Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு!
வாஷிங்டன்: ஈரானுடனான போரில் திறம்பட வென்றுவிட்டதாகவும், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரம், கத்தார் போன்ற வளைகுடா நாடுகளின் பங்கை பாராட்டுவதாகவும் கூறிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பதற்றத்திற்கு நடுவிலும் ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்படும் என தனக்கு நம்பிக்கை இருப்பதாக கூறியுள்ளார்.
ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுப்பதாக கூறி வந்த அமெரிக்கா, அந்த நாட்டின் மீது கடந்த மாதம் 28 ஆம் தேதி போர் தொடுத்தது. இந்த போர் ஒரு மாதத்தை நெருங்கி உள்ளது.

5 நாட்கள் சண்டை நிறுத்தம்
ஈரான் தலைவர் அயேதுல்லா அலி கமேனியை அமெரிக்கா கொன்ற நிலையில், அதற்கு பழி வாங்கும் விதமாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதலை நடத்தியது. இஸ்ரேல் மீது குண்டு மழை பொழிந்து வருகிறது. உலகின் மிக முக்கிய வர்த்தக வழித்தடமாக உள்ள ஹார்முஸ் ஜலசந்தியையும் ஈரான் மூடியதால் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டது.
இதனால், சர்வதேச அளவில் நெருக்கடி அதிகரிக்க திடீர் திருப்பமாக 5 நாள் சண்டை நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஹார்முஸ் ஜலசந்தியை 48 மணி நேரத்தில் திறக்காவிட்டால் அந்நாட்டின் மின் நிலையங்களை தாக்கி அழிப்போம் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.
பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என மறுப்பு
இதை நிராகரித்த ஈரான், தங்களது மின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தினால் வளைகுடா நாடுகளில் உள்ள மின் நிலையங்களை தாக்குவோம் என்று தெரிவித்தது. இதற்கிடையே ஈரானுடன் ஆக்கப்பூர்வமான பேச்சு வார்த்தை நடந்து வருவதால் ஈரானின் எரிசக்தி மற்றும் மின்நிலையங்கள் மீதான தாக்குதலை 5 நாட்கள் நிறுத்தி வைப்பதாக டிரம்ப் தெரிவித்தார். ஆனால், பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை என்று ஈரான் மறுத்தது.
இந்த நிலையில், இன்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது டிரம்ப் கூறியதாவது:- நாங்கள் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி கொண்டு இருக்கிறோம். மற்றொரு பக்கம் ஒப்பந்தம் ஏற்படுத்த விரும்புகிறோம். ஈரானின் அனைத்து விமான எதிர்ப்பு அமைப்புகளும் பெரும்பாலான ஏவுகணைகளும் இப்போது அழிக்கப்பட்டுவிட்டன.
அணு ஆயுதம் வைக்க மாட்டோம்
உலகிலேயே மிகப்பெரிய மின்சாரம் உற்பத்தி நிலையங்களில் ஒன்றை துல்லியமாக தாக்கும் வாய்ப்பு எங்களிடம் இருந்த போதிலும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்பதால் அதை நிறுத்திவைத்துள்ளோம். அவர்கள்(ஈரான்) எங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பொருத்தமான முறையில் பேசுகிறார்கள் என்பதே 5 நாள் போர் நிறுத்தம் செய்ததற்கு காரணம்.
இதற்கெல்லாம் ஆரம்பமாக இருப்பது ஒரே ஒரு விஷயம்தான். அவர்களிடம் அணு ஆயுதம் இருக்கக் கூடாது. 'முக்கியமான 10 விஷயங்கள் என்ன?' என்று அவர்கள் கேட்டனர். அதற்கு நான், முதல், இரண்டாம், மூன்றாம் முக்கிய காரணம் என அனைத்துமே, அணு ஆயுதம் இருக்கக் கூடாது என்பதுதான் என்று கூறினேன். அவர்கள் அணு ஆயுதம் வைத்து இருக்க போவது இல்லை என்று ஒப்புக்கொண்டுள்ளனர்" என்றார்.
அனைவரையும் கொன்றுவிட்டோம்
மேலும், ஈரானிடம் யாரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது என்று டிரம்பிடம் செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த டிரம்ப், "ஈரானின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களை நாங்கள் கொன்று விட்டோம். இதனால், அவர்கள் புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டியுள்ளது. ஆனால் நாங்கள் அனைவரையும் கொன்றுவிட்டோம்.
புதிய குழு வந்து இருக்கிறார்கள். அதையும் எளிதாக சமாளிக்க முடியும். ஆனால் அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை பார்த்துத் தீர்மானிப்போம். இது ஒரு ஆட்சி மாற்றம் போல உள்ளது, ஏனெனில் தற்போது உள்ள தலைவர்கள், முன்பு பிரச்சனைகளை உருவாக்கிய தலைவர்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவர்களாக உள்ளனர்" என்றார்.
-
பாகிஸ்தான் கூட டிரம்ப்பை மதிக்கல.. அமெரிக்காவை சீண்டும் ஷெரீப் அரசு.. இனி தான் இருக்கு சம்பவம்! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இரவோடு இரவாக பொழிந்த குண்டு மழை.. அமைதி பேச்சுவார்த்தை நடக்கும் போது டிரம்ப் தாக்குதல்.. பதற்றம் -
சமாதான பேச்சுவார்த்தைக்கு நடுவே வேலையை காட்டிய டிரம்ப்.. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா திடீர் தாக்குதல் -
பிடுங்கப்படும் அதிபரின் பவர்.. ஈரான் போரில் படுதோல்வி? 3 மாதங்களை கடந்தும் திணறும் டிரம்ப்! -
கட்டம்கட்டப்பட்ட ஈரான்.. இஸ்ரேல் கைக்கு வந்த 1800 Mark 84 குண்டு.. டிரம்ப் பதிவின் மெகா பின்னணி! -
மீண்டும் வெடிக்கும் போர்..? ஈரானின் பதில் தாக்குதலில் ஷாக்கான அமெரிக்கா.. சிக்கிய F-35 பைட்டர் ஜெட்! -
அடங்க மறுக்கும் ஈரான்.. 2.O தாக்குதலுக்கு ரெடியாகிறதா அமெரிக்கா! டிரம்பின் திட்டம் இதுதான்! -
நான் வந்துட்டேன்டா..மீண்டும் உச்சம் தொட போகும் தங்கம்! அந்த ஒரு வார்த்தைக்காக தான் உலகமே வெயிட்டிங்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை












Click it and Unblock the Notifications