"உளவு" ஆவணங்கள் லீக்.. ஈரானை மொத்தமாக காலி செய்ய இஸ்ரேல் போட்டுள்ள பகீர் பிளான்.. அமெரிக்கா ஷாக்
வாஷிங்டன்: இஸ்ரேல் நாட்டிற்கும் ஈரானுக்கும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது, இது போராக வெடித்தால் அது சர்வதேச அளவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும். இதற்கிடையே ஈரான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் போட்டுள்ள திட்டங்கள் என்று இரு அதிமுக்கிய உளவு ஆவணங்கள் வெளியாகியுள்ளன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்தே வருகிறது. இப்போது தான் ஹமாஸ் தலைவர் சின்வாரை இஸ்ரேல் கொன்றது. அதேநேரம் பணைய கைதிகளை ஹமாஸ்விடுவிக்கும் வரை போர் தொடரும் என்று இஸ்ரேல் திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.

மறுபுறம் இஸ்ரேல் ஈரான் இடையேயான பதற்றமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே மோதல் வெடித்தால் அது நிச்சயம் சர்வதேச அளவில் பேரழிவைத் தரும். இதனால் உலக நாடுகள் இதை உற்றுக் கவனித்து வருகின்றன.
லீக் ஆன ஆவணங்கள்: இதற்கிடையே ஈரான் மீது எப்படித் தாக்குதல் நடத்தலாம் என்பது குறித்த இஸ்ரேல் திட்டம் பற்றிய அமெரிக்க உளவுத்துறையின் இரு ஆவணங்கள் இப்போது லீக் ஆகியுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. நேஷனல் ஜியோஸ்பேஷியல் இன்டெலிஜென்ஸ் ஏஜென்சியின் இந்த ஆவணங்களில் உள்ள தகவல்கள் நமக்கு பகீர் கிளப்புவதாகவே இருக்கிறது.
பூமியை சுற்றி வரும் அமெரிக்க உளவு செயற்கைக்கோள்களால் சேகரிக்கப்பட்ட படங்களை ஆய்வு செய்து இந்த உளவு பிரிவு எச்சரிக்கைகளை வழங்கும். அதன்படி வழங்கப்பட்ட எச்சரிக்கை ஆவணங்களே இப்போது லீக் ஆகியுள்ளன.
பகீர்: அதில் ஈரான் மீதான தாக்குதல் நடத்த இஸ்ரேல் போட்டு வைத்திருக்கும் திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் ஹிஸ்புல்லா தலைவரைக் கொன்றதாக இஸ்ரேல் மீது ஈரான் சரமாரியான ஏவுகணை தாக்குதலை நடத்தி இருந்தது. அதற்குப் பதிலடியாகவே ஈரான் மீது இந்தத் தாக்குதலை நடத்த இஸ்ரேல் திட்டமிட்டு உள்ளது.
அதில் ஒரு ஆவணத்தில் ஈரான் மீது இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் இதற்காகப் பயிற்சிகளையும் நடத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதற்காக இஸ்ரேல் விமானப்படை தயாராகி வருவதாகக் கூறப்பட்டுள்ளது. அடுத்த ஆவணத்தில் ஈரான் மீது தாக்குதல் நடத்த ஏதுவாக இஸ்ரேல் எப்படி தனது நாட்டு ஆயுதங்களைத் திட்டம் போட்டு நகர்த்துகிறது என்பது விளக்கப்பட்டுள்ளது.
இந்த ஆவணங்களை வைத்துப் பார்க்கும் போது ஈரான் மீது இஸ்ரேல் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம்.. அதேநேரம் இதில் இஸ்ரேலின் முழு திட்டம் என்னவாக இருக்கும் என்பது குறித்து எந்தவொரு தகவலும் இல்லை.
அமெரிக்கா ஷாக்: அமெரிக்காவின் அதிமுக்கிய ஆவணம் இப்படி இணையத்தில் லீக் ஆனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணையில் கீழ்நிலையில் பணியாற்றும் அந்நாட்டின் அரசு ஊழியர் ஒருவரே இந்த ஆவணங்களை போட்டோவாக எடுத்து லீக் செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்த ஆவணம் எப்படி லீக் ஆனது, வேறு ஆவணங்கள் லீக் ஆகும் வாய்ப்பு இருக்கிறதா என்பதைக் கண்டறிய அமெரிக்க பாதுகாப்புப் படை பென்டகன், அந்நாட்டுப் புலனாய்வு அமைப்பு இணைந்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இந்த உளவுத் துறை ஆவணங்கள் லீக் ஆகியுள்ள நிலையில், இது தொடர்பாக அந்நாட்டின் அதிபர் ஜோ பைடனிடமும் கேட்கப்பட்டது. ஈரான் மீதும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் போட்டுள்ள திட்டம் குறித்து உங்களுக்குத் தெரியுமா என்று கேட்கப்பட்டபோது, "ஆம், தெரியும்" என்று மட்டும் பைடன் பதிலளித்தார். அதேநேரம் கூடுதலாக எந்தவொரு தகவலையும் அவர் பகிரவில்லை.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications