ஆண்டின் சிறந்த நபர்கள் ஜோ பிடன், கமலா ஹாரீஸ்.. அறிவித்தது 'டைம்' இதழ்!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடன் மற்றும் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸ் ஆகியோர் 2020 ஆம் ஆண்டுக்கான, டைம் பத்திரிகையின் சிறந்த நபராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
டைம் இதழின் தேர்வு உலகம் முழுக்க அனைவராலும் முக்கியத்துவம் தந்து பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம், அந்த இதழ் மிகவும் பாரம்பரியம் கொண்டது. 1927ம் ஆண்டு முதல் செல்வாக்கு மிக்க நபரைத் தேர்ந்தெடுத்து வருகிறது அந்த இதழ்.

சுகாதாரப் பணியின் முன்களப் பணியாளர்கள், இன நீதி இயக்கத்தைச் சேர்ந்த அந்தோணி ஃபயூசி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆகிய மூன்று தரப்பு, ஜோ பிடனுக்கும், கமலாவுக்கும் கடும் போட்டியாளர்களாக இருந்தனர். ஆனால், அவர்களை பின்னுக்குத் தள்ளி ஜோ பிடன், கமலா ஹாரிஸ் ஆகியோர் இந்த ஆண்டின் சிறந்த நபர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்று 'டைம்' தெரிவித்துள்ளது.
டைமின் ஆரம்ப குறுகிய பட்டியலில் இவர்கள் இருவர் பெயரும் இல்லை. ஆனால் திடீரென செல்வாக்கு அதிகரித்து முதலிடம் பிடித்துள்ளனர்.
2016 ஆம் ஆண்டில், அப்போதைய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்ப், டைம் பத்திரிகையிலிருந்து இதே போன்ற அங்கீகாரத்தைப் பெற்றார்.
ஒவ்வொரு ஆண்டும், டைம் ஒரு நபர், ஒரு குழு, ஒரு யோசனை அல்லது ஒரு பொருளை அது சிறந்ததோ அல்லது மோசமானதோ, எதுவாக இருந்தாலும் முந்தைய 12 மாதங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தால் டைம் தங்களது பட்டியலில் வெளியிட்டு வருகிறது.
2019 ஆம் ஆண்டில், ஆண்டு முதல் சிறந்த பிசினஸ்மேன், பொழுதுபோக்கு, தடகள வீரர் மற்றும் பாதுகாவலர்கள் போன்ற பிரிவுகளின்கீழும் ஆண்டின் சிறந்த நபரை தேர்ந்தெடுக்க ஆரம்பித்துள்ளது.
கடந்த ஆண்டு, டைம், சிறந்த நபராக ஸ்வீடன் பள்ளி மாணவி கிரெட்டா துன்பெர்க்கை தேர்ந்தெடுத்தது. காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடி, உலகளாவிய இயக்கத்தை ஊக்குவித்ததற்காக இந்த கவுரவம் கொடுக்கப்பட்டது. அப்போது 16 வயதாக இருந்த துன்பெர்க், டைம் அங்கீகாரத்தை வென்ற, முதலாவது, வயது குறைந்த நபர் ஆவார்.












Click it and Unblock the Notifications