சூப்பரா படிப்பார்.. நல்லா பியானா வாசிப்பார்.. திடீர் மரணம்.. குளத்தில் மிதந்த மாணவி.. ஷாக்!
இந்திய அமெரிக்க மாணவி குளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
வாஷிங்டன்: உடலில் காயங்கள் எதுவும் இல்லை.. ஆனால் குளத்தில் சடலமாக மிதந்துள்ளார் இளம்பெண் ஒருவர்.. அமெரிக்காவில் உயிரிழந்த இந்த பெண் இந்திய வம்சாவளி மாணவி ஆவார்..
இண்டியானாவில் செயல்பட்டு வரும் நோட்ரே டேம் பல்கலைக்கழகத்தில படித்து வந்தவர் அன்ரோஸ் ஜெர்ரி... இளங்கலை அறிவியல் படித்து வந்தார்.. வயது 21 ஆகிறது.. கேரள மாநிலத்தின் எர்ணாகுளத்தில் பிறந்தவா்.

இவருடைய அப்பா சாப்ட்வேன் என்ஜினியர் என்பதால், பணிநிமித்தமாக அமெரிக்காவிலேயே 2000-ம் வருடம் குடும்பத்தோடு போய் செட்டில் ஆகிவிட்டனர்.
இந்நிலையில், கடந்த 21-தேதியில் இருந்து அன்ரோஸ் ஜெர்ரியை காணவில்லை.. அதனால் பதறி போன பெற்றோர் பல இடங்களில் மகளை தேடினர்.. இறுதியில் போலீசில் புகார் செய்யவும், அன்ரோஸை அவர்களும் தீவிரமாக தேடி வந்தனா்.
தற்போது, நோட்ரே டேம் பல்கலைக்கழக குளத்தில் அவர் பிணமாக மிதந்ததை கண்டு அதிர்ந்தனர்.. இது தொடர்பாக நோட்ரா டேம் போலீசார் சொல்லும்போது, "கடந்த 21-ம் தேதி சாயங்காலத்தில் இருந்தே அன்ரோஸ் ஜெர்ரியை காணவில்லை. அதனால் அவரை கண்டுபிடிப்பதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டோம்.. இப்போது அவர் படிக்கும் பல்கலைக்கழகத்தின் ஏரியில் இருந்தே அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
ஆனால் உடலில் எந்த காயங்களும் இல்லை. அதனால் பல்கலைக்கழகத்தில் உடற்பயிற்சி செய்தபோது, தவறி ஏரியில் விழுந்திருக்கலாம் என்று சந்தேகப்படுகிறோம்.. எனினும் இதுதொடா்பாக தொடா்ந்து விசாரித்து வருகிறோம்" என்றனர்.
உயிரிழந்த ஜெர்ரி நல்லா படிப்பாராம்.. படு புத்திசாலியாம்.. நன்றாக பியானோவும் வாசிப்பாராம்.. நல்ல தோழியை இழந்துவிட்டோம் என்று பல்கலை மாணவர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.
-
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications