டாலருடன் போட்டி போட முடியாது.. இந்திய கரன்சியை கேலி செய்த அமெரிக்க நிதி அமைச்சர்.. வாய்க்கொழுப்பு

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ‛‛டாலருக்கு பதில் இந்தியா தனது சொந்த ரூபாயில் வர்த்தகம் செய்தால் கவலைப்படுவீர்களா?'' என்ற கேள்விக்கு அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட் நம் நாட்டின் கரன்சியை கேலி செய்து பேசி உள்ளார். ‛‛எனக்கு கவலைப்பட நிறைய விஷயங்கள் உள்ளன. ஆனால் அதில் இந்த விஷயம் இல்லை. டாலருடன் ரூபாயால் போட்டி போட முடியாது. இந்தியாவின் கரன்சி எப்போது இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது'' என்று சீண்டி உள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்துள்ளார். அமெரிக்காவுடனான வர்த்தக பற்றாக்குறையை சரிசெய்யாதது, டிரம்பின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவது உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி இந்த வரியை டிரம்ப் விதித்துள்ளது.

indian-currency-is-currently-near-an-all-time-low-its-cannot-rival-dollar-us-treasury-secretary-mo

இது அடாவடி வரியாகும். ரஷ்யாவிடம் இருந்து அமெரிக்காவும் பல பொருட்களை வாங்கி வருகிறது. அதேபோல் சீனா நம்மை விட கூடுதலாக கச்சா எண்ணெயை ரஷ்யாவிடம் வாங்குகிறது. ஆனால் அதை எல்லாம் புறம்தள்ளிவிட்டு நம் நாட்டின் மீது டிரம்ப் வன்மத்தில் வரியை விதித்துள்ளார். இதனால் அமெரிக்கா - இந்தியா இடையேயான உறவில் பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க நிதி அமைச்சர்

அதுமட்டுமின்றி அவரது ஆலோசகர்கள், அமைச்சர்கள் நம் நாட்டை தொடர்ந்து சீண்டி வருகின்றனர். இந்நிலையில் தான் நம் நாட்டின் கரன்சியான ரூபாயை அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட் வாய்க்கொழுப்புடன் கேலி செய்துள்ளார்.

Fox News சேனலுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது தொகுப்பாளர், ‛‛இந்தியா டாலருக்கு பதிலாக அந்த நாட்டின் கரன்சியான ரூபாயை வைத்து வர்த்தகம் செய்தால் அதுபற்றி கவலைப்படுவீர்களா?'' என்ற கேள்வியை முன்வைத்தார்.

இந்திய கரன்சி பற்றி கேலி

அதற்கு ஸ்காட் பெசன்ட் நம் நாட்டின் கரன்சியின் மதிப்பை குறைத்து மதிப்பிட்டு வாய்க்கொழுப்புடன் பதிலளித்தார். இதுதொடர்பாக அவர், ‛‛நான் கவலைப்படுவதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன. அதில் இந்திய ரூபாய் பற்றிய விஷயம் இல்லை.

இந்திய கரன்சி எப்போதும் இல்லாத அளவுக்கு மதிப்பு குறைந்துள்ளது. இதனால் டாலர் மட்டும் தான் உலகளாவிய வர்த்தகத்தில் இருக்கும்'' என்று திமிராக பேசியுள்ளார்.

இந்திய நாணய மதிப்பு சரிவு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. நேற்றயை நிலவரப்படி ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.87.965 என்று இருந்தது. இன்றைய (ஆகஸ்ட் 29ம் தேதி) நிலவரப்படி அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.88.21 என்று இருந்தது.

இதனை குறிப்பிட்டு டொனால்ட் டிரம்ப் ஏற்கனவே நம் நாட்டின் பொருளாதாரத்தை செத்துப்போனதாக கூறியிருந்தார். இப்போது அவரது நிதி அமைச்சர் நம் நாட்டின் கரன்சியை கேலி செய்து பேசியிருக்கிறார். இப்படி வாய்ச்சவடால் விட்டாலும் கூட அமெரிக்காவுக்கு இன்னும் நம் நாட்டை பார்த்து ஒருவித அச்சம் உள்ளது.

பிரிக்ஸை பார்த்து அலறும் அமெரிக்கா

அதற்கு காரணம் பிரிக்ஸ் கூட்டமைப்பு தான். பிரிக்ஸ் கூட்டமைப்பு என்பது கடந்த 2009ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா உள்ளிட்டவை இருந்தன. அதன்பிறகு தென்ஆப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈரான், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளும் இணைந்தன. இந்த கூட்டமைப்பில் இன்னும் பல நாடுகள் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன. இந்த கூட்டமைப்பில் அமெரிக்கா இல்லை.

அதேவேளையில் சீனா, ரஷ்யா உள்ளிட்ட வல்லரசு நாடுகளும், இந்தியா உள்ளிட்ட வளரும் நாடும் இந்த கூட்டமைப்பில் இருப்பது அமெரிக்காவின் தூக்கத்தை கெடுத்து வருகிறது. இந்த பிரிக்ஸ் கூட்டமைப்பு உலகளாவிய வர்த்தகத்துக்கு டாலருக்கு மாற்றாக வேறு கரன்சியை கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருகிறது. தற்போது டிரம்பின் அடாவடி வரியால் பிரிக்ஸ் நாடுகள் கடும் அதிருப்தியில் உள்ளன.

டாலரின் கதை முடியும்

இதனால் பிரிக்ஸ் நாடுகள் எங்கே டாலரின் கதையை முடித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் தான் டிரம்ப் உள்ளார். பிரிக்ஸ் நாடுகள் இணைந்து தனி கரன்சி அல்லது தங்களின் நாடுளின் கரன்சியில் உலகளவில் வர்த்தகம் செய்யும்போது டாலரின் மதிப்பு சரியும். இதனால் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து பிரிக்ஸ் கூட்டமைப்பை எதிர்த்து வருகிறார். இந்நிலையில் தான் பிரிக்ஸ் நாடுகளை குறிப்பிட்டு அமெரிக்காவின் கொள்கைகளுக்கு எதிராகச் செயல்படும் நாடுகளுக்கு 10% கூடுதல் வரி விதிக்கப்படும்.

டாலருக்கு நிகராக மாற்று கரன்சியை பயன்படுத்தினால் 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அவ்வப்போது மிரட்டியும் வருகிறார். இப்படி இந்தியா அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் கூட்டமைப்பை பார்த்து அலறும் அமெரிக்காவின் நிதி அமைச்சர் தான் இப்போது நம் நாட்டின் கரன்சியை கேலி செய்து தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+