கல்லறைகளில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டால் என்ன செய்வாங்க.. சவப்பெட்டி ஏன் செவ்வகமாக இருக்கு தெரியுமா?
வாஷிங்டன்: தினமும் ஏராளமான உடல்கள் புதைக்கப்படுகிறது. அங்கு கல்லறையும் அமைக்கப்படுகிறது.. அப்படி கல்லறைகள் அமைக்கப்பட்டு கொண்டே இருந்தால் உடல்களை புதைக்க எப்படி இடம் இருக்கும்.. அமெரிக்காவில் உடல்களை புதைப்பதில் பிரச்சனை இருக்கிறது. அங்கு எப்படி சமாளிக்கிறார்கள். அதற்கு அவர்கள் வைத்திருக்கும் தீர்வு என்ன என்பதை இப்போது பார்ப்போம்.
கொஞ்சம் யோசித்து பாருங்கள்.. இந்த பூமியில் இப்போது வாழ்ந்து கொண்டிருப்பர்களை விட இறந்தவர்கள் எண்ணிக்கை மிக மிக அதிகம். அப்படி இருக்கும் போது, கல்லறைகள் அதிகரிக்க அதிரிக்க உலகின் பல்வேறு பகுதிகளில் புதைக்கவே இடம் இருக்காது அல்லவா.. இப்படியான சூழலில் கல்லறைகள் ஒரு போதும் இடமில்லாமல் இயங்காது என்ற கட்டுக்கதைகளும் உள்ளன. இந்நிலையில் கல்லறைகளுக்குகு மாற்று ஏற்பாடுகளையும் உலக நாடுகள் செய்து தானே ஆக வேண்டும்.

ஆம் உலகின் பல்வேறு நாடுகள் அதற்கு மாற்று ஏற்பாடுகளை செய்கின்றன. அமெரிக்காவில கல்லறைகள் எண்ணிக்கை அதிகம் ஆனதால் புதைப்பதில் பிரச்சனை இருந்தது. இதற்கு அந்த நாட்டில் என்ன தீர்வை ஏற்படுத்தினார்கள் என்பது குறித்து அமெரிக்காவின் இறுதி சடங்கு இயக்குனர் விக்டர் எம் ஸ்வீனி பேசியதை இப்போது பார்ப்போம்.
தனியார் செய்தி ஊடகம் ஒன்றுக்கு விக்டர் பேட்டி அளித்தார். அப்போது விக்டரிடம், மயானத்தில் ஏன் இடப்பற்றாக்குறை ஏற்படுவதே இலலையா என்று சிலர் கேட்டனர். அதற்கு விக்டர் அளித்த பதிலில், "கல்லறைகள் எப்போதுமே இருக்கும் இடத்தை விட்டு மாறுவது இல்லை. எனவே சில சமயங்களில் மயானங்களில் இடவசதியில் சிக்கல் ஏற்படுவது உண்மை தான்.
அமெரிக்காவின் பெரிய பெருநகரங்களில், கல்லறை பிரச்சனை காரணமாக , பல குடும்பங்கள் தங்கள் அன்புக்குரியவர்களை ஏற்கனவே இருக்கும் கல்லறைகளின் மேல் புதைக்கும் நிகழ்வுகள் நடந்துள்ளன.
அதேநேரம் குறிப்பிட்ட நாடுகளில் உங்களுக்கு கல்லறை இடத்தை வாடகைக்கு விடுகிறார்கள். ஜெர்மனியில் இப்படி கல்லறையை வாடகைக்கு விடுவது நடக்கிறது. ஜெர்மனியில் ஏற்கனவே புதைத்த கல்லறை இடத்தில் உங்கள் தாய் மற்றும் தந்தைக்கு மட்டும் தான் அல்லது உங்கள் அன்பிற்கு உரியவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்று ஒதுக்கிவிட முடியாது. ஏனெனில் ஜெர்மனியில் கல்லறைகள் வாடகைக்கு மட்டுமே கிடைக்கும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு வாடகை காலாவதியாகும் . அப்போது கல்லறை அதிகாரிகள் இறந்தவர்களை தோண்டி, பின்னர் ஒரு பொதுவான கல்லறையில் வேறு இடங்களில் மாற்றிவிடுவார்கள் என்றார்.
விக்டரிடம் இன்னொரு கேள்வி முன்வைக்கப்பட்டது. அதாவது ஒருவர் இறந்தவுடன் அவரது வாயை மூட என்ன வழிகளை மேற்கொள்வீர்கள்" .. வாயை தைத்துவிடுவீர்களா என்று கேட்டார்கள். அதற்கு பதில் அளித்த விக்டர், இறந்தவர்களின் உதடுகளை பொதுவாக நாங்கள் தைக்க மாட்டோம். ஏனென்றால் அப்படி செய்ய நிறைய நேரமும் நுணுக்கமும் எங்களுக்கு தேவைப்படும். ஆனால் இறந்தவர்களின் வாயை மூடுவதற்கு இரண்டு வழிகளை மேற்கொள்வோம்.. அதனை இப்போது உங்களிடம் சொல்கிறேன்... முதல் முறையில், தாடை எலும்பை சில ஊசி மற்றும் நூலால் மேலே கொண்டு வந்து இணைத்துவிடுவோம்.
இரண்டாவது முறையில், " மூக்கிலிருந்து மேல் கீழாக பிரிந்து இருக்கும் உதடுகளின்இரண்டு முனைகளையும் ஒன்றாக இழுப்போம் இதற்கு ஊசி முறையை பயன்படுத்துகிறோம் என்றார்.
விக்டரிடம் இன்னொரு கேள்வி எழுப்பினார் ஒரு நபர், "ஒருவர் இறந்த பின்னர் வாழ்க்கை அளவிலான பொம்மையாக மாற்றுவது சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படுமா" என்று கேட்டார். அதற்கு அனுமதி இல்லை என்று விக்டர் தெரிவித்தார்.
இறுதிச் சடங்கில் அழுவதற்கு ஆட்கள் அமர்த்தப்படுவார்களா என்று விக்டரிடம் சிலர் கேட்டனர். அதற்கு விக்டர் சில இடங்களில் இதுபோன்ற ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என்றார்.
சவப்பெட்டி குறித்து பேசிய விக்டர், சவப்பெட்டி செவ்வக வடிவில் இருப்பதாக பலரும் நினைக்கிறார்கள், ஆனால் அது உண்மையல்ல.. சவப்பெட்டி என்பது மனிதனின் உடல் அளவிற்காக இப்படி உள்ளது. மனிதனின் மேல் பகுதி குறுகலானது, பின்னர் தோள்பட்டை அகலமானது. பாதத்தை நோக்கிய பகுதி குறுகியது. அதனால் தான் செவ்வகமாக சவப்பெட்டி இருக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications