நாய்க்கு கூட சொத்தில் பங்குண்டு.. ஆனால் ட்ரம்ப்புக்கு இல்லை..முதல் மனைவி இவானா எழுதிய உயில் ரகசியம்
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் முதல் மனைவி இவானா கடந்த ஆண்டு மறைந்தார். இவர் தனது உயிலில் நாய்களுக்கு கூட சொத்துகள் வழங்கிய நிலையில் டொனால்ட் ட்ரம்ப்புக்கு ஒன்றும் கொடுக்கவில்லை.
வாஷிங்டன்: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் முதல் மனைவி இவானா கடந்த ஆண்டு காலமானார். வீட்டில் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து இறந்த இவானாவின் சொத்து விபரம் மற்றும் அவரது உயில் ரகசியம் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி பெரும்பகுதி சொத்துகளை தனது 3 குழந்தைகளுக்கு எழுதி இவானா எழுதி வைத்துள்ளார். இதுதவிர வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகள் மற்றும் உதவியாளர் பெயரில் கோடிக்கணக்கான மதிப்பிலான சொத்துகளை உயில் எழுதி வைத்த இவானா முன்னாள் கணவரும், மாஜி அமெரிக்க அதிபருமான டொனால்ட் ட்ரம்ப்புக்கு சிறிய துரும்பு கூட வழங்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப். அமெரிக்காவில் உள்ள குடியரசு கட்சியை சேர்ந்த இவர் தொழில் அதிபரும் ஆவார். டொனால்ட் ட்ரம்ப் கடந்த 2017 ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை அமெரிக்காவின் அதிபராக இருந்தார்.
கடந்த 2021 அதிபர் தேர்தலில் அவர் தற்போதைய அதிபரான ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடனிடம் தோல்வியை சந்தித்தார். மீண்டும் அமெரிக்காவில் 2025ல் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக போட்டியிடும் முனைப்பில் டொனால்ட் ட்ரம்ப் உள்ளார்.

3வது மனைவியுடன் ட்ரம்ப்
டொனால்ட் ட்ரம்புக்கு மொத்தம் 3 மனைவிகள். முதல் மனைவி பெயர் இவானா மேரி. இவர்கள் இருவரும் கடந்த 1977 ல் திருமணம் செய்து கொண்டனர். மாடலாக இருந்த இவானா மேரி, டொனால்ட் ட்ரம்ப்பை மணம் முடித்தார். இந்த தம்பதிக்கு 2 மகன், ஒரு மகள் பிறந்தனர். அதன்பிறகு இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். இதையடுத்து 1993ல் டொனால்ட் ட்ரம்ப் 2வது திருமணம் செய்தார். 2வதாக நடிகை மார்லா மேப்பிள்ஸை அவர் கரம் பிடித்தார். இந்த தம்பதிக்கு டிப்பனி என்ற மகள் பிறந்தாள். இதையடுத்து 2வது மனைவியை டொனால்ட் ட்ரம்ப் 1999 ல் விவாகரத்து செய்தார். இதையடுத்து 2005ல் டொனால்ட் ட்ரம்ப் மெலனியாவை 3வது திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு பாரோன் என்ற மகன் உள்ளனர்.

முதல் மனைவி இவானா காலமானார்
இந்நிலையில் தான் டொனால்ட் ட்ரம்பின் முதலில் திருமணம் முடிந்த முன்னாள் மனைவி இவானா மேரி கடந்த ஆண்டு ஜூலை மாதம் மறைந்தார். டொனால்ட் ட்ரம்ப்-இவானா மேரி தம்பதிக்கு இவான்கா ட்ரம்ப் என்ற மகளும், ஜுனியர் ட்ரம்ப், எரிக் ட்ரம்ப் என்ற 2 மகன்களும் உள்ளனர். முன்னாள் மாடலான இவானா சிறந்த எழுத்தாளரும் கூட. அதோடு சிறந்த தொழிலதிபராக இருந்தார். இவரது நிறுவனத்தின் ஆடைகள், நகைகள் மிகவும் பிரபலமாகும். இந்நிலையில் தான் கடந்த 2022 ஜூலை 14ல் தனது 73வது வயதில் வீட்டின் படிக்கட்டுகளில் இருந்து தவறி கீழே விழுந்தததில் காயம் ஏற்பட்டு இறந்தார்.

வெளியான உயில் ரகசியம்
இந்நிலையில் தான் தற்போது இவானா ட்ரம்ப்பின் சொத்து தொடர்பான உயில் பற்றிய விபரங்கள் வெளியாகி உள்ளன. இவானா ஒரு சிறந்த தொழில் அதிபராவார். டொனால்ட் ட்ரம்பை திருமணம் செய்வதற்கு முன்பும், பின்பும் தொழிலில் அதிக ஈடுபாடுடன் செயல்பட்டார். இதனால் கோடிக்கணக்கான சொத்துகளை அவர் சேமித்தார். மேலும் ஈகை குணம் அதிகம் கொண்ட இவானா வாழும் காலத்தில் பலருக்கும் ஏராளமான நன்கொடைகள் செய்து வந்தார். இந்நிலையில் தான் தனது மறைவையொட்டி அவர் உயில் எழுதி வைத்திருந்தார்.

ரூ.280 கோடி சொத்து
அந்த உயிலில் இவானா தனது 2 மகன்கள், ஒரு மகள் ஆகியோருக்கு சரிசமமாக சொத்துகளை சரிசமமாக பிரித்து வழங்கிஉள்ளார். மேலும் அவரது குழந்தைகளை சிறுவயதில் கண்ணும் கருத்துமாக பார்த்து பார்த்து வளர்த்தவருக்கும், ஆசையாக வளர்த்த நாய்களுக்கு கூட சொத்தில் பங்கு வழங்கி உள்ள நிலையில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு எந்த பங்கும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். அதன்படி இவானாவுக்கு மொத்தம் 34 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு சொத்து இருந்தது. இதன் இந்திய மதிப்பு என்பது சுமார் ரூ.280 கோடியாகும். இந்த ரூ.280 கோடி சொத்துகளை தான் இவானா உயில் எழுதி வைத்துள்ளார். இதில் மகள் இவான்கா ட்ரம்ப், மகன்களான ஜுனியர் ட்ரம்ப், எரிக் ட்ரம்ப் ஆகியோருக்கு சரிசமமாக சொத்துகளை பிரித்து கொடுத்துள்ளார். இதன்மூலம் பெரும்பாலான சொத்துகள் அவரது 3 குழந்தைகளுக்கே சென்றது.

நாய்களுக்கும் சொத்தில் பங்கு
இருப்பினும் மீதமுள்ள சொத்துகளை பல வகைகளாக பிரித்து அவர் அவரது செல்லமாக வளர்த்த டைகர் ட்ரம்ப் எனும் நாய்க்கு சொத்தின் ஒருபகுதியை எழுதி வைத்துள்ளார். இதுதவிர அவர் இறந்தபோது வீட்டில் வளர்க்கப்பட்ட அனைத்து உயிரினங்களுக்கும் சொத்துகளில் குறிப்பிட்ட பகுதிகளை வழங்க வேண்டும் உயிலில் குறிப்பிட்டு தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

உதவியாளருக்கு ரூ.9 கோடி சொத்து
இதுமட்டுமின்றி அவரது உதவியாளரும், இவானாவின் குழந்தைகளை சிறுவயதில் நன்கு கவனித்து கொண்ட சுஜனா டோரதி கரிக்கு, மியாமி கடற்கரைக்கு அருகே உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பை இவானா எழுதி வைத்துள்ளார். இந்த சொகுசு அடுக்குமாடி வீட்டின் மொத்த மதிப்பு என்பது இந்திய ரூபாயில் 9 கோடியாகும். இது 1000 சதுரஅடியில் 2001ல் கட்டப்பட்டது. இதனை 2009ல் இவானா ரூ.5.25 கோடிக்கு வாங்கிய நிலையில் சுஜனாவுக்கு அவர் எழுதி வைத்துள்ளார். இவானா, சுஜனா மீது மிகுந்த பாசம் கொண்டவராக இருந்தார். அவரை பற்றி இவனா எழுதிய ‛ரைசிங் ட்ரம்ப்' புத்தக்கத்தில் கூட குறிப்பிட்டுள்ளார். துவக்கத்தில் குழந்தை பராமரிப்பாளராக இவானாவிடம் பணியாற்றிய சுஜனாவை குழந்தைகள் வளர்ந்த பிறகு தனது உதவியாளராக நியமித்து கொண்டார்.

டொனால்ட் ட்ரம்புக்கு ஒன்றுமில்லை
இவ்வாறு வீட்டில் வளர்த்த செல்ல பிராணிகள், குழந்தைகளை கவனித்து உதவியாளராக மாறி சுஜனாவுக்கு கூட தனது கோடிக்கணக்கான ரூபாய் சொத்துகளை எழுதி வைத்த இவானா டொனால்ட் ட்ரம்புக்கு எதையும் கொடுக்கவில்லை. உயிலில் முன்னாள் கணவரான டொனால்ட் ட்ரம்புக்கு சொத்துகள் வழங்குவது பற்றி அவர் எந்த விபரத்தையும் குறிப்பிடவில்லை. இருப்பினும் கூட அவர் சேமித்து வைத்திருந்த நகைகள், வடிவமைத்த ஆடைகள், நகைகள் உள்ளிட்டவற்றையின் பெரும்பகுதியை செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சால்வேஷன் ஆர்மிக்கு அவர் நன்கொடையாக அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
போலீசாருக்குப் பயந்து ஓடி.. நேராக முதலையிடம் மாட்டிய நபர்.. ஒரே கடியில் கையை கடித்து துப்பிய முதலை -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்!












Click it and Unblock the Notifications