ஈரானை பார்த்து நடுங்கிய டிரம்ப்.. 2 சொந்த போர் விமானத்தையும் சுட்டு வீழ்த்திய அமெரிக்கா.. என்ன நடந்தது?
வாஷிங்டன்: ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்காவின் எஃப் -15 ரக போர் விமானத்தின் பைலட் ஒருவர் ஈரானுக்குள் விழுந்தார். அவரை அமெரிக்கா வெற்றிகரமாக மீட்டது. இருப்பினும் இந்த மீட்பு பணியின் போது ஈரானுக்கு பயந்து அமெரிக்கா தனது 2 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தும் நிலைக்கு தள்ளப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து போர் புரிந்து வருகின்றன. இந்த போர் ஒரு மாதத்தை கடந்து விட்டது. இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை. நாளுக்கு நாள் அமெரிக்கா - ஈரான் இடையேயான மோதல் வலுத்து வருகிறது.

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறந்து அமெரிக்காவின் போர் நிறுத்த ஒப்பந்த்தை ஈரான் ஏற்க வேண்டும் என்று டிரம்ப் மிரட்டி வருகிறார். ஆனால் ஈரான் அதனை ஏற்க மறுத்து வருகிறது. இதனால் போர் தொடர்ந்து தீவிரமாக நடந்து வருகிறது. ஈரான் தொடர்ந்து அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.
ஈரானுக்குள் விழுந்த அமெரிக்க பைலட்
இந்நிலையில் தான் ஈரான் மீது போர் விமானங்கள் மூலம் அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் தான் 2 நாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் அதி நவீன எப்.15 போர் விமானத்தை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. அப்போது ஒரு பைட் பாராசூட் வழியாக தப்பினார். அவரை அமெரிக்காவின் ராணுவ ஹெலிகாப்டர் பத்திரமாக மீட்டது. ஆனால் இன்னொரு பைலட் ஈரானுக்குள் விழுந்தார். அவர் மலை பிரதேசத்தில் அடர் வனத்தில் விழுந்தார். அவரை ஈரான் தேடிவந்தது.
பத்திரமாக மீட்ட அமெரிக்க படைகள்
அதேபோல் அமெரிக்காவும் அந்த பைலட்டை மீட்கும் பணியில் ஈடுபட்டது. இரவு, பகல் என இடைவிடாது அமெரிக்காவின் போர் விமானங்கள் தனது பைலட்டை தேடி மீட்டது. பைலட் இருக்கும் இடத்தை ஈரான் படை வீரர்கள் நெருங்க விடாமல் ஒரு பகுதியில் குண்டுவீசிய அமெரிக்க போர் விமானங்கள், இன்னொருபுறம் பைலட்டை மீட்டது.
அமெரிக்காவின் இந்த ஆபரேஷனில் HH-60W 'ஜாலி கிரீன் II' மீட்பு ஹெலிகாப்டர்கள், A-10 வார்தாக் தாக்குதல் விமானங்கள், HC-130 வான்வழி எரிபொருள் நிரப்பும் மீட்பு விமானம், ரேடாரில் சிக்காமல் பறக்குமு் F-35 போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. இதனால் பைலட்டை மீட்கும் பணியில் அமெரிக்கா வெற்றி பெற்றது.
அமெரிக்க அதிகாரி சொன்ன தகவல்
இந்த மீட்பு பணியை அமெரிக்கா வெற்றிக்கரமாக செய்து முடித்துவிட்டது. எந்த உயிர் பலியும் ஏற்படவில்லை என்று டிரம்ப் தனது ட்ரூத் வலைதளத்தில் கூறினார். இந்நிலையில் தான் தற்போது இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அமெரிக்கா தனது பைலட்டை மீட்கும் பணியின்போது அமெரிக்கா 2 போர் விமானங்களை இழந்துள்ளது. இந்த 2 விமானங்களையும் அமெரிக்க படை வீரர்களை சுட்டு வீழ்த்தி உள்ளனர். இதுதொடர்பாக வால் ஸ்ட்ரீட் ஜர்னலுக்கு அமெரிக்க அதிகாரி ஒருவர் முக்கிய தகவலை அளித்துள்ளார்.
2 போர் விமானங்கள் போச்சே
அமெரிக்க அதிகாரி சொன்னதாக வெளியாகி உள்ள செய்தியில், ''MC-130J ரகத்தை சேர்ந்த 2 போர் விமானங்கள் ஈரானில் பைலட் மீட்பு பணியில் ஈடுபட்டது. அப்போது இரு விமானங்களும் சிக்கலில் சிக்கி கொண்டன. இதனால் அந்த விமானங்கள் ஈரானிடம் சிக்கி கொள்ளும் நிலை வந்தது. இதனால் அந்த 2 விமானங்களையும் அழிக்கப்பட்டது'' என்றார்.
இதுதொடர்பாக, ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் காலிபாஃப், அமெரிக்க தனது சொந்த விமானங்களை சுட்டு வீழ்த்தியதில் உடைந்த பாகங்களின் போட்டோக்களை வெளியிட்டு கிண்டல் செய்துள்ளார். மேலும் ஈரான் ஊடகங்களில் இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது. அதில், ''ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC) சார்பில் 7 அமெரிக்க போர் விமானங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன''. ஆனால் இதனை அமெரிக்கா இன்னும் உறுதி செய்யவில்லை.
-
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
நீங்கள் தனித்து விடப்படுவீங்க.. பெஞ்சமின் நெதன்யாகுவை போனில் லெஃப்ட் ரைட் வாங்கிய டிரம்ப்! -
அடுத்தடுத்து நிலநடுக்கம்.. காலையிலேயே குலுங்கிய ஈரான்.. கியூபாவில் 150 ஆண்டுகளில் இல்லாத அதிர்வு -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
அமெரிக்க தாக்குதலால் பற்றி எரிந்த கப்பல்! நடுக்கடலில் தவித்த இந்தியர்கள் பத்திரமாக மீட்பு..திக் திக் பின்னணி -
டிரம்ப் போட்ட அந்த ஒரு போஸ்ட்.. கப்சிப் ஆன ஈரான்.. மத்திய கிழக்கில் ஒரே நேரத்தில் எல்லாம் மாறுதே -
நாட்டில் 21 இடங்களுக்கு குறி.. பதம் பார்த்த ஈரான் IRGC ராணுவ படை.. அலறிய அமெரிக்கா! -
இந்தியர்கள் இருந்த படகை குறிவைத்து தாக்குதல்.. நடுக்கடலில் தத்தளித்த 24 பேர்.. திக்திக் சம்பவம் -
ஹார்முஸ், பாப் அல்-மண்டெப் இரண்டையும் மூடிய ஈரான்..? மொத்த வர்த்தகமும் முடக்கம்.. உலக நாடுகள் ஷாக் -
இஸ்ரேல் - ஈரான் இடையில் திடீர் போர் நிறுத்தம்! பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அதிரடி அறிவிப்பு! -
இஸ்ரேல் கப்பலை கண்டதும் சுட உத்தரவு.. பாப் அல்-மன்டெப் கண்ட்ரோலில் எடுக்கும் ஹவுதி!











Click it and Unblock the Notifications