“சிவாண்ணா உங்ககிட்ட வந்து பேசுவாரு” சிவராஜ்குமாருக்கு நடந்த ஆபரேஷன் சக்சஸ்.. உருக்கமாக பேசிய மனைவி!
வாஷிங்டன்: கன்னட நடிகர் சிவராஜ் குமாருக்கு அமெரிக்காவில் நடைபெற்ற அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. அவருக்கு சிறுநீர்ப்பை அகற்றப்பட்டு, செயற்கை சிறுநீர்ப்பை பொருத்தப்பட்டு, அவர் சீரான உடல்நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவராஜ்குமாரின் மனைவி, உருக்கமான வீடியோவை வெளியிட்டுள்ளார்.
கன்னட சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் சிவராஜ் குமார். 125 படங்களுக்கு மேல் நடித்து, கன்னட ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்றவர். தமிழில் ரஜினிகாந்த்துன் 'ஜெயிலர்’ படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் நடிகர் சிவராஜ் குமார் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனக்கு உடல்நல பிரச்சனை இருப்பதாகவும், அதற்காக அமெரிக்கா சென்று சிகிச்சை பெற இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்த தகவல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மருத்துவர்களின் அறிவுரைப்படி, சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார் சிவராஜ் குமார். அங்கு மியாமியில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனையில் அவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது. சிவராஜ்குமாருக்கு சிறுநீர்ப்பை அகற்றப்பட்டு செயற்கை சிறுநீர்ப்பை பொருத்தப்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது சீரான நிலையில் நலமுடன் இருப்பதாகவும், விரைவில் தனது அன்றாட வேலைகளில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கிறோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
வீடியோவில் பேசியுள்ள சிவராஜ்குமாரின் மனைவி கீதா, “சிவராஜ்குமாருக்கு நல்லபடியாக ஆபரேஷன் முடிந்துள்ளது. அவர் இப்போது ஐ.சி.யூவுக்கு மாற்றப்பட்டுள்ளார். 3-4 நாட்களில் சிவராஜ்குமார் உடல்நிலை தேறி உங்களிடம் நிச்சயம் பேசுவார். உங்கள் அன்புக்கு என்றென்றைக்கும் கடமைப்பட்டிருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக அமெரிக்காவிற்கு செல்வதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய சிவராஜ் குமார், “நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். 24ஆம் தேதி எனக்கு அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது. அதனைத்தொடர்ந்து ஒரு மாதத்தில் ஜனவரி 26ஆம் தேதி இந்தியா திரும்புகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications