‛ஆப்பிள்' வைத்த ஆப்பு.. அடிவாங்கும் சேல்ஸ் பிரிவு.. ஊழியர்களை திடீரென வீட்டுக்கு அனுப்பும் நிறுவனம்
வாஷிங்டன்: முன்னணி நிறுவனமான ‛ஆப்பிள்' நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. அதன்படி ஆப்பிள் நிறுவனம் தனது சேல்ஸ் பிரிவில் பணியாற்றும் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்து உள்ளது.
தற்போது பல்வேறு ஐடி நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றனர். டிசிஎஸ், காக்னிசண்ட், மெட்டா, மைக்ரோசாப்ட் என்று பல்வேறு நிறுவனங்களை உதாரணமாக கூறலாம்.

ஏஐ பயன்பாட்டை அதிகரிப்பது, சிக்கன நடவடிக்கை என்ற அடிப்படையில் ஐடி நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி வருகிறது. அந்த வரிசையில் தற்போது ‛ஆப்பிள்' நிறுவனம் இணைந்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம் சேல்ஸ் பிரிவில் பணியாற்றும் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையை எடுத்துள்ளது. இதனை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது. அதில் ஆப்பிள் நிறுவனம் தனது சேல்ஸ் பிரிவில் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. இந்த பணி நீக்கங்கள் என்பது மிக குறைந்த அளவில் மட்டுமே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பணி நீக்கம் செய்யப்படுவோர் புதிய பணிகளுக்கு விண்ணப்பம் செய்யலாம் என ஆப்பிள் அறிவித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி தற்போதைய பணி நீக்கம் என்பது சேல்ஸ் பிரிவில் மட்டும் தான் நடக்கிறது. மற்ற பிரிவுகளில் தொடர்ந்து பணி நியமனம் என்பது இருக்கும் என்றும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போதைய பணி நீக்க நடவடிக்கையின்படி ஆப்பிள் நிறுவனத்தில் பெரிய வணிக வாடிக்கையாளர்கள், கல்வி நிறுவவனங்கள் மற்றும் அரசு துறை சார்ந்த பிரிவுகளில் பணியாற்றும் அக்கவுண்ட் மேனேஜர்கள் உள்பட சேல்ஸ் பிரிவு பணியாளர்கள் பாதிக்கப்பட உள்ளனர். அதேபோல் Apple Briefing Centre-ரில் பணியாற்றுவோரும் பாதிக்கப்பட உள்ளனர்.
முன்னதாக உலகம் முழுவதும் உள்ள பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தற்போது தங்களின் நிறுவனத்தை மறுகட்டமைப்பு செய்வதாக கூறி வருகின்றன. செலவு குறைப்பு, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. அமெரிக்காவை எடுத்து கொண்டால் தற்போது பல்வேறு நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுத்துள்ளது. ஆப்பிளும் அமெரிக்க நிறுவனம் தான்.
இதற்கு முன்பு வெரிசோன், சினோப்சிஸ் மற்றும் ஐபிஎம் போன்ற நிறுவனங்கள் தங்களின் மெதுவான வளர்ச்சி மற்றும் செலவு குறைப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் ஆட்களை குறைக்கும் பணியில் ஈடுபட்டது. அந்த வரிசையில் தற்போது ஆப்பிள் நிறுவனமும் இணைந்துள்ளது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications