இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடையவில்லை..டாலரின் மதிப்பு உயர்வதாகவே பார்க்கிறேன்..நிர்மலா சீதாராமன்
வாஷிங்டன்: இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதாக கூறப்படும் நிலையில், 'இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருவதாக நான் பார்க்க வில்லை என்றும்.. டாலரின் மதிப்பு உயர்வதாகவே நான் பார்க்கிறேன்' என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
அமெரிக்கா சென்றுள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-

டாலர் மதிப்பு வலுவடைந்து வருகிறது
பிற வளரும் நாடுகளின் நாணய மதிப்பை விட ரூபாய் மதிப்பு நன்றாகவே இருந்து வருகிறது. இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைவதாக நான் இதை பார்க்கவில்லை. டாலர் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருவதாகவே இதை பார்க்கிறேன். ரூபாய் மதிப்பு அதிக ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்வதில் ரிசர்வ் வங்கி கவனம் செலுத்தியது. இந்திய ரூபாய் மதிப்பை நிர்ணயிப்பதில் சந்தை நடவடிக்கைகளில் தலையிடவிலை.

ரூபாய் மதிப்பு சரிவதாக கருத முடியாது
அமெரிக்க டாலருக்கு நிகரான பல்வேறு நாட்டு பணத்தின் மதிப்பும் அண்மைக்காலமாக கணிசமாக சரிந்துள்ளது. டாலர் வலுப்பெறுவதாகவே இதை பார்க்க முடியும். ரூபாய் மதிப்பு சரிவதாக இதை கருத முடியாது. பல நாட்டு பணத்தை விட இந்திய ரூபாயின் செயல்பாடுகள் சிறப்பாகவே இருக்கிறது'' இவ்வாறு அவர் கூறினார்.

அமலாக்கத்துறை குறித்து பதில்
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. அதாவது, இதுவரை இல்லாத அளவுக்கு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 82.69 ஆக சரிந்துள்ள நிலையில், நிர்மலா சீதாராமன் மேற்கண்டவாறு பேசியுள்ளார். அதேபோல், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகள் மூலம் அச்சுறுத்தப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து பதிலளித்த நிர்மலா சீதாராமன் கூறியதாவது:- அமலாக்கத்துறை முற்றிலும் சுதந்திரமான அமைப்பு.

பழிவாங்கும் நோக்கத்தோடு..
அமலாக்கத்துறை போன்ற எந்த விசாரணை அமைப்புகளும் பழிவாங்கும் நோக்கத்தோடு பயன்படுத்தப்படவில்லை. எந்த குற்ற செயல்களையும் முதலில் சிபிஐ அல்லது பிற விசாரணை அமைப்புகள் கையில் எடுக்கின்றன. அதன்பிறகே இந்த விசாரணைக்குள் அமலாக்கத்துறை நுழைகிறது.
-
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை! இந்தியாவுக்கு நெருக்கடி! -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம்












Click it and Unblock the Notifications