பஸ், ரயிலை விடுங்க! விமானத்திலேயே 6 வருடமாக டிக்கெட் இன்றி பயணித்த நபர்! எப்படி தெரியுமா?
வாஷிங்டன்: பேருந்து, ரயில்களில் கூட டிக்கெட் எடுக்காமல் போக முடியாத சூழலில், அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் 6 வருடங்களாக 120 முறை விமான நிறுவனங்களுக்கு விபூதி அடித்து இருக்கிறார். டிக்கெட் எதுவும் எடுக்காமல் ஆறு வருடமாக பயணித்த அந்த நபர் கையும் களவுமாக சிக்கிய நிலையில் தற்போது கம்பி எண்ண தயாராக இருக்கிறார்.
அமெரிக்க நாட்டை சேர்ந்தவர் திரோன் அலெக்சாண்டர். 35 வயதான திரோன் அலெக்சாண்டர் கடந்த 2018 முதல் 2024 வரை, 120 க்கும் மேற்பட்ட விமானங்களில் இலவசமாக பயணித்துள்ளார். விமான நிறுவன ஊழியர்களுக்கான பயணச் சலுகைகளைப் பயன்படுத்தி, விமானப் பணிக்குழுவினர் மட்டுமே பயன்படுத்தக்கூடிய முன்பதிவு முறையை அணுகியுள்ளார்.

30 ஆண்டுகள் ஜெயில்
இதன் மூலம் கிடைக்கும் சலுகையை வைத்துக்கொண்டு அமெரிக்காவின் முக்கிய விமான நிறுவனங்களில் இலவசமாகப் பயணம் செய்துள்ளார். விமானத் துறையில் நீண்டகாலமாக ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சலுகையை பயன்படுத்தி திரேன் அலெக்ஸ் சாண்டர் மோசடியில் ஈடுபட்டுள்ளார். 2015 நவம்பர் முதல் விமான நிறுவனத்தில் பணிபுரிந்தாலும் இந்த சலுகையை பெறும் வேலையில் ஈடுபடவில்லை.
விமான சிப்பதியாகவோ, விமானியாகவோ அவர் பணியாற்றவில்லை. பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்று சொல்வார்கள் அதேபோல, திரேன் அலெக்ஸஃபாண்டர் கையும் களவுமாக சிக்கினார். இதையடுத்து அவருக்கு எதிரான வழக்குகள் அந்நாட்டு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கின் விசாரணையில் திரேன் குற்ரவாளி என்று தீர்ப்பளித்த அமெரிக்க நீதிமன்றம், 20+10 என மொத்தம் 30 அண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
120 இலவச சேவைகள்
இந்திய மதிப்பில் ரூ.12.5 கோடி அபராதமாக அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்டுள்ள கூறியிருப்பதாவது: அலெக்சாண்டர் மூன்று விமான நிறுவனங்களில் விமான ஊழியர் போல் நடித்துள்ளார். இறுதியில், அலெக்சாண்டர் விமானப் பணிப்பெண் என்று பொய்யாகக் கூறி 120க்கும் மேற்பட்ட இலவச விமானங்களை முன்பதிவு செய்துள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்படி பயணம் செய்ய முடிந்தது
விமான பயணத்தின் பாதுகாப்பு குறித்த கவலைகள் எழுந்துள்ள நிலையில், எப்படி இத்தனை மாதங்கள் அவர் உரிய ஆவணங்கள் இன்றி பயணம் செய்ய முடிந்தது என்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அமெரிக்க போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் (TSA), கூறுகையில், " நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு திருப்தி தெரிவித்தது.
திரோன் அலெக்சாண்டர் மோசடியாக விமானப் பயணத்திற்கான அனுமதிச் சீட்டுகளைப் பெற்றிருந்தாலும், அவர் அனைத்து TSA பாதுகாப்பு நெறிமுறைகளையும் முறையாகப் பின்பற்றியுள்ளார். அடையாளச் சரிபார்ப்பு மற்றும் உடல் பரிசோதனை உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளையும் அவர் கடந்து சென்றுள்ளார். மேலும் அவர் எந்த நேரத்திலும் பயணிகளுக்கு நேரடி அச்சுறுத்தலாக இருக்கவில்லை" என்று தெரிவித்துள்ளது.
-
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
இந்தியாவுக்கு சிக்கல் தொடரும்.. ஹார்முஸ் திறக்கப்பட்டாலும் கூட எல்லா பிரச்சனையும் உடனே தீராது! -
அடுத்த 60 நாட்கள் ரொம்ப முக்கியம்.. அமெரிக்கா ஈரான் போரில் மாற்றம்! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
100 நாட்களை தாண்டிய அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்.. ஈரானை இன்னும் வீழ்த்த முடியாத ரகசியம் என்ன? -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்!












Click it and Unblock the Notifications