6 லட்சம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் பிரபல நிறுவனம்.. AI மட்டுமில்லை Robots வைத்த பெரிய ஆப்பு
வாஷிங்டன்: ஐடி துறையில் ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு என்பது ஊழியர்களின் வேலையை பறித்து வருகிறது. AI காரணமாக கொத்து கொத்தாக ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். அதேபோல் அமேசான் நிறுவனமும் ஏஐ- பயன்பாட்டால் 15 சதவீதம் எச்ஆர்-களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் அடுத்தக்கட்டமாக தான் 6 லட்சம் ஊழியர்களை பணி நீக்கிவிட்டு அதற்கு பதிலாக ரோபாக்களை பயன்படுத்த அமேசான் திட்டமிட்டு வருவதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு ஊழியர்களின் பணிகளை பறித்து வருகிறது. குறிப்பாக ஏஐ புரட்சி ஐடி துறையை ஆட்டிப்படைத்து வருகிறது. ஐடி துறையில் பணியாற்றும் ஊழியர்கள் ஏஐ-யால் அதிர்ச்சியடைந்து வருகின்றனர்.

மனிதர்கள் செய்யும் பணியை ஏஐ விரைவாகவும், துல்லியமாகவும் செய்வதால் ஐடி நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.
அதன்படி டிசிஎஸ், அக்சென்ச்சர், மைக்ரோசாஃப்ட், அமேசான் உள்பட பல நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. அமேசானை எடுத்து கொண்டால் எச்ஆர் பிரிவில் பணியாற்றும் 15 சதவீதம் பேரை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இதற்கு ஆட்டோமேஷன் தொழில்நுட்பத்தை அதிகமாக பயன்படுத்த வேண்டும் என்ற முடிவு தான் காரணமாகும்.
இதன்மூலம் அமேசான் நிறுவனத்துக்கு 12.6 பில்லியன் அமெரிக்க டாலர் வரை சேமிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இப்படியான சூழலில் தான் தற்போது இன்னொரு திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அது என்னவென்றால் அமேசான் நிறுவனம் அடுத்த 2 ஆண்டுகளில் 6 லட்சம் பேரை பணியில் இருந்து நீக்க திட்டமிட்டுள்ளது. இவர்களுக்கு பதிலாக ரோபோக்களை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அமேசான் நிறுவனத்தின் Internal Document-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் ‛‛2027 ம் ஆண்டுக்குள் அமெரிக்காவில் 6 லட்சம் வேலைகளில் ரோபோக்களை அறிமுகம் செய்ய வேண்டும். இது நிறுவனத்தின் ஆட்டோமேஷன் தொழில்நுட்ப பயன்பாட்டின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட உள்ளது. இதன்மூலம் பொருட்களை எடுத்து பாக்கெட் செய்யும் பணிக்கு புதிய மெஷின்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இதன்மூலம் வார்ஹவுசில் 1,60,000 பணிகள் காலியாகும். மேலும் நிறுவனத்தில் வேலை செய்யும் மனிதர்களுக்கு பதில் 75 சதவீத வரை ரோபோக்களை பயன்படுத்த வேண்டும். இதன்மூலம் நிறுவனத்துக்கு 12.6 பில்லியன் அமெரிக்க டாலர் மிச்சமாகும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் வரும் 2027 ம் ஆண்டுக்குள் அமேசான் நிறுவனத்தில் இருந்து 6 லட்சம் பேர் பணியை இழக்கலாம் என்று கூறப்படுகிறது. இது நடக்கும் பட்சத்தில் அமெரிக்காவின் கார்ப்பரேட் வரலாற்றில் ஒரே நேரத்தில் அதிகமான ஊழியர்களை பணி நீக்கம் செய்த பெயரை அமேசான் பெறும்.
இதுபற்றி அமேசான் சார்பில், ‛‛இது ‛மாஸ்' பணி நீக்கம் அல்ல. இது நிறுவனத்தின் திறனை மேம்படுத்தும் நடவடிக்கையாகும்'' என நியாயப்படுத்தி உ.ள்ளது. இதனால் அமேசான் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஏனென்றால் அமெரிக்காவில் நவீன ரோபோக்கள் தற்போது பணியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. புரோட்டியஸ் மற்றும் சீக்வோயா போன்ற நவீன ரோபோக்கள் அமேசான் நிறுவனத்தில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த ரோபோக்கள் சென்சார்கள், கேமராக்கள் மற்றும் AI கட்டளையில் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த ரோபோக்கள் மனிதர்கள் யாருடைய உதவியும் இல்லாமல் பார்சல்களை நகர்த்துவது, தூக்குவது, வரிசைப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டுவருகின்றன. இதுதான் அமேசான் ஊழியர்களை கதிகலங்க வைத்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications