2561 கோடி கொடுத்தும் பலனில்லை.. டிரம்ப் கூட கைவிட்டுவிட்டார்.. வசமாக சிக்கிய மார்க் ஜுக்கர்பெர்க்
வாஷிங்டன்: பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட நிறுவனங்களின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்திற்கு எதிராக இப்போது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில் பாதகமாகத் தீர்ப்பு வந்தால் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் நிறுவனங்களை மார்க் ஜுக்கர்பெர்க் விற்க வேண்டி இருக்கும். இதற்கிடையே வழக்கை முடித்துக் கொள்ள மார்க் இந்திய மதிப்பில் சுமார் ரூ.2561 கோடி கொடுக்க முன்வந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இப்போது சமூக வலைத்தள உலகில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிறுவனமாக மெட்டா இருக்கிறது. இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ்அப் என முக்கியமான சமூக வலைத்தளங்கள் எல்லாமே இவர்கள் வசம் தான் இருக்கிறது. இருப்பினும், முறைகேடாகப் போட்டியாளர்களை வாங்கியதாகக் கூறி மெட்டா நிறுவனம் மீது அமெரிக்க டிரேட் கமிஷன் வழக்கு தொடர்ந்துள்ளது.

1 பில்லியன் டாலர்
இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாகச் சில முக்கிய தகவல்களை வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டுள்ளது. அதாவது அமெரிக்க பெடரல் டிரேட் கமிஷன் தனது நிறுவனத்தின் மீது தொடர்ந்த வழக்கை முடித்துக் கொள்ளக் கடந்த மார்ச் மாதம் அமெரிக்க டிரேட் கமிஷனின் தலைவரை மார்க் ஜுக்கர்பெர்க் அணுகி உள்ளார். இதற்காக 50 மில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.3852 கோடி) கொடுக்க முன்வந்ததாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது. விசாரணை நெருங்கிய நிலையில் இதை $1 பில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2561 கோடி) ஆக உயர்த்தியிருக்கிறார்.
ஏற்க மறுப்பு
அமெரிக்காவில் இதுபோன்ற வழக்குகளில் அவுட் ஆப் கோர்ட் மூலம் வழக்கை முடித்துக் கொள்வது சட்டவிரோதம் இல்லை. ஆனால், அமெரிக்க டிரேட் கமிஷன் இந்த வழக்கில் 30 பில்லியன் டாலர் கோரிய நிலையில், ஜூக்கர்பெர்க் 1 பில்லியன் மட்டுமே தர முன்வந்துள்ளார். இதனால் டிரேட் கமிஷன் தலைவர் ஆண்ட்ரூ பெர்குசன் மார்க் ஜூக்கர்பெர்க்கின் சலுகையை நிராகரித்தார். 18 பில்லியன் டாலருக்கும் குறைவான எந்தவொரு அபராதத் தொகையையும் பரிசீலிக்கக் கூட பெர்குசன் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது..
டிரம்ப்பிடம் கோரிக்கை
டிரேட் கமிஷன் விசாரணை நடத்தினால் அது தனக்குப் பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் விசாரணையைத் தடுக்கத் தன்னால் முடிந்த அனைத்தையும் ஜூக்கர்பெர்க் செய்ததாக அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவு தனக்குக் கிடைக்கும் என்று ஜுக்கர்பெர்க் நம்பியிருந்தார். வழக்கு விசாரணைக்குச் சில வாரங்களுக்கு முன்பே டிரம்பை தொடர்பு கொண்ட மார்க் ஜூக்கபெர்க் இந்த வழக்கில் தலையிட்டு உதவுமாறு கோரியிருந்தார்.
மேலும், டொனால்ட் டிரம்புடன் நெருக்கமான உறவை உருவாக்க ஜுக்கர்பெர்க் தொடர்ந்து முயன்று வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காகவே டிரம்பின் பதவியேற்புக்கு மெட்டா நிறுவனம் 1 மில்லியன் டாலர் நன்கொடை அளித்தது. இருப்பினும், வழக்கை நிறுத்த டிரம்ப் தரப்பு உதவவில்லை.
வழக்கு விசாரணை
இதையடுத்து வழக்கு விசாரணை கடந்த திங்கள்கிழமை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராக மார்க் ஜுக்கர்பெர்க் தயங்கினார். இருப்பினும், அமெரிக்க டிரேட் கமிஷன் வலியுறுத்தியதால் வேறு வழியில்லாமல் ஆஜராகி வருகிறார். ஒவ்வொரு முறையும் வழக்கு விசாரணையில் மார்க் ஜுக்கர்பெர்க் கூறும் கருத்துகள் முக்கியத்துவம் பெறுகிறது.

சரமாரி குற்றச்சாட்டு
அமெரிக்க பெடரல் கமிஷன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் டேனியல் மேத்சன் தான் முன்வைத்த வாதத்தில், "பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் என எல்லாம் மெட்டா வசம் இருக்கிறது. யூசர்களுக்கு வேறு சாய்ஸ் இல்லாமல் போய்விட்டது. எதிர்காலத்தில் தனக்குப் போட்டியாக வந்துவிடுமோ என அஞ்சி வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் நிறுவனங்களை மெட்டா வாங்கியிருக்கிறது. இதுவே அவர்களின் ஆதிக்கத்திற்குக் காரணம்" என்றார். இதன் மூலம் மெட்டா நிறுவனத்திற்குக் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு பவர் குவிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்க மார்க் யூசர்களின் அனுபவத்தை மேம்படுத்தவே மற்ற நிறுவனங்களை வாங்கியதாகக் குறிப்பிட்டார். மேலும், ஒருவரை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தொடர்பில் வைத்திருப்பதே தங்களின் அடிப்படை நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மார்க் ஜூக்கர்பெர்க்கிடம் விசாரணை நடத்தப்பட்டது.
சமூக வலைத்தளங்களில் மெட்டா நிறுவனத்திற்குப் போட்டி என்பதே இல்லாமல் இருப்பதாக வழக்கறிஞர் குறிப்பிட்ட நிலையில், அதற்கும் மெட்டா நிறுவனம் மறுப்பு தெரிவித்து. சமூக வலைத்தளம் என்பதை அரசு வரையறைக்கும் முறையே தவறானது என குறிப்பிட்ட மெட்டா தரப்பு, டிக் டாக், ஸ்னாப்சாட், யூடியூப் மற்றும் ஐமெசேஜ் என பல போட்டிகள் இருப்பதாகத் தெரிவித்தது.

சிக்கலாக மாறிய மெயில்
இந்த வழக்கைப் பொறுத்தவரை மார்க் ஜூக்கர்பெர்க் கடந்த 2012ல் தனது ஊழியர்களுக்கு அனுப்பிய மெயில் தான் இப்போது அவருக்கு சிக்கலாக மாறியிருக்கிறது. இன்ஸ்டாகிராமை வாங்குவதன் மூலம் ஒரு போட்டியாளரைக் காலி செய்துவிடலாம் என ஒரு மெயிலிலும் பேஸ்புக் கேமரா ஆப்ஷனில் இன்ஸ்டாகிராம் போல போதுமான வசதிகள் இல்லை என்று மற்றொரு மெயிலிலும் மார்க் குறிப்பிட்டு இருந்தார். இதுவே பிரதான ஆதாரமாக அமெரிக்க டிரேட் கமிஷன் முன்வைத்தது.
இந்த மெயில்கள் உண்மைதான் என்ற போதிலும், தான் இந்த மெயில்களை அனுப்பக் காரணம் வேறு என்றும் டிரேட் கமிஷன் வேறு விதமாக மெயில்களை புரிந்து கொள்வதாகவும் மார்க் தரப்பு தெரிவித்தது. மேலும், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப்பை வாங்கும் முடிவுகளுக்கு அரசுத் தரப்பு ஒப்புதல் அளித்துள்ளதையும் சுட்டிக்காட்டினர். யூசர்களின் அனுபவத்தை மேம்படுத்தவே இரு செயலிகளையும் வாங்கியதாக மார்க் தரப்பு தெரிவித்தது.
பரபரக்கும் விசாரணை
இதைத் திட்டவட்டமாக ஏற்க மறுத்த டிரேட் கமிஷன், இன்ஸ்டாகிராமை வாங்கி அதன் வளர்ச்சியே வேண்டும் என்றே மெதுவாக்கியதாகவும் இதன் மூலம் பேஸ்புக் தனது ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொண்டதாகவும் அமெரிக்க பெடரல் டிரேட் கமிஷன் குற்றஞ்சாட்டியது. இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து சில வாரங்கள் வரை நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேஸ்புக் முன்னாள் சிஓஓ ஷெரில் சாண்ட்பெர்க், இன்ஸ்டாகிராம் இணை நிறுவனர் கெவின் சிஸ்ட்ரோம் ஆகியோரும் இந்த வழக்கில் விசாரிக்கப்பட உள்ளனர்.
தற்போது பேஸ்புக்கை விட இன்ஸ்டாகிராமில் இருந்து தான் மெட்டாவுக்கு அதிக வருவாய் வருகிறது. அப்படியிருக்கும் போது இந்த வழக்கில் மெட்டாவுக்கு எதிராக தீர்ப்பு வந்தால், அவர்கள் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் நிறுவனங்களை விற்க வேண்டி இருக்கும். அது மார்க் ஜூக்கர்பெர்க்கிற்கு பெரிய அடியாகக் கருதப்படும். மேலும், இது இதர டெக் நிறுவனங்களுக்கு வைக்கப்படும் செக் ஆகவே கருதப்படும்.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications