திடீர் ட்விஸ்ட்! உக்ரைன் எல்லை நாட்டிற்கு திடீர் விசிட் அடிக்கும் அதிபர் பைடன்! ஏன் தெரியுமா

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: உக்ரைன் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், திடீர் திருப்பமாக அமெரிக்க அதிபர் பைடன் போலந்து செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப். 24ஆம் தேதி தொடங்கிய உக்ரைன் போர் 4ஆவது வாரமாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போர் தொடங்கிய சமயத்தில் சில நாட்களில் போர் முடிவுக்கு வந்துவிடும் என்றே பலரும் கருதினர்.

இருப்பினும், யாரும் எதிர்பாராத வகையில் போர் பல நாட்களாகத் தொடர்கிறது. ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக உக்ரைன் வீரர்கள் துணிச்சலாகப் போராடி வரும் நிலையில், பல பகுதிகளில் இரு நாடுகளுக்கு இடையே சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 உக்ரைன் போர்

உக்ரைன் போர்

போர் தொடரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. குறிப்பாகக் கடந்த மார்ச் 10ஆம் தேதி, ரஷ்யா மற்றும் உக்ரைன் வெளியுறவு அமைச்சர்கள் துருக்கி நாட்டில் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் இரு தரப்பு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களைக் குறி வைத்து ரஷ்ய ராணுவம் தீவிர தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. உக்ரைன் ராணுவம் அதற்குத் தந்து வரும் பதிலடியால் பல பகுதிகளில் ரஷ்யா ராணுவம் ஸ்தம்பித்துள்ளது.

அமெரிக்கா

அமெரிக்கா


இந்த போரை முடிவுக்குக் கொண்டு வர உலக நாடுகள் தொடர்ந்து முயற்சி எடுத்து வருகின்றன. பிரான்ஸ் அதிபர் மெக்ரோன் இரு நாட்டுத் தலைவர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தினர். மற்ற சர்வதேச நாடுகளும் ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை அறிவித்து வருகின்றன. குறிப்பாக அமெரிக்கா முன் எப்போதும் இல்லாத அளவுக்குப் பொருளாதாரத் தடைகளை அறிவித்து வருகிறது. ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யவும் பைடன் தடை விதித்துள்ளார். இதற்கிடையே போர் தொடர்பாக விவாதிக்க உக்ரைன் அண்டை நாடான போலந்து செல்லும் அமெரிக்க அதிபர் பைடன், அங்கு அந்நாட்டு அதிபர் ஆண்ட்ரேஜ் டுடாவைச் சந்திக்கவுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

 பைடன்

பைடன்

இது தொடர்பாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி, "உக்ரைன் மீது ரஷ்யாவின் நியாயமற்ற போர் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் எப்படி பதில் அளிக்கிறது என்பது தொடர்பாக விவாதிக்க உள்ளார். அமெரிக்க அதிபர் பைடன் போலந்து செல்லும் முன், பெல்ஜியம் சென்று நேட்டோ, ஜி7 மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களைச் சந்திக்கிறார். அதன் பின்னரே பைடன் பெல்ஜியம் செல்ல உள்ளார். உக்ரைன் மக்களுக்கு ஆதரவாகவும், அதிபர் புதின் நடவடிக்கைக்கு எதிராகவும் உலகை அணிதிரட்டுவதில் இந்த பயணம் முக்கியமானதாக இருக்கும்" என்றார்.

 உக்ரைன் செல்வாரா

உக்ரைன் செல்வாரா

அதேநேரம் அதிபர் பைடன் உக்ரைன் நாட்டிற்குப் பயணம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மாதம் முன்னாள் சோவியத் நாடுகளான போலந்து, செக் குடியரசு மற்றும் ஸ்லோவேனிய நாட்டுத் தலைவர்கள் உக்ரைன் தலைநகர் கீவ் சென்று பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல இந்த மாதம் தொடக்கத்தில் அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் போலந்து சென்று இருந்தார். அமெரிக்க விமான தளம் வழியாக உக்ரைனுக்கு மிக்-29 போர் விமானங்களை அனுப்ப போலந்தின் கோரிக்கையை நிராகரித்த சில மணி நேரத்திலேயே இந்தச் சந்திப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Recommended Video

    Russia-வை ஒரு போது விட மாட்டோம்! நன்றி மறவாத Syria | Ukraine VS Russia | Oneindia Tamil
    நெருக்கடி

    நெருக்கடி

    உக்ரைன் நாட்டில் போர் தொடங்கிய பின்னர் அங்கு கடும் நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது. போர் தொடங்கிய பின்னர் சுமார் ஒரு கோடிக்கும் மேலான உக்ரைன் மக்கள் அவர்கள் தங்குமிடத்தை விட்டு வெளியேறியுள்ளதாக இருக்கலாம் ஐநா சபை தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் வெளிநாடுகளுக்கு, குறிப்பாக போலந்து நாட்டிற்குச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+