ரஷ்ய கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க பரிசீலனை.. புடின் உடனான பேச்சுக்கு பின் டிரம்ப் அறிவிப்பு!
வாஷிங்டன்: ரஷ்ய கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க பரிசீலனை செய்து வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ஈரான் - இஸ்ரேல் இடையிலான போர் காரணமாக உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் வர்த்தகம் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் சூழலில், ரஷ்ய அதிபர் புடின் உடனான பேச்சுவார்த்தைக்கு பின் டிரம்ப் இந்த முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.
ஈரான் - இஸ்ரேல் இடையிலான போர் 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து வருவதால், அதன் பாதிப்பு பல்வேறு நாடுகளிலும் தெரிய தொடங்கி இருக்கிறது. குறிப்பாக கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது. ஏற்கனவே இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து கொள்ள அமெரிக்கா அரசு அனுமதி வழங்கி இருக்கிறது.

ஈரான் - இஸ்ரேல் இடையிலான போர் காரணமாக மேற்காசியாவில் இருந்து கப்பல்கள் மூலம் கச்சா எண்ணெய், எரிவாயு கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் ஹார்முஸ் நீரிணை கடல் வழித்தடம் மூடப்பட்டுள்ளது. இது சர்வதேச நாடுகளில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே இந்தியாவில் சமையம் எரிவாயு சிலிண்டர் விநியோகம் சிக்கலை சந்தித்துள்ளது.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். அதில் டிரம்ப், ஹார்முஸ் நீரிணையில் கச்சா எண்ணெய் விநியோகத்தை ஈரான் தடுத்ததால், இதுவரை அவர்கள் சந்தித்ததைவிட 20 மடங்கு கடுமையான தாக்குதலை அமெரிக்கா தொடுக்கும். ஈரான் ஒரு போதும் ஒரு நாடாக மீண்டெழ முடியாத நிலையை உருவாக்கும் வகையில் எளிதில் அழிக்கக் கூடிய இலக்குகளை தகர்ப்போம்.
மரணமும், நெருக்கும், ஆக்ரோஷமும் ஈரான் மீது பொழியும். ஆனால் அது நடக்கக் கூடாது என்று நம்புகிறேன்.. பிரார்த்தனை செய்கிறேன்.. இதில் அமெரிக்கா ஏற்கனவே பல வழிகளில் வென்றுள்ளது. ஆனால் போதுமான அளவு வெல்லவில்லை. அதேபோல் ரஷ்ய கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்கவும் பரிசீலித்து வருவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
ரஷ்ய அதிபர் புடின் உடன் பேசிய பின்னர் டிரம்ப் இந்த முடிவுக்கு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய அதிபர் புடின் உடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 1 மணி நேரம் வரை நடந்த இந்த பேச்சுவார்த்தையில் ஈரான் போர், உக்ரைன் போர் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், இந்த பேச்சுவார்த்தை வெளிப்படையாக அமைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications