Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“மோடி ஜி உதவுங்க”.. அமெரிக்காவில் இந்திய “டான்சர்” சுட்டுக்கொலை! நடிகை வெளியிட்ட பகீர் தகவல்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்தியாவை சேர்ந்த நடனக் கலைஞர் அமர்நாத் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் மசூரி மாகாணத்தில் உள்ள செயின்ட் லூயிஸ் பகுதியில் இந்தியாவை சேர்ந்த நடன கலைஞர் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடி நடன கலைஞரான அமர்நாத் கோஸ்தான் சுட்டுக் கொல்லப்பட்டவர். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை கொல்லப்பட்டதாக அவரது நண்பரும் இந்திய தொலைக்காட்சி நடிகையுமான தெவோலீனா பட்டாச்சார்ஜி நேற்று தன்னுடைய எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

Indian dancer Amarnath was brutally shot dead in the US

நடன கலைஞர் அமர்நாத், மட்டுமே அவருடைய பெற்றோரின் ஒரே குழந்தை என தெரிவித்துள்ள நடிகை தெவோலீனா அவரது தந்தை சிறுவயதிலேயே இறந்து விட்டதாகவும், தாயும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டதாகவும் குறிப்பிட்டு உள்ளார். துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டவரின் விபரம் இதுவரை வெளியிடப்படவில்லை எனவும் அமர்நாத்துக்காக குரல் கொடுக்க உறவினர்கள் யாரும் இல்லை எனவும், நண்பர்கள் மட்டுமே உள்ளதாகவும் அவர் வேதனையுடன் பதிவிட்டு உள்ளார்.

தினசரி மாலை நேரம் நடை பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்த அவர் இவ்வாறு திடீரென சுட்டுக் கொல்லப்பட்டு இருப்பதாக தெவோலினா தெரிவித்து இருக்கிறார். “இது தொடர்பாக யாருமே கண்டு கொள்ளவில்லை. ஒரு பிபிஐபி ஆகவோ அல்லது மிக முக்கியமான பிரபலமாகவோ இருந்தாலே தவிர வேறு யாருக்கு என்ன நடந்தாலும் முக்கியத்துவம் தரப்படுவது இல்லை. இறுதிச்சடங்கிற்கு கூட உடலை இன்னும் ஒப்படைக்கவில்லை. கொலைகாரர்கள் தொடர்பாகவும் எந்த ஒரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை. அமெரிக்காவில் உள்ள நண்பர்கள் இறுதிச் சடங்கிற்காக நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.” என்று குறிப்பிட்டு உள்ளார்.

அமெரிக்காவில் உள்ள அமர்நாத்தின் நண்பர்கள் அவரது உடலை கேட்டும் அவர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை என தெரிவித்திருக்கும், தெவோலினா, “இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் தலையிட்டு உதவ வேண்டும்.” என கேட்டுக் கொண்டிருக்கிறார். இதற்கிடையே சுட்டுக் கொல்லப்பட்ட அமர்நாத்தின் மறைவுக்கு சிகாகோவில் உள்ள இந்திய தூதரகம் இரங்கல் தெரிவித்து உள்ளது. அமர்நாத்தின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆறுதல் தெரிவித்து இந்திய தூதரகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில் அமர்நாத் மரணம் தொடர்பாக நடந்து வரும் தடயவியல் சோதனை மற்றும் போலீஸ் விசாரணையை கண்காணித்து வருவதாகவும் உரிய ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் குறிப்பிட்டு உள்ளது.

சுட்டுக் கொல்லப்பட்ட நடனக் கலைஞர் கோஸின் இணையதளத்தில் அவர் குறித்த பல்வேறு விபரங்கள் இடம்பெற்று உள்ளன அதில் அவருக்கும் சென்னைக்குமான ஒரு தொடர்பும் இருக்கிறது. ஆம் கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்தவராக இருந்தாலும் சென்னையில் இவர் கலை பயிற்சி அளித்திருக்கிறார். சென்னையில் உள்ள கலாச்சேரா கலை கல்லூரியில்தான் இவர் நடனமும் பயின்று உள்ளார். இவர் அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் பகுதியில் அமைந்து உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் கலைக் கல்லூரியில் முதுகலை பட்டம் பெற்றவர். கொல்கத்தாவை சேர்ந்த அமர்நாத் மிகச் சிறந்த நடன கலைஞர் மட்டுமின்றி பிஎச்டி பட்டமும் பெற்றவராவார். இவரது கோர மரணம் அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்து உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+