நீதிபதி ஜுவான் மெர்ச்சன் vs டொனால்டு டிரம்ப்: அமெரிக்க நீதிமன்றத்தில் நேற்று என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவின் அதிபராக பதவியேற்க உள்ள டொனால்டு டிரம்ப், ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டார். ஆனால் அவர் அதிபராக உள்ள நிலையில் சிறை தண்டனை அல்லது அபராதம் என எதுவும் அறிவிக்கப்படவில்லை. நீதிபதி ஜுவான் மெர்ச்சன். காணொலி காட்சி வாயிலாக டிரம்புடன் பல நிமிடங்கள் பேசினார். அப்போது என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.


அமெரிக்காவில் கடந்தாண்டு நடந்த அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப் மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தேர்தலில் வென்றாலும், அவர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அதிபராகப் பதவியேற்கவில்லை. வரும் ஜனவரி 20ம் தேதி தான் பதவியேற்க உள்ளார்.

donald trump us court

என்ன நடந்தது: அமெரிக்காவில் ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுடன் டிரம்ப் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் 2016 அதிபர் தேர்தலில் டிரம்ப் வேட்பாளராக களம் இறங்கிய போது, தன்னுடன் இருந்த உறவு தொடர்பாகப் பொதுவெளியில் பேசக்கூடாது என்று ஒப்பந்தம் போட்டு, அதற்கு ஒரு 1.30 லட்சம் டாலரை ஸ்டார்மி டேனியலுக்கு கொடுத்துள்ளார். ஆனால், இந்த நிதியைத் தேர்தல் நிதி என்று கணக்குக் காட்டியதால் சர்ச்சையில் சிக்கினார்.

இந்த வழக்கு நியூயார்க் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் மொத்தம் 34 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் டிரம்ப் குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்தது. ஆனால் தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படாமல் இருந்தது. நேற்று தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. குற்றவாளி என்று அறிவித்த நீதிமன்றம், சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கவில்லை.. ஒருவேளை சிறை தண்டனை விதித்திருந்தால் டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக பதவியேற்கவே முடியாத நிலை ஏற்பட்டிருக்கும்.

தண்டனை விவரங்கள் அறிவிக்கும் முன்பு நீதிபதி ஜுவான் மெர்ச்சன் vs டிரம்ப் விவாதங்கள் எப்படி இருந்தது: நியூயார்க் நீதிமன்ற நீதிபதி ஜுவான் மெர்ச்சன், அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்பிடம் காணாலி காட்சி வாயிலாக பேசும் போது, எந்தவொரு தண்டனையும் இல்லாமல் நிபந்தனையற்ற விடுதலை எனற அசாதாரண சட்டப் பாதுகாப்புகள் அமெரிக்க அதிபர் அலுவலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. ஆனால் டிரம்ப் அமெரிக்க அதிபர் பதவியில் இருப்பவர் அல்ல என்று கூறினார்.

தொடர்ந்து மெர்ச்சன் தண்டனையை விதிக்கும் முன்பு டிரம்ப் பேசத்தொடங்கினார். நீதிமன்ற நடவடிக்கை குறித்து எந்த வருத்தத்தையும் அவர் வெளிப்படுத்தவில்லை.. கடந்த 20 மாதங்களுக்கு முன்பு தன் மீது குற்றம் சாட்டப்பட்டதை "அரசியல் சூனிய வேட்டை" என்று கூறியிருந்தார். அந்த வாதத்தை நீதிபதி முன்பும் கூறினார். மேலும் டிரம்ப் மிகவும் அமைதியான தொணியில் தன்னை சுற்றி நடந்த விஷயங்களை எடுத்துரைத்தார். மேலும் வழக்கில் தொடர்புடையவர்கள் நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டதாக கடுமையாக பேசினார். இது மிகவும் பயங்கரமான அனுபவம் என்றும் டிரம்ப் ஒரு கட்டத்தில் பேசினார்.

வாக்காளர்கள் தன்னை மீண்டும் பதவியில் அமர்த்தியதாகக் குறிப்பிட்ட, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கும் ஏழு ஸ்விங் மாநிலங்களில் மக்களின் வாக்குகளை பெற்று வென்றதையும் சுட்டிக்காட்டினார். மேலும் வாக்காளர்கள் "உங்கள் விசாரணையைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள், அதனால் அவர்கள் அதைப் புரிந்துகொண்டார்கள்" என்றும் கூறினார்.

அப்போது நீதிபதி ஜுவான் மெர்ச்சன், அதிபர் பதவியின் மாண்பை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கிலேயே பேசினார். டிரம்ப் குற்றவாளி என்று அறிவித்த மெர்ச்சன், அவரது நடத்தையை விமர்சிக்கவில்லை. அதேநேரம் எந்த தண்டனையும் விதிக்காததற்கான சட்டப்பூர்வ காரணங்களை பற்றி விரிவாக கூறினார். இந்த வழக்கைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் மிகவும் அசாதாரணமானவை என்று மெர்ச்சன் குறிப்பிட்டார். மேலும் நீதிபதி மெர்ச்சன் கூறும் போது, தண்டனை அறிவிக்காததற்கு டிரம்ப் காரணம் அல்ல என்றும், அதிபர் மாளிகை தான் (பதவியின் மாண்புக்காக) ரகசிய பண வழக்கில் தண்டனை தருவதில் இருந்து தனது கைகளை கட்டியிருப்பதாக தெளிவுப்படுத்தினார். அதாவது "அமெரிக்க அதிபர் அலுவலகத்திற்கு வழங்கப்படும் சட்டப் பாதுகாப்புகள்தான் அசாதாரணமானவை, அலுவலகத்தில் இருப்பவருக்கு அல்ல" என்று நீதிபதி கூறினார்.

முன்னதாக தீர்ப்புக்கு முன்பு பேசிய மாவட்ட வழக்கறிஞர் ஜோஷ் ஸ்டீங்லாஸ், டிரம்ப் தனது நடத்தையால் சட்டத்தின் ஆட்சிக்கு தீங்கு விளைவிக்கிறார் என்றார். தண்டனைக்கு முன்னதாக நன்னடத்தை அறிக்கைக்காக டிரம்பை நேர்காணல் செய்த நன்னடத்தை அதிகாரி, டிரம்ப் “தன்னை சட்டத்திற்கு மேலே பார்க்கிறார்” என்று எழுதியிருந்தார் என்றும் வழக்கறிஞர் ஜோஷ் ஸ்டீங்லாஸ் கூறினார். மேலும் தனது குற்ற நடத்தைக்கு எந்த விதமான வருத்தத்தையும் வெளிப்படுத்துவதற்குப் பதிலாக, டிரம்ப் நீதிமன்ற தீர்ப்பை நிராகரிக்க மற்றவர்களை ஊக்குவித்தார் என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.

முன்னதாக தீர்ப்புக்கு முன்பு பேசிய மாவட்ட வழக்கறிஞர் ஜோஷ் ஸ்டீங்லாஸ், டிரம்ப் தனது நடத்தையால் சட்டத்தின் ஆட்சிக்கு தீங்கு விளைவிக்கிறார் என்றார். தண்டனைக்கு முன்னதாக நன்னடத்தை அறிக்கைக்காக டிரம்பை நேர்காணல் செய்த நன்னடத்தை அதிகாரி, டிரம்ப் “தன்னை சட்டத்திற்கு மேலே பார்க்கிறார்” என்று எழுதியிருந்தார் என்றும் வழக்கறிஞர் ஜோஷ் ஸ்டீங்லாஸ் கூறினார். மேலும் தனது குற்ற நடத்தைக்கு எந்த விதமான வருத்தத்தையும் வெளிப்படுத்துவதற்குப் பதிலாக, டிரம்ப் நீதிமன்ற தீர்ப்பை நிராகரிக்க மற்றவர்களை ஊக்குவித்தார் என்றுமூ குற்றம்சாட்டியிருந்தார்.

இறுதியாக டொனால்டு டிரம்ப், அமெரிக்க அதிபராக பதவியேற்பதில் எந்த தடையும் இல்லை.. எல்லா தடைகளும் விலகி விட்டது. ஆனால் டிரம்ப் ஒரு குற்றவாளி என்ற அந்தஸ்துடனேயே அதிபராக பதவியேற்க உள்ளார். அதேநேரம் இந்த டிரம்ப் தன்னை குற்றவாளி என்று அறிவித்ததை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வார் என்றே அவரது வழக்கறிஞர்கள் கூறினார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+