இந்தியாவின் மானமே போகுது! செக்ஸ் வைத்தால் போதை மாத்திரை இலவசமாம்.. வசமாக மாட்டிய டாக்டர்
வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மருத்துவர் ஒருவர், தன்னிடம் வரும் நோயாளிகளுடன், செக்ஸ் வைத்துக்கொண்டு மருந்துகளை இலவசமாக கொடுத்திருக்கிறார். அதிலும் போதை மாத்திரைகளை அதிக அளவுக்கு இலவசமாக கொடுத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
ஏற்கெனவே அமெரிக்காவின் ஷாப்பிங் மால்களில் திருடி இந்தியர் ஒருவர் சிக்கியிருந்து பெரும் விவாதங்களை கிளப்பியிருந்த நிலையில், தற்போது இந்திய வம்சாவளி டாக்டர் ஒருவர் இந்த பிரச்சனையில் சிக்கியிருப்பது இந்தியாவின் பெயரை கடுமையாக டேமேஜ் செய்திருக்கிறது.

இந்த குற்றச்சாட்டில் சிக்கியிருக்கும் மருத்துவரின் பெயர் ரிதேஷ் கல்ரா. 51 வயதான இவர், முறையான மருத்துவ காரணமின்றி, தனது நோயாளிகளுக்கு பாலியல் சலுகைகளுக்காக மருந்துகளை விநியோகித்திருக்கிறார். இதுகுறித்து அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, செகாக்கஸைச் சேர்ந்த ரிதேஷ் கல்ரா, தனது மருத்துவ அலுவலகத்தில் அதிக வீரியம் கொண்ட ஓபியாய்டுகள் மற்றும் கோடீனுடன் புரோமெதாசின் போன்ற மருந்துகளை நோயாளிகளுக்கு வழக்கமாக பரிந்துரைத்து வந்துள்ளார். இதன் மூலம் அவர் ஒரு "மாத்திரை ஆலையை" நடத்தி வந்திருக்கிறார்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து அமெரிக்க வழக்கறிஞர் அலினா ஹப்பா கூறுகையில், "மருத்துவர்கள் ஒரு உயர்ந்த பொறுப்பில் இருக்கிறார்கள். ஆனால் டாக்டர் கல்ரா அந்தப் பதவியைப் பயன்படுத்தி, போதைக்கு அடிமையாக்கி, பாதிக்கப்படக்கூடிய நோயாளிகளை பாலியல் ரீதியாக சுரண்டி, நியூ ஜெர்சியின் பொது சுகாதார திட்டத்தை மோசடி செய்துள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை கல்ரா 31,000க்கும் அதிகமான ஆக்சிகோடோன் மருந்துச் சீட்டுகளை வழங்கியுள்ளார். ஒரு நாளில் 50க்கும் மேற்பட்ட மருந்துச் சீட்டுகளை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஃபேர் லான்னில் உள்ள ஒரு மருத்துவரும், உள் மருத்துவருமான கல்ரா, நேரில் வராதவர்களுக்கும் ஆலோசனை வழங்கியதாக பொய்யாக பில் செய்துள்ளார் என்று அந்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூ ஜெர்சியில் உள்ள நெவார்க் பெடரல் நீதிமன்றத்தில் கல்ரா ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வீட்டுக் காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருக்கின்றனர். தற்போது அவர் ஒரு மில்லியன் டாலர் பிணையில் விடுவிக்கப்பட்டார். வழக்கு நிலுவையில் இருக்கும் வரை தனது மருத்துவப் பணியை மேற்கொள்ள கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்ராவின் வழக்கறிஞர் மைக்கேல் பல்தசார் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
எப்படி இருப்பினும், இவ்வாறான கடுமையான குற்றச்சாட்டுகளில் இந்திய வம்சாவளியினர் சிக்கியிருப்பது இந்தியா மீதான விமர்சனங்களை அதிகரித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications