Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இஸ்ரேல் - ஈரான் போரால்.. இந்தியாவுக்கு ஏற்படும் பாதிப்பு என்ன? பெட்ரோல், டீசல் விலை உயருமா? பின்னணி

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: இஸ்ரேல் - ஈரான் இடையே மோதல் வெடித்துள்ளது. அமெரிக்காவும் இணைந்துள்ள நிலையில், ஈரான் பதிலடியை கொடுத்து வருகிறது. இரு தரப்புக்கும் இடையேயான இந்த மோதலால், மத்திய கிழக்கில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, இரு நாடுகளுக்கும் இடையேயான மோதலால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயருமா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இந்தியா பெருமளவு கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது.

ஈரான் மீது எப்போது வேண்டுமானாலும் அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடும் என்று கடந்த சில நாட்களாகவே மத்திய கிழக்கில் பதற்றம் தொற்றியிருந்தது. இதனை உறுதி செய்யும் விதமாக மத்திய கிழக்கை நோக்கி அமெரிக்கா தனது போர்க்கப்பல்களையும், போர் விமானங்களையும் நகர்த்தின.

israel attacks Iran Israel launched airstrikes on Iran and explosion headrd in Tehran

ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு உடன்பட வேண்டும் என்று எச்சரித்து வந்த நிலையில் இன்று ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானை குறிவைத்து இஸ்ரேல் இந்த தாக்குதலை முன்னெடுத்தது. இதற்கு பதிலடியை ஈரானும் தொடுக்க தொடங்கியுள்ளது. இதனால், மத்திய கிழக்கில் பெரும்பாலான நாடுகளின் வான்வழிகள் மூடப்பட்டுள்ளன.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயருமா?

ஈரான் -இஸ்ரேல் இடையேயான மோதலால் சர்வதேச எரிசக்தி சந்தையும் உஷார் நிலைக்கு சென்றுள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, கச்சா எண்ணெய் விலை உயர்ந்து இருப்பதால், இந்தியாவில் எரிபொருள் பணவீக்கத்தை நிபுணர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடந்த சில ஆண்டுகளாக நிலையாக இருக்கும் நிலையில், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள இந்த பதற்றம் காரணமாக, விலை உயரும் நிலை ஏற்பட்டால் இது இந்திய நுகர்வோருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

ஒரு பேரல் 70 டாலர்

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகிறது. ஈரானின் ராணுவ தளங்கள் மற்றும் அணு கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு ஈரானும் கடுமையான பதிலடி கொடுக்க தொடங்கியுள்ளது. இதனால், எண்ணெய் சந்தை அச்ச சூழலை எதிர்கொண்டுள்ளது. அமெரிக்கா தாக்குதலை தீவிரப்படுத்தும் பட்சத்தில், கச்சா எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்படலாம்.

உலகளாவிய கச்சா எண்ணெய் கப்பல் போக்குவரத்தின் சுமார் 20% நடைபெறும் முக்கிய பகுதியான ஹார்மூஸ் நீரிணை வழியாக விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது. தற்போதைய நிலவரப்படி பிரெண்ட் கச்சா எண்ணெய் சர்வதேச சந்தையில் ஒரு பேரலுக்கு 70 டாலராக உள்ளது.

மேலும் உயர வாய்ப்பு

பதற்றம் அதிகரித்தாலும் விநியோகத் தடங்கல் ஏற்படாமல், எண்ணெய் விலைகளில் உள்ள பீப்பாய் ஒன்றுக்கு 3-5 டாலர் விரைவில் குறைய வாய்ப்பு உள்ளது. இருப்பினும், தினசரி 1 மில்லியன் பேரல் விநியோகக் குறைவு ஏற்பட்டால்கூட, பரவலாக எதிர்பார்க்கப்படும் விநியோக நிலையை கேள்விக்குள்ளாக்கி, பிரெண்ட் எண்ணெய் விலையை பீப்பாய் ஒன்றுக்கு 80 டாலராக உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விநியோகத் தடங்கல்கள் ஏற்பட்டால் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு சுமார் 80 டாலராக உயரக்கூடும் என பார்க்லேஸ் ஆய்வு நிறுவனமும் எச்சரித்துள்ளது. போர் பதற்றம் காரணமாக ஏற்கனவே, சரக்கு காப்பீட்டு செலவுகளும் எண்ணெய் டாங்கர் கப்பல்களின் போக்குவரத்து லாப விகிதங்களும் உயர்ந்து, சந்தைகள் எண்ணெய் விலைகளை உயரும் நிலை இருக்கும் சூழலில் தற்போது ஏற்பட்டுள்ள மோதலால் விலை மேலும் உயரும் என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

உள்நாட்டு எரிபொருள் விலையிலும் பிரதிபலிக்கும்

இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவைகளில் சுமார் 85-90 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. இதில் பெரும்பாலும் சவுதி அரேபியா, ஈராக், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் மற்றும் கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலிருந்து பெறப்படுகிறது. இந்த இறக்குமதியின் சுமார் பாதி ஹார்மூஸ் நீரிணை வழியாக செல்கிறது. எந்தவொரு நீண்டகாலத் தடங்கலும், குறிப்பாக மூடல் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டால், விலை உடனடியாக உயரும்.

கச்சா எண்ணெய் விலைகளில் ஏற்படும் திடீர் உயர்வு, இந்தியாவின் எரிபொருள் இறக்குமதி செலவினத்தை நேரடியாக பாதிக்கிறது; இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விலைகளில் உயர்வு ஏற்படும் அழுத்தம் ஏற்படும். உதாரணமாக, கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 1 டாலர் உயர்ந்தால், இந்தியாவின் ஆண்டு எண்ணெய் இறக்குமதி செலவு சுமார் 1 பில்லியன் டாலர் அதிகரிக்கிறது. இது இறுதியில் உள்நாட்டு எரிபொருள் விலையிலும் பிரதிபலிக்கும்.

எரிபொருள் விலை உயர வாய்ப்பு

ஈரான் ஹார்மூஸ் நீரிணையை மூடினாலோ அல்லது மோதல் குறிப்பிடத்தக்க அளவில் தீவிரமடைந்தாலோ, உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் தற்போதைய நிலைகளை விட மிக அதிகமாக உயரக்கூடும். இதனால் இந்தியாவின் எரிபொருள் இறக்குமதி செலவுகள் தானாகவே அதிகரிக்கும். இறக்குமதிகளின் மீது இந்தியா அதிகமாக சார்ந்திருப்பதும், கடல் போக்குவரத்து தடைகளுக்கு எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையும் காரணமாக, எரிபொருள் விலைகளும் உயர வாய்ப்பு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+