இஸ்ரேல் போர் எப்போது முடிவுக்கு வரும்? பதில் சொல்லும் போது திடீர் அழைப்பு.. பாதியில் கிளம்பிய பைடன்!
வாஷிங்டன்: இஸ்ரேல் ஹமாஸ் இடையே சண்டை 18ஆவது நாளாக இன்றும் தொடரும் நிலையில், போர் எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்து அமெரிக்க அதிபர் பைடன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடந்த 2 வாரங்களுக்கு மேலாக மோதல் தொடர்ந்து வருகிறது. கடந்த அக். 7ஆம் தேதி இஸ்ரேல் நாட்டிற்குள் வந்த ஹமாஸ் சரமாரியாகத் தாக்குதல் நடத்தியது.

முதலில் ஏவுகணை தாக்குதலை ஹமாஸ் நடத்திய நிலையில், அதன் பிறகு பாராசூட் மூலமாகவும் பின்னர் ஜீப்பில் உள்ளே நுழைந்தும் தாக்குதலை நடத்தியது. சமீப காலங்களில் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட மோசமான தாக்குதலாக இது இருக்கிறது.
இஸ்ரேல் மோதல்: அதைத் தொடர்ந்து இஸ்ரேலும் பதில் தாக்குதலில் இறங்கியுள்ளது. முதலில் இப்போது காசாவில் உள்ள கட்டிடங்களைக் குறிவைத்து இஸ்ரேல் சரமாரியாகத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும் படையெடுப்பை ஆரம்பிக்கவும் இஸ்ரேல் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இப்படி இரு தரப்பும் தாக்குதல் நடத்தி வருவதால் அங்கே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்டது என்னவோ அப்பாவி மக்கள் தான்.
இதற்கிடையே இஸ்ரேல் ஹமாஸ் இடையே நடக்கும் சண்டை போர் எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்து அமெரிக்க அதிபர் பைடன் சில முக்கியக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். கடந்த அக். 7ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதல் சமயத்தில் ஹமாஸ் தான் பிடித்துச் சென்ற அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவித்த பிறகே போர் நிறுத்தம் குறித்த எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடைபெறும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
இது நடக்கணும்: வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிபர் பைடன், "முதலில் அவர்கள் பிணைக் கைதிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும்.. அதன் பிறகு நாம் போர் நிறுத்தம் குறித்துப் பேசலாம்" என்று அவர் தெரிவித்தார். காசா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை நிறுத்தினால் தங்களிடம் உள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவிப்பதாக ஹமாஸ் அறிவித்திருந்தது.
இந்தச் சூழலில் பிணையக் கைதிகளை விடுவிக்கும் வரை போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பே இல்லை என்று அமெரிக்கா கூறியுள்ளது. இஸ்ரேலும் கிட்டதட்ட இதை நிலைப்பாட்டை எடுக்கும்.

பாதியில் கிளம்பிய பைடன்: அதிபர் பைடன் ஹமாஸ் குறித்துப் பேசிக் கொண்டிருக்கும் போதே திடீரென, "நான் சமாளிக்க வேண்டிய மற்றொரு பிரச்சினை இருக்கிறது. அதற்காக நான் ஆலோசனை ரூமிற்கு செல்ல வேண்டும்" என்று கூறிவிட்டு நகர்ந்துவிட்டார். காசாவில் அமைதி திரும்ப வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், பிணைக் கைதிகள் முதலில் விடுவிக்கப்பட வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக இருப்பதையே இது காட்டுகிறது.
இஸ்ரேலில் இருந்து கடத்தப்பட்ட அமெரிக்கர்களான ஜூடித் மற்றும் நடாலி ரானன் ஆகிய இருவரை ஹமாஸ் கடந்த வெள்ளிக்கிழமை விடுவித்து இருந்தது. அதைத் தொடர்ந்து ஹமாஸ் நேற்றைய தினம் மேலும் இரண்டு பிணைக் கைதிகளை விடுவித்திருந்தது. அவர்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு பிணைக் கைதிகளை விடுவிப்பதாக ஹமாஸ் கூறியிருந்தது.
கடந்த அக். 7ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் இஸ்ரேலில் இருந்து மொத்தம் 222 பேரை ஹமாஸ் கடத்திச் சென்றுள்ளது. மேலும், அந்தத் தாக்குதலில் 1400 இஸ்ரேல் மக்களையும் ஹமாஸ் கொன்றதாகக் கூறப்படுகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications