வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிபர் தேர்தல்...கருத்துக் கணிப்பு... ட்ரம்ப்பை பின்னுக்குத் தள்ளி... ஜோ பைடன் சரித்திர சாதனை!!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் தற்போது வரைக்கும் முன்னணியில் இருப்பது எதிர்க்கட்சி வேட்பாளரான ஜோ பைடன் என்பது தெரிய வந்துள்ளது. இவருக்கு அடுத்துதான் அதிபர் டொனால் ட்ரம்ப் இருக்கிறார். இந்த முறை அதிபருக்கான தேர்தலில் ட்ரம்ப்புக்கு வெற்றி வாய்ப்பு குறைவாக இருப்பதாக கருத்துக்கள் எழுந்துள்ளன.

அமெரிக்க அதிபருக்கான தேர்தல் வரும் நவம்பர் 3 ஆம் தேதி நடைபெறுகிறது. குடியரசுக் கட்சி சார்பில் மீண்டும் ட்ரம்ப் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து முந்தைய ஆட்சியில் துணை அதிபராக இருந்த ஜோ பைடன் ஜனநாயகக் கட்சி சாரப்பில் போட்டியிடுகிறார். துவக்கத்தில் இருந்தே கருத்துக் கணிப்புகளில் ஜோ பைடன்தான் முன்னணியில் இருந்து வருகிறார்.

அமெரிக்கா அதிபர் டிரம்ப்-க்கு சிலை அமைத்து வழிபாடு நடத்திய தீவிர தெலுங்கானா பக்தர் மாரடைப்பால் மரணம்அமெரிக்கா அதிபர் டிரம்ப்-க்கு சிலை அமைத்து வழிபாடு நடத்திய தீவிர தெலுங்கானா பக்தர் மாரடைப்பால் மரணம்

சயின்டிபிக் போல்ஸ்

சயின்டிபிக் போல்ஸ்

சமீபத்தில் ஆன்லைன், தொலைபேசி, மால்களில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் ஜோ பைடன் தான் முன்னணியில் இருக்கிறார். சயின்டிபிக் போல்ஸ் எனப்படும் இந்த வாக்குகள் பின்னர் ரேண்டம் முறையில் தேர்வு செய்யப்படுகிறது.

முன்னணி யார்

முன்னணி யார்

இந்த தேர்வு முடிவுகளை அமெரிக்காவின் ஏபிசி மற்றும் வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ளது. இந்த கருத்துக் கணிப்புகளில் ஜோ பைடன் 55% சதவீத வாக்குகளையும், டொனால்ட் ட்ரம்ப் 43% வாக்குகளையும் பெற்று இருக்கிறார். அந்த நாட்டில் நடத்தப்படும் உயர்தர கருத்துக் கணிப்பு இது என்று கூறப்படுகிறது. இதில் 50%க்கும் அதிகமான வாக்குகளை ஜோ பெற்று இருக்கிறார்.

ஜோ

ஜோ

இது அமெரிக்க தேர்தல் முறையில் 10 மற்றும் 11 புள்ளிகள் என்று கூறப்படுகிறது.இன்னும் தேர்தலுக்கு 23 நாட்கள் இருக்கும் நிலையில் தொடர்ந்து ஜோ முன்னணியில் இருந்து வருகிறார்.

பில் கிளிண்டன்

பில் கிளிண்டன்

இதுவரைக்கும் கடந்த 1936ஆம் ஆண்டில் இருந்து நடந்த அதிபருக்கான 21 தேர்தலில் 1992ல் பில் கிளிண்டன் மட்டுமே 5க்கும் அதிகமான புள்ளிகளை பெற்று இருந்தார். இதுவரைக்கும் நடந்த தேர்தலில் ஜனநாயக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஜோ மட்டுமே 50%க்கும் அதிகமான வாக்குகளை பெற்று இருக்கிறார். இது வரலாற்று சாதனையாக கருதப்படுகிறது.

ட்ரம்ப்

ட்ரம்ப்

2016ஆம் ஆண்டு தேர்தலில் ட்ரம்ப்புக்கு எதிராக அப்போது போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் 7 புள்ளிகளை பெற்று இருந்தார். ஆனால், 50% வாக்குகளைப் பெறவில்லை. இதையடுத்து அந்த ஆண்டு நடந்த தேர்தலில் ட்ரம்ப் அதிபராக வெற்றி பெற்று இருந்தார்.

வரலாறு

வரலாறு

தற்போது இருக்கும் நிலைக்கு தீர்மானிக்கப்படாத அல்லது மூன்றாம் நிலை மனிதர்களின் வாக்குகள் ட்ரம்ப்புக்கு சென்று இருந்தாலும், அவர் 5ல் இருந்து 6 புள்ளிகளை மட்டுமே பெற்று இருப்பார். இது இதுவரைக்கும் அமெரிக்க தேர்தல் வரலாற்றிலேயே நடந்தது இல்லை என்று கூறப்படுகிறது.

லோவா

லோவா

மிச்சிகன், நெவாடா ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு வாக்குகளில் ஜோ தான், 52%, 46% என்ற நிலையில் முன்னணியில் இருக்கிறார். கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலில் லோவாவில் ட்ரம்ப் 9 புள்ளிகளை பெற்று இருந்தார். இந்த முறையும் அவர் அங்கு செல்வாக்குடன் இருக்கிறார். இவருவருமே அங்கு சமமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

கொரோனா

கொரோனா

சிஎன்என் நடத்திய கருத்துக் கணிப்பில் ''கொரோனா தொற்றை யார் ஆட்சியில் இருந்தால் நன்றாக கையாண்டு இருப்பார்கள்'' என்ற கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது. அதற்கு ஜோ என்று 59% வாக்குகளும், ட்ரம்ப் என்று 38% வாக்குகளும் கிடைத்துள்ளன. கொரோனா தொற்று அமெரிக்க மக்களிடம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

English summary
Joe Biden is dominating President Donald Trump in the latest polls
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X