பூமிக்கு காத்திருக்கும் ஆபத்து.. ஏலியன்களால் சிக்கல்? களத்தில் இறங்கிய நாசா

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: நமது சூரிய குடும்பத்திற்கு கொஞ்சமும் தொடர்பில்லாத பொருள் ஒன்று, பூமியை நெருக்கமாக கடந்து செல்ல இருக்கிறது. இந்த பொருளை வால் நட்சத்திரம் என்று விஞ்ஞானிகள் அடையாளம் கண்டிருக்கின்றனர். இது சூரியனை நெருங்கும்போது அதிலிருந்து மர்ம பொருள் வெளியேறி பூமியை தாக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் அச்சம் தெரிவித்திருக்கின்றனர்.

நமது சூரிய குடும்பத்தில் பூமி உட்பட 8 கோள்கள், ஏராளமான குறுங்கோள்கள், துணை கோள்கள் இருக்கின்றன. இது தவிர கோடிக்கணக்கில் விண்கற்களும் இருக்கின்றன. ஆனால் இவை அனைத்துக்கும் ஒரு விதி இருக்கிறது. அனைத்தும் சூரியனை மையப்படுத்திதான் சுற்றும். ஆனால் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட '3I/அட்லஸ்' எனும் பொருள் சூரியனின் ஈர்ப்பு விசைக்கு கட்டுப்படவில்லை. எனவேதான் இது நமது சூரிய குடும்பத்திற்கு கொஞ்சமும் தொடர்பில்லாதது என்று சொல்கிறோம்.

interstellar space earth

ஆரம்பத்தில் இது ஒரு வால்நட்சத்திரம் என்று சொல்லப்பட்டாலும், ஹார்வர்ட் விஞ்ஞானி அவி லோப் உள்ளிட்ட சில விஞ்ஞானிகள் இதை பறக்கும் தட்டு என்று சொல்கிறார்கள். அதாவது ஏலியன்கள் நம் பூமியை கண்காணிக்க பறக்கும் தட்டை எடுத்துக்கொண்டு வந்திருக்கின்றன என்று கூறியிருக்கின்றனர். எனவே நாசா தனது அத்தனை தொலைநோக்கிகளையும், '3I/அட்லஸ்' நோக்கி திருப்பியிருக்கிறது. இது அக்டோபர் 30 அன்று சூரியனுக்கு மிக அருகில் செல்லும். அதன் பிறகு அது பூமியில் இருந்து வியாழனை நோக்கி பின்னோக்கி நகரும். அது வியாழன் மார்ச் 16 அன்று கடந்து செல்லும்.

இப்படி பூமியை கடந்து போகும்பொதும், சூரியனுக்கு நெருக்கமாக போகும்போதும் மர்ம பொருட்களை விட்டு செல்லலாம், அது மினி பறக்கும் தட்டாக இருக்கலாம் என அவி லோப் மற்றும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் அன்னா பவுலினா லூனா ஆகியோர் சந்தேகம் தெரிவித்திருக்கின்றனர். மட்டுமல்லாது அப்படி எதுவும் நடந்தால் நாசாதான் பூமியை காப்பாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். என்னங்க இது, ஹாலிவுட் படத்துல வர கதை மாதிரி இருக்குனு பொதுமக்கள் பலரும் கூறி வருகின்றனர்.

செய்தியாளர்கள் சந்திப்பில் அவி லோப் கூறுகையில், "3I/அட்லஸ் போன்ற ஒரு தொழில்நுட்பப் பொருள் நம்மைப் பார்வையிடலாம் அல்லது சில மினி-புரோப்களை வெளியிட்டு பூமிக்கு அனுப்பலாம். அவை அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்களாக (UAP) இருக்க கூடும். நாம் அந்த சாத்தியக்கூறு குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்.

3I/அட்லஸ் சூரியனை நெருங்கும் அக்டோபருக்குப் பிறகு வானத்தைக் கண்காணிக்க ஆராய்ச்சி குழுவிடம் கேட்டுக்கொண்டேன். ஏதேனும் சந்தேகத்திற்குரிய செயல்பாடு பூமியின் வளிமண்டலத்தில் தெரிந்தால், மினி-புரோப்கள் கண்காணிக்கிறதா? என்று பார்க்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.

அமெரிக்க எம்பியான லூனா கூறுகையில், "ஏற்கனவே வியாழனுக்கு வெளியே இருக்கும் யுனோ விண்வெளி ஆய்வுக்கலத்தை 3I/அட்லஸ் பாதையை ஆய்வு செய்ய நாசாவை வலியுறுத்தியுள்ளோம். உயிரினம் இருக்கும் பட்சத்தில், அது குறித்து பொதுமக்களுக்குத் தெரிவிப்பது நமது கடமை இல்லையா? எனவேதான் 3I/அட்லஸை ஆய்வு செய்ய சொல்கிறோம்" என கூறியிருக்கிறார்.

எல்லாம் ஓகேதான், ஆனால் உண்மையில் 3I/அட்லஸ் என்பது ஒரு சாதாரண வால் நட்சத்திரமாக இருப்பின் இவர்கள் பேசிய விஷயங்கள் எல்லாம் வெறும் கதைகளாக போய்விடும்தானே! என சந்தேகம் தெரிவித்திருக்கின்றனர். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் வாசகர்களே!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+