாகிஸ்தானை டிரம்ப் துளியும் மதிக்கவில்லை.
நம் நாட்டுக்கான வரியை 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைத்துள்ளதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்கு தான் சொந்தம் என்று வரைபடத்தை வெளியிட்டுள்ளார்.
சீனாவுக்கும் விழுந்த அடி
அதேபோல் அமெரிக்கா வெளியிட்ட இந்திய வரைபடத்தில் நம் நாட்டுக்கு சொந்தமான அக்சான் சின் பகுதியை சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இந்த இடமும் அமெரிக்கா வெளியிட்ட வரைபடத்தில் உள்ளது. இதனால் சீனாவும் கோபமாகி உள்ளது.
இப்படி ஒரே நேரத்தில் அமெரிக்கா நம் நாட்டின் எதிரிகளாக இருக்கும் பாகிஸ்தான், சீனாவை இந்திய வரைபடம் கொண்டு சீண்டிஉள்ளது சர்வதேச அரசியலில் முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது.
-
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
நேட்டோவில் இருந்து விலகும் அமெரிக்கா? உலக நாடுகளுக்கே அதிர்ச்சி கொடுத்த டிரம்ப்.. இப்படி ஆகிடுச்சே -
நடுக்கடலில் கச்சா எண்ணெய் உடன் யூடர்ன் போட்ட ஈரான் கப்பல்.. இந்தியாவுக்கு வராமல் சீனா நோக்கி பயணம்! -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது?












Click it and Unblock the Notifications