எக்குத்தப்பாக உயர போகும் கச்சா எண்ணெய் விலை? ஈரான் எண்ணெய் கிடங்குகளை குறிவைக்கும் இஸ்ரேல்.. பகீர்
வாஷிங்டன்: சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் உற்பத்தியில் ஈரான் மிக முக்கிய நாடாக இருக்கிறது. இதற்கிடையே ஈரானில் உள்ள கச்சா எண்ணெய் கிடங்குகள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என்று அமெரிக்கா அதிபர் பைடன் எச்சரித்துள்ளார். இது சர்வதேச அளவில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களால் மத்திய கிழக்கில் இப்போது பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. ஹமாஸ், ஹிஸ்புல்லாவை குறிவைத்து இஸ்ரேல் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தின.

குறிப்பாக ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இதற்குப் பதிலடியாக ஈரான் உள்ளே வந்தது. இஸ்ரேல் மீது சுமார் 200+ ஏவுகணைகளை ஏவியதால் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டது. இதற்கிடையே அமெரிக்க அதிபர் பைடன் சில பகீர் கருத்துகளைக் கூறியிருக்கிறார்.
கச்சா எண்ணெய்: அதாவது ஈரான் எண்ணெய் ஆலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டு வருவதாக பைடன் கூறியிருக்கிறார். ஒருவேளை பைடன் சொல்வது போல ஈரானின் எண்ணெய் கிடங்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், அது கச்சா எண்ணெய் விலையை உச்சத்திற்கு எடுத்துச் சென்றுவிடும். இதனால் பெட்ரோல், டீசல் விலையும் உயரும் ஆபத்து இருக்கிறது.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய பைடனிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பைடன், "இது தொடர்பாக நாங்கள் விவாதித்து வருகிறோம். இந்த தாக்குதல் நடக்க வாய்ப்புகள் இருக்கிறது. சிறியளவில் தாக்குதலாக இருந்தாலும் அதற்கு வாய்ப்பு இருப்பதை மறுக்க முடியாது" என்று தெரிவித்தார்.
ஏற்கனவே உயரத் தொடங்கிவிட்டது: மத்திய கிழக்குப் பகுதியில் நிலவும் இந்த பதற்றம் குறித்து பைடன் பைடன் இந்த கருத்தைச் சொன்ன உடனேயே கச்சா எண்ணெய் விலை ஐந்து சதவீதம் உயர்ந்தது. வரும் நவ. மாதம் நடக்கும் அதிபர் தேர்தலில் பைடனின் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். அங்குத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருக்கும் நிலையில், இந்த நேரத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் அது தேர்தலிலும் பைடன் கட்சிக்குப் பெரிய பின்னடைவாக இருக்கும்.

பைடன் மற்றொரு கருத்தையும் சொன்னார். அதாவது இஸ்ரேல் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருந்தாலும் உடனே எந்தவொரு தாக்குதலையும் நடத்தாது எனக் குறிப்பிட்டார். இருப்பினும், சமீப காலமாக அமெரிக்கா சொல்லும் பெரும்பாலான கருத்துகளை இஸ்ரேல் கேட்பதே இல்லை. காசா தாக்குதல், ஹிஸ்புல்லா தாக்குதல்களைக் குறைக்குமாறு அமெரிக்கா சொன்னாலும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அதைத் தீவிரப்படுத்தியே வருவது குறிப்பிடத்தக்கது.
ஆலோசனை மட்டுமே: இது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு பைடன், "முதலில் ஒன்று.. இஸ்ரேலுக்கு நாங்கள் அனுமதியைத் தருவதில்லை. நாங்கள் ஆலோசனையாக மட்டுமே இஸ்ரேலுக்கு சில கருத்துகளைச் சொல்கிறோம். அதைப் பின்பற்றலாமா என்பதை முடிவு செய்ய வேண்டியது அவர்கள் எடுக்கும் முடிவு. அதேநேரம் உடனடியாக அடுத்த 24 மணி நேரத்தில் ஈரான் மீது தாக்குதல் நடத்த விட மாட்டோம்" என்றார்.
மேலும், ஈரான் அணு சக்தி நிலையங்களைத் தாக்க இஸ்ரேல் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இது குறித்த கேள்விக்கு, "அணு சக்தி நிலையங்களைத் தாக்கக் கூடாது. இஸ்ரேலை இந்த விஷயத்தில் நிச்சயம் நாங்கள் ஆதரிக்க மாட்டோம்" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
-
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications