பிரபல அமெரிக்க அரசியல்வாதிக்கு விசா மறுத்த இந்தியா! அடுத்து நடந்த குழப்பம்! பெரும் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள இந்தியர்களை நாடுகடத்த டிரம்ப உத்தரவிடுவாரோ என மக்கள் அச்சத்தில் உள்ளனர். இது ஒரு பக்கம் இருக்க திடீரென அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல அரசியல்வாதி ஒருவருக்கு இந்தியத் தூதரகம் விசா வழங்க மறுத்துள்ளது. இதனால் அங்குச் சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் கூட ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு அவர் பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். குறிப்பாகச் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுக்கு எதிராக டிரம்ப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

usa trump visa

அமெரிக்க வாழ் இந்தியர்கள்:

சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் நாடு கடத்தப்பட்டு வருகிறார்கள். சமீபத்தில் கூட அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைந்த இந்தியர்கள் இதுபோல தான் நாடு கடத்தப்பட்டனர். மேலும், வரும் நாட்களில் வெளிநாட்டினருக்கு அமெரிக்கா கூடுதலாக விசா கட்டுப்பாடுகளைக் கூட விதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு பக்கம் இறுக்க திடீரென அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல அரசியல்வாதி ஒருவருக்கு இந்தியா விசா மறுத்துள்ளது. இதற்கு என்ன காரணம்.. பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

ஒரு நாடு மற்றொரு நாட்டை சேர்ந்தவருக்கு விசா மறுப்பது சாதாரணமாக நடப்பது தான். நம்மில் சிலருக்கும் கூட அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு விசா கிடைக்காமல் போகலாம். இது அரசியல்வாதிகளுக்கு நடக்கும் போது தான் அது பேசுபொருள் ஆகிறது. நமது நாட்டை சேர்ந்த சில அரசியல்வாதிகளுக்குக் கூட அமெரிக்கா விசா தருவதில்லை. அதுபோல தான் இப்போது இந்தியாவும் அமெரிக்க அரசியல்வாதிக்கு விசா மறுத்துள்ளது.


க்ஷாமா சாவந்த்:

அமெரிக்க அரசியல்வாதி க்ஷாமா சாவந்த் அவசரக்கால விசா கோரி விண்ணப்பித்த நிலையில், அதை சியாட்டிலில் உள்ள இந்தியத் தூதரகம் மறுத்துள்ளது. ஆனால், அதன் பிறகு அங்குச் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதாவது விசா மறுக்கப்பட்ட பிறகு, மர்ம நபர்கள் சிலர் அலுவலக நேரத்திற்குப் பிறகு சியாட்டிலில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் நுழைய முயன்றதாகவும் இதனால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டி இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்தியத் தூதரகம் மேலும் கூறுகையில், "இன்று, தூதரக வளாகத்திற்குள் குறிப்பிட்ட நபர்கள் அலுவலக நேரத்திற்குப் பிறகு அனுமதியின்றி நுழைய முயன்றதால் சட்டம்- ஒழுங்கு பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டது. இதனால் போலீசாரை அழைக்க வேண்டி இருந்தது.. பலமுறை கோரிக்கை விடுத்தும், இந்த நபர்கள் தூதரக வளாகத்தை விட்டு வெளியேற மறுத்து, தூதரக ஊழியர்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டனர்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.


அதிருப்தி:

யார் நுழைய முயன்றனர்.. அதன் பிறகு என்ன நடந்தது என்பது குறித்த தகவல்களைத் தூதரகம் பகிரவில்லை. இருப்பினும், சியாட்டிலின் முன்னாள் நகர சபை உறுப்பினரான சாவந்த் தரப்பில் சில முக்கிய தகவல்கள் பகிரப்பட்டுள்ளது. அதாவது அவர் தான் இந்தியத் தூதரகத்தில் நுழைய முயன்றுள்ளார். ஆனால், நிராகரிக்கப்பட்டோர் லிஸ்டில் இருந்ததால் தூதரக அதிகாரிகள் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. இதுவே பிரச்சினைக்குக் காரணமாகும்.

க்ஷாமா சாவந்த்திற்கு விசா நிராகரிக்கப்படுவது இது முதல்முறை இல்லை. அவரது தாயார் பெங்களூரில் வசித்து வரும் சூழலில், அவரை பார்க்க விசா கோரி மூன்று முறை விண்ணப்பித்ததாகவும் மூன்று முறையும் விசா நிராகரிக்கப்பட்டதாகவும் க்ஷாமா சாவந்த் தெரிவிக்கிறார். தற்போது தாயார் நோய்வாய்ப்பட்டு இருக்கும் சூழலில், அப்போதும் விசா வழங்க மறுப்பது ஏற்கவே முடியாது என அவர் சாடியுள்ளார்.


யார் இந்த க்ஷாமா சாவந்த்:

சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த க்ஷாமா சாவந்த் கடந்த காலங்களில் பல முறை பாஜகவை விமர்சித்துள்ளார். மோடி அரசு சிறுபான்மையினருக்கு எதிராக இருப்பதாகச் சாடியுள்ளார். குறிப்பாக சிஏஏ மற்றும் என்ஆர்சி விவகாரத்தில் மோடி அரசுக்கு எதிராக ஒரு தீர்மானத்தையும் கொண்டு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+