ஹார்முஸ் ஜலசந்தி இனி ஈரானுக்கு சொந்தமில்லை? கைப்பற்றப்போகும் டிரம்ப்? விரைந்த கொடூர ராட்சசன்
வாஷிங்டன்: ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் புரிந்து வருகின்றன. இதனால் ஈரான் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை முடக்கும் வகையில் தனது ஹார்முஸ் ஜலசந்தியை மூடி உலக நாடுகளை பிரச்சனையில் தள்ளி வருகிறது. இந்நிலையில் தான் அமெரிக்கா தனது சக்திவாய்ந்த USS Tripoli என்ற போர்க்கப்பலை மத்திய கிழக்கு நோக்கி அனுப்பி உள்ளது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா கட்டுப்பாட்டில் எடுக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் டிரம்ப் தற்போது அனுப்பி உள்ள இந்த போர்க்கப்பலின் திடுக்கிட வைக்கும் பின்னணி வெளியாகி அதிர வைத்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடர்ந்து போர் புரிந்து வருகின்றன. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. அரபு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் விமானப்படை, கடற்படை, ராணுவ தளங்களை ஈரான் தாக்கி வருகிறது. மேலும் ஈரான் தனக்கு சொந்தமான ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி என்பது பெர்ஷியன் வளைகுடா கடல் மற்றும் ஓமன் வளைகுடா கடல் ஆகியவற்றை இணைக்கும் கடல் வழிப்பாதையாகும். இந்த பாதை வழியாக தான் ஈராக், குவைத், பஹ்ரைன், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய், கேஸ் உள்ளிட்டவை நம் நாடு, வங்கதேசம், சீனா உள்பட பல நாடுகளுக்கு செல்லும்.
ஹார்முஸ் ஜலசந்தியால் பாதிப்பு
இப்போது ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளது. ஈரான் அனுமதியின்றி இந்த பாதையை கடக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் தெரிவித்துள்ளது. இதனால் பல நாடுகளுக்கான கச்சா எண்ணெய், கேஸ் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிற நாடுகளில் இருந்து கப்பல்களில் அரபு நாடுகளுக்கு செல்லும் உணவு பொருட்களின் சப்ளையும் பாதிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப் எடுத்த முடிவு
இது டொனால்ட் டிரம்புக்கு புதிய பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது. அரபு நாடுகள் பலவும் ஹார்முஸ் ஜலசந்தி பிரச்சனைக்கு தீர்வு காணும்படி அமெரிக்காவிடம் முறையிட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏனென்றால் ஈரானின் செயலால் அந்த நாடுகளின் மொத்த வர்த்தகமும் முடங்கி உள்ளது.
இதனால் ஹார்முஸ் ஜலசந்தியை கட்டுப்பாட்டில் எடுக்க டிரம்ப் முடிவு செய்துள்ளார். அதோடு அமெரிக்காவின் பாதுகாப்பில் இந்த வழியாக கப்பல் போக்குவரத்தை மேற்கொள்ள டிரம்ப் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
திரிபோலி போர்க்கப்பல்
இதற்கு தற்போது அமெரிக்காவின் செயல் வலுசேர்க்கிறது. அதாவது மத்திய கிழக்கு பிராந்தியத்தை நோக்கி டொனால்ட் டிரம்ப் அனுப்பிய USS Tripoli என்ற ராட்சச போர்க்கப்பலை அனுப்பி உள்ளார். இந்த போர்க்கப்பல் என்பது சாதாரணமானது ஒன்றும் இல்லை.
ராணுவம், கடற்படை, விமானப்படை என்று முப்படைகளையும் ஒருங்கிணைத்து தாக்குதல் செய்ய இந்த கப்பல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது கடல் மற்றும் நிலத்தில் எதிரிகளின் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.
விமானங்களை சுமக்கும் கப்பல்
அதாவது விமானம் தாங்கி கப்பலாக விமானங்கள், ஹெலிகாப்டர்களை சுமந்து செல்ல இந்த போர்க்கப்பல் பயன்படும். குறிப்பாக 5ம் தலைமுறையை சேர்ந்த அமெரிக்காவி்ன எஃப்-35பி ஸ்டெல்த் ரக போர் விமானங்களை இதில் இருந்து இயக்க முடியும்.
அதுமட்டுமின்றி நிலத்தில் தாக்குதல் நடத்துவதற்கு தேவையான டாங்கி வாகனங்கள் உள்பட பிற ராணுவ தளவாடங்களை இந்த கப்பல் வழியாக கடற்கரைக்கு கொண்டு செல்ல முடியும்.
பெரும் எதிர்பார்ப்பு
இந்த போர்க்கப்பலுடன் 2,500 வீரர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ராணுவம், விமானப்படையை சேர்ந்த வீரர்களின் Quick Response Force படை வீரர்களும் உள்ளனர். இந்த படையினர் மிகவும் திறமைசாலிகள். வலிமையானவர்கள். ஜப்பானில் நிலை நிறுத்தப்பட்டுள்ள இந்த படை வீரர்கள் தற்போது ஹார்முஸ் ஜலசந்தியை நோக்கி செல்வதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே மத்திய கிழக்கில் அமெரிக்காவின் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன், யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் போர்டு உள்ளிட்ட 2 பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இப்படியான சூழலில் மீண்டும் யுஎஸ்எஸ் திரிபோலியை அனுப்ப வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனால் தான் ஹார்முஸ் ஜலசந்தியை டிரம்ப் தனது கட்டுப்பாட்டில் எடுக்கிறாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளது. மேலும் டிரம்ப் இதனை செய்யும்போது ஈரான் கடும் பதிலடியை கொடுக்கும் என்பதால் மத்திய கிழக்கு பிராந்தியம் தற்போது பெரும் பதற்றத்தில் உள்ளது.
-
$300 பில்லியன் கொடுக்க முடியாது.. டிரம்ப் திட்டவட்டம்! ஈரான் முடிவு என்ன? அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா? -
ஈரான் போரில் யாருக்கு வெற்றி..? குண்டை தூக்கிப்போட்ட இஸ்ரேல்..! குழப்பத்தில் டிரம்ப்! -
ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம்.. அதிர்ச்சியில் இஸ்ரேல்! எதிர்ப்பது ஏன்? பின்னணி -
மீண்டும் குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. டிரம்புக்கு தலைவலியாக மாறிய பெஞ்சமின் நெதன்யாகு! -
இஸ்ரேலை கழற்றிவிட நேரம் வந்தாச்சு.. டிரம்ப் எடுக்கப்போகும் முக்கிய முடிவு.. நெதன்யாகு ஷாக்! -
இனி ஹார்முஸ் முழுக்க ஈரானுக்கு தான்.. டிரம்பே சொல்லிட்டாராம்.. குத்தாட்டம் போடும் ஈரான் மக்கள்.. ஏன்? -
இந்தியாவுக்கு சிக்கல் தொடரும்.. ஹார்முஸ் திறக்கப்பட்டாலும் கூட எல்லா பிரச்சனையும் உடனே தீராது! -
ஈரானை நம்புவது ஆபத்து.. டிரம்ப் டீமிற்குள்ளேயே வந்த எதிர்ப்பு.. "அவரே" சொல்லிட்டாராம்! பதற்றம் -
பயிர் கடன் ரூ.75000 தள்ளுபடி விடுங்க! இப்படியொரு விஷயம் நடந்திருக்கு.. மொத்த விவசாய துறையும் ஹேப்பி! -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
நான் வந்துட்டேன்னு சொல்லு.. தலைநிமிர்ந்த தங்கம்! ஒரே அறிவிப்பால் திடுக்குனு உயர்ந்த விலை! என்னாச்சு? -
பஞ்சாயத்து ஓவர்.. அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்! டிரம்ப் சொன்ன குட் நியூஸ்












Click it and Unblock the Notifications