தினசரி சம்பளமாக ரூ.52 லட்சம்.. உலக வங்கி தலைவராகும் இந்தியாவின் அஜய் பங்கா! இவ்வளவு சொத்தா?ஆஹா
அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனை தலைமையிடமாக கொண்டு உலக வங்கி செயல்பட்டு வரும் நிலையில் அதன் தலைமை பொறுப்புக்கு இந்தியாவில் பிறந்த அஜய் பங்கா பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
வாஷிங்டன்: உலக வங்கியின் தலைவராக டேவிட் மல்பாஸ் உள்ள நிலையில் விரைவில் அந்த பதவியில் இருந்து விலக உள்ளார். இதையடுத்து புதிய தலைவராக இந்தியாவில் பிறந்து இங்கேயே படித்த மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த அஜய் பங்காவின் பெயரை அமெரிக்க அதிபர் ஜோபைடன் பரிந்துரைந்துள்ளார். இந்நிலையில் தான் அஜய் பங்கா பற்றிய தெரியாத பல விஷயங்கள் தற்போது வெளியாகி உள்ளன. இந்நிலையில் தான் அவர் மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றியபோது பெற்ற தினசரி சம்பளம் பற்றியும், அவரது சொத்து விபரங்களும் வெளியாகி உள்ளன.
அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் நகரை தலைமையிடமாக கொண்டு உலக வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த உலக வங்கி என்பது வளரும் நாடுகளில் நிலவும் வறுகையை குறைத்து மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு இயங்கி வருகிறது. மேலும் முதலீட்டு திட்டங்களுக்கு கடன்கள் வழங்கும் நிறுவனமாகவும் இந்த உலக வங்கி செயல்பட்டு வருகிறது.
உலக வங்கியின் தலைவர் என்பது பொதுவாக அமெரிக்காவை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். உலக வங்கியை பொறுத்தமட்டில் எழுதப்படாத அதேநேரத்தில் பாரம்பரியமாக பின்பற்றப்படும் விதிமுறை ஒன்று உள்ளது. அதாவது சர்வதேசய நாணய நிதிய தலைவராக தொன்றுதொட்டு ஐரோப்பியர்கள் தேர்வாவது போன்று உலக வங்கியின் தலைவராக எப்போதும் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் தான் நியமனம் செய்யப்படுவார்கள்.

உலக வங்கி தலைவராகும் இந்தியர்
இந்நிலையில் தான் தற்போது இந்த பாரம்பரியம் உடைக்கப்படுதற்கான சாத்தியக்கூறுகள் உருவாகி உள்ளன. இதற்கு இந்தியாவில் பிறந்து இந்தியாவிலேயே படித்த அஜய் பங்கா என்பவர் தான் காரணம். அதாவது தற்போது உலக வங்கியின் தலைவராக டேவிட் மால்பஸ் உள்ளார். இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு வரை உள்ளது. இருப்பினும் அவர் முன்கூட்டியே பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். வரும் ஜூன் மாதம் அவர் பதவி விலகுவது உறுதியாகி உள்ளது. இந்நிலையில் தான் உலக வங்கியின் புதிய தலைவராக இந்தியாவில் பிறந்த அஜய் பங்காவை நியமனம் செய்ய அமெரிக்க அதிபர் ஜோபைடன் பரிந்துரைத்துள்ளார்.

ஏறக்குறைய உறுதி
தற்போதைய சூழலில் உலக வங்கி தலைவராக அஜய் பங்கா தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இவரது பரிந்துரைக்கு உலக வங்கியின் இயக்குநர்கள் வாரியம் ஒப்புதல் அளித்துவிட்டால் உலக வங்கியின் தலைவராக அஜய் பங்காவின் நியமனம் உறுதி செய்யப்படும். மேலும் உலக வங்கி தலைவராக பொறுப்பேற்கும் முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெறுவார். இந்நிலையில் தான் தற்போது அஜய் பங்கா பற்றிய பல்வேறு விஷயங்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றன. அதன் விபரம் வருமாறு:

மகாராஷ்டிராவை சேர்ந்தவர்
உலக வங்கியின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள அஜய் பங்காவின் வயது 63 ஆகும். மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த அஜய் பங்காவின் முழுப்பெயர் அஜய் பால் பங்கா என்பதாகும். இவரது தந்தையின் பெயர் ஹர்பஜன் பங்கா. இவர் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரை சேர்ந்த இவர் இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரலாக பணியாற்றி மகாராஷ்டிராவில் குடிபெயர்ந்தார். அஜய் பங்கா ஹைதராபாத் பப்ளிக் பள்ளியில் படித்ததார். அதன்பிறகு டெல்லியில் உள்ள செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பிஏ பொருளாதார படிப்பை படித்தார். அதன்பிறகு அகமதாபாத் ஐஐஎம்-மில் நிர்வாகவியலில் முதுகலை பட்டம் பெற்றார்.

பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவிப்பு
இவர் கடந்த 1981ல் நெஸ்லே நிறுவனத்தில் பணியை தொடங்கினார். 13 ஆண்டுகள் அந்த நிறுவனத்தில் பணியாற்றினார். பின்னர் பெப்சிகோ நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். அதன்பிறகு சிட்டி குழுமத்தில் பணியாற்றிய அஜய் பங்கா, நெதர்லாந்தின் 'எக்சோர்' என்ற முதலீட்டு நிறுவனத்தின் தலைவராகவும் செயல்பட்டார். மேலும் மாஸ்டர்கார்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக 11 ஆண்டுகள் வரை பணியாற்றி 2021ல் ஓய்வு பெற்றார். தற்போது ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனத்தின் துணைத் தலைவராக பணியாற்றி வரும் நிலையில் உலக வங்கி தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இந்தியா சார்பில் கடந்த 2016ம் ஆண்டு அஜய் பங்காவுக்கு பத்ம விருதான பத்மஸ்ரீ வழங்கப்பட்டது. இது இந்தியாவின் 3வது மிகப்பெரிய விருதாகும்.

தினமும் ரூ.52 லட்சம் சம்பளம்
இவர் இந்தியாவில் பிறந்திருந்தாலும் கூட தற்போது அமெரிக்க குடியுரிமை பெற்று வசித்து வருகிறார். பல நிறுவனங்களில் ஆலோசகராக செயல்பட்ட இவர் கடந்த 2015ல் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் வர்த்தக கொள்கை மற்றும் பேச்சுவார்த்தை தொடர்பான ஆலோசனை குழுவில் அங்கம் வகித்தார். முன்னதாக மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றிய அஜய் பங்காவின் ஒருநாள் சம்பளம் என்பது ரூ.52.6 லட்சமாக இருந்துள்ளது. ஆண்டு வருமானம் ரூ.192 கோடியாக இருந்த நிலையில் தற்போது அவரது சொத்து மதிப்பு என்பது ரூ.1,700 கோடியாக இருப்பதாக கூறப்படுகிறது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications