டிரம்பிற்கு அடுத்தடுத்து விழும் அடி! அதிகாரத்தை மீறி போறார்.. வரி விதிப்பை நிறுத்திய அமெரிக்க கோர்ட்
வாஷிங்டன்: டொனால்டு டிரம்பின் வரி விதிப்புக்கு தடை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டொனால்டு டிரம்ப் அதிகாரத்தை மீறி செயல்படுவதாகவும் நீதிபதிகள் கூறியுள்ளனர். டாஜ் துறையில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவித்தது டிரம்புக்கு பெரிய ஷாக் ஆக அமைந்து இருந்த நிலையில், நீதிமன்ற தீர்ப்பும் டிரம்ப் நிர்வாகத்திற்கு பின்னடைவாக அமைந்து இருக்கிறது. இதனால் ஒரே நாளில் அடுத்தடுத்த இரண்டு பின்னடவுகளை டிரம்ப் எதிர்கொண்டுள்ளார்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அமெரிக்க நலன்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறி வரும் டிரம்ப், அதிரடியாக வரி விதிப்புகளை அமல் படுத்தி வருகிறார்.

அதிகாரத்தை மீறி செயல்படுகிறார்
அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு வரி விதிப்பு, பரஸ்பர வரி விதிப்பு என பல கெடுபிடிகளை டிரம்ப் மேற்கொண்டு வந்தார். அதேபோல, அமெரிக்காவில் வாங்குவதை விட அதிகம் விற்கும் நிறுவனங்களுக்கு எதிராகவும் டிரம்ப் வரி விதித்தார். டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்யும் அமெரிக்க நிறுவனங்கள், கடுமையான பாதிப்பை சந்தித்தன.
எனவே டிரம்பின் உத்தரவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தன. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், டொனால்டு டிரம்பின் வரி விதிப்புக்கு தடை விதித்துள்ளது. டொனால்டு டிரம்ப் அதிகாரத்தை மீறி செயல்படுவதாகவும் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு கூறியுள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவை தொடர்ந்து மேல் முறையீட்டுக்கான நோட்டீசையும் நீதிமன்ற அதிகார வரம்பு குறித்து கேள்வியும் எழுப்பியுள்ளது.
டிரம்புக்கு அடுத்தடுத்து பின்னடைவு
டாஜ் துறையில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவித்ததது டிரம்புக்கு பெரிய ஷாக் ஆக அமைந்து இருந்தது. எலான் மஸ்க்கின் இந்த அறிவிப்பு வெளியான நிலையில், நீதிமன்ற தீர்ப்பும் டிரம்ப் நிர்வாகத்திற்கு பின்னடைவாக அமைந்து இருக்கிறது. ஒரே நாளில் அடுத்தடுத்த இரண்டு பின்னடவுகளை டிரம்ப் எதிர்கொண்டுள்ளார்.
முன்னதாக அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்று அதிபராக பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை டிரம்ப் மேற்கொண்டு வருகிறார். அமெரிக்க அதிபராக பொறுப்பெற்ற பிறகு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசிய டிரம்ப், இந்தியாவை வரிகளின் அரசன் என்றெல்லாம் சாடினார். அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா 100 சதவீத வரி விதிக்கிறது.
டிரம்பின் அதிரடி வரி விதிப்பு
அதேபோல பல்வேறு நாடுகளும் அதிக வரியை விதிக்கின்றன. இது முற்றிலும் நியாயமற்ற ஒன்றாக இருக்கிறது. குறிப்பாக ஆட்டோ மொபைல் பொருட்களுக்க்கு 100 சதவீதத்திற்கு அதிகமான வரியை இந்தியா விதிக்கிறது. இந்தியா மட்டும் இன்றி சீனா, பிரேசில், மெக்சிகோ, ஐரோப்பிய யூனியன், கனடா ஆகிய நாடுகளும் அதிக வரி விதிக்கிறது. மற்ற நாடுகள் எவ்வளவு வரி விதித்து வருகிறதோ அதே அளவுக்கு அமெரிக்காவும் வரி விதிக்கும்" எனக் கூறியிருந்தார்.
பின்னர் எந்தெந்த நாடுகள் மீது எவ்வளவு வரி விதிக்கப்படும் என்ற நீண்ட பட்டியலையும் டிரம்ப் வெளியிட்டார். இதில் இந்தியாவுக்கு 27 சதவீதம் வரி விதிக்கப்பட்டு இருந்தது. சீனா பதிலடியாக வரி விதித்ததால் அந்த நாட்டிற்கு எதிராக மட்டும் பரஸ்பர வரியை கூட்டிக்கொண்டே சென்றார். டிரம்பின் வரி விதிப்பால் சர்வதேச அளவில் பொருளாதார யுத்தம் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, சீனாவை தவிர பிற நாடுகள் மீதான வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்தார்.
பேச்சுவார்த்தைக்கு வந்து இருப்பதால் இந்த முடிவை எடுத்ததாக டிரம்ப் கூறியிருந்தார். இந்த நிலையில்தான், டிரம்ப் வரி விதிப்புக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றத்தத்தில் தொடரபட்ட வழக்கில், மேற்கூறிய அதிரடி உத்தரவு வந்துள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கைகள் வரம்பு மீறிய செயல் எனவும் காட்டமாக நீதிபதிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications