படிச்சு படிச்சு சொன்ன டிரம்ப்.. கேட்காத இஸ்ரேல்! லெபனானில் மீண்டும் தீவிர தாக்குதல்.. ஓயாத பதற்றம்
வாஷிங்டன்: பாகிஸ்தானில் நாளை அமெரிக்கா - ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. ஏற்கனவே ஈரான் இதனை கடுமையாக கண்டித்துள்ள நிலையில், தாக்குதல் நீடிப்பதால் அமெரிக்கா- ஈரான் பேச்சுவார்த்தை தொடங்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஈரானுக்கும் அமெரிக்காவும் இடையே கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி போர் வெடித்தது. ஈரான் அணு சக்தி தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுப்பதாக கூறி அந்த நாட்டின் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தின. பதிலுக்கு வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.

தற்காலிக போர் நிறுத்தம்
ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்த போரால் எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டது. ஹார்முஸ் ஜலசந்தியையும் ஈரான் மூடியதால், எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவானது. பல்வேறு நாடுகளும் எரிபொருள் நெருக்கடியை சமாளிக்க கட்டுப்பாடுகள் போடும் அளவிற்கு நிலைமை கையை மீறி சென்றது.
ஈரானுக்கு இறுதி கெடுவை விதித்த டிரம்ப், ஈரான் ஒப்பந்தத்தை ஏற்காவிட்டால் அந்த நாட்டை ஒரே இரவில் அழித்துவிடுவேன் என்று எச்சரித்தார். பாகிஸ்தான் தலையிட்டு மத்தியஸ்தம் செய்ததால் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கும் ஈரானும் நாளை பாகிஸ்தானில் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
லெபனானை தாக்கும் இஸ்ரேல்
இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் பங்கேற்க உள்ளார். இதற்கிடையே, லெபானானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர்களையும் அவர்களின் முகாம்களையும் குறிவைத்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்கி வருகிறது. நேற்று நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரின் நெருங்கிய உதவியாளர் கொல்லப்பட்டார்.
இஸ்ரேல் லெபனானை குறிவைத்து சரமாரியாக தாக்கி வருவதால் கோபம் அடைந்த ஈரான், இஸ்ரேல் தனது தாக்குதலை நிறுத்தாவிட்டால் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவோம் என்று எச்சரித்தது. ஆனாலும் ஈரான் அளித்த 10 அம்ச திட்டத்தில் லெபனான் விவகரம் இடம்பெறவில்லை என்றும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனான் விவகாரத்திற்கு தொடர்பு இல்லை என்று கூறியது.
இதனால், போர் நிறுத்தம் திட்டமிட்டபடி இருக்குமா? இல்லை மீண்டும் போர் மூளுமா என்ற அச்சம் நிலவியது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் இஸ்ரேல் தனது தாக்குதலை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துஇருந்தார். ஆனால் டிரம்பின் கோரிக்கையும் மீறி லெபனான் மீது இரண்டு நகரங்கள் மீது இன்று இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.
பேச்சுவார்த்தை நடக்குமா?
இதற்கு ஹிஸ்புல்லா அமைப்பும் பதிலடி கொடுத்துள்ளது. இஸ்ரேல் - அமெரிக்காவின் அத்துமீறல் நீடிக்கும் வரை நாங்களும் பதிலடி கொடுப்போம் என்று கூறியுள்ளது. நாளை அமெரிக்க துணை அதிபர் பாகிஸ்தான் செல்ல திட்டமிட்டுள்ள நிலையில், ஈரான் இந்த போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் பங்கேற்குமா? என்று தெரியவில்லை.
இஸ்ரேல், லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருவதால் அடுத்து என்ன நடக்கும் என்பது பதற்றமாகவே நகர்ந்து கொண்டு இருக்கிறது. இது ஒருபக்கம் இருக்க இஸ்ரேலும் லெபனானும் அடுத்த வாரம் அமெரிக்காவில் பேச திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. எனினும், இரு நாடுகளும் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
-
இந்தியாவுக்கு சிக்கல் தொடரும்.. ஹார்முஸ் திறக்கப்பட்டாலும் கூட எல்லா பிரச்சனையும் உடனே தீராது! -
சுந்தர் பிச்சைக்கு எதிர்ப்பு! பேசிக்கொண்டிருக்கும்போதே.. சாரை சாரையாக வெளியேறிய மாணவர்கள்! -
14 பாயின்ட்.. மொத்த போரும் முடிவுக்கு வந்தது.. கதவை திறங்க, கப்பல் கிளம்பட்டும்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
விடியல் பிறக்கிறது.. ஈரான் போர் முடிவு.. டிரம்ப் உடன் ராசியான முஜ்தபா கமேனி.. இவரே சொல்லிட்டாரா? -
யுரேனியத்தை பதுக்கும் ஈரான்.. அமெரிக்கா தொட கூட முடியாது! டிரம்புக்கு செக்! -
100 நாட்களை தாண்டிய அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்.. ஈரானை இன்னும் வீழ்த்த முடியாத ரகசியம் என்ன? -
39 முறை பொய் சொன்ன Trump.. முழுக்க முழுக்க மார்க்கெட் மேனிபுலேஷன்? ஈரான் கொடுத்த பதிலடி! -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
நான் வந்துட்டேன்னு சொல்லு.. தலைநிமிர்ந்த தங்கம்! ஒரே அறிவிப்பால் திடுக்குனு உயர்ந்த விலை! என்னாச்சு? -
கதையை முடிக்க அமெரிக்கா போடும் பிளான்.. கறார் காட்டும் ஈரான்! டிரம்புக்கு செக்! -
குட்டையை குழப்பிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் சொதப்பல்! போர் இப்போதைக்கு முடியாது!












Click it and Unblock the Notifications